Friday, November 14, 2014

Amaranth கிச்சடி


                                                Amaranth Seeds
தேவையானவை:  
                               
Amaranth 1 கப்
தினை 1/4 கப்
பயத்தம்பருப்பு 1/4கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
வெங்காயம் 2
தக்காளி 2
பட்டாணி 1/2 கப்
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 4 பல்
தண்ணீர்  5 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:



Amaranth,தினை இரண்டையும்  தனித்தனியே எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு நான்கையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் Amaranth 3-1/2 தண்ணீர்.தினை ஒரு கப் தண்ணீர்,பயத்தம்பருப்பு,மஞ்சள் தூள் சேர்த்து  1/2 கப் தண்ணீர் சேர்த்து தனித்தனியாக வைத்து ( 5 விசில்) எடுக்கவும்.
நான்கைந்து விசில் விட்டும் Amaranth ல் தண்ணீர் இருக்கும்.அதை அப்படியே உபயோகிக்கலாம்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கியுள்ள தக்காளி, பட்டாணி ,இஞ்சி,பூண்டு வதக்கி குக்கரில் இருந்து எடுத்த Amaranth,தினை,பயத்தம்பருப்பு,தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
எல்லாம் ஒன்று  சேர்ந்து நன்றாக வெந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் அணைக்கவும்.
----------
முளைக்கீரை,தண்டுக்கீரை விதைகள் Amaranth என்று அழைக்கப்படுகிறது.
இதில் புரோட்டீன்,இரும்பு,சுண்ணாம்பு சத்துகள் அதிகமாக உள்ளன.

6 comments:

Avainayagan said...

Amaranth endraal Enna? (What is the Tamil name?) adhu engu kidaikkum?

Kanchana Radhakrishnan said...

தண்டுக்கீரை,முளைக்கீரை விதைகள் Amaranth என்று தமிழில் அழைக்கப்படுகிறது.
இது எல்லா Organic Stores ல் கிடைக்கிறது.இது ஒர் Gluten free grain/seed.வருகைக்கு நன்றி Viya Pathy.

ADHI VENKAT said...

அமர்நாத் என்றால் என்ன? என்று நினைத்துக் கொண்டே வந்தேன். இறுதியில் தெரிந்து கொண்டேன்.

சத்துள்ள குறிப்பு. பகிர்வுக்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Adhi.

கோமதி அரசு said...

அருமையான கிச்சடி நன்றி.

Kanchana Radhakrishnan said...


வருகைக்கு நன்றி
கோமதி அரசு

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...