தேவையானவை:
சௌசௌ 2
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
அரைக்க:
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
நிலக்கடலை 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 2
இஞ்சி ஒரு சிறிய துண்டு
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:
சௌசௌ வை தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்..
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை தண்ணீர் விடாமல் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
------
நறுக்கிய சௌசௌ துண்டுகளை சிறிது மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
microwave லும் வைத்து வேகவைக்கலாம்.microwave oven ல் நறுக்கிய துண்டுகளை ஒரு bowl ல் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து ' H 'ல் ஐந்து நிமிடம் வைத்தால் போதும்.வெந்துவிடும்.
வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வேகவைத்த சௌசௌ துண்டுகளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.அரைத்து வைத்துள்ள பொடியை தேவையான அளவு தூவி நன்கு கிளறி இறக்கவும்.
(இந்த பொடியை தண்ணீர் விடாமல் அரைப்பதால் இரண்டு,மூன்று நாள் வைத்துக்கொள்ளலாம்,எல்லாப் பொரியலுக்கும் உபயோகப்படுத்தலாம்.)
சௌசௌ பொரியல் சற்றே மாறுபட்ட வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.
4 comments:
நல்ல குறிப்பு. வேர்க்கடலை சேர்ப்பதால் ருசி அருமை. செய்து பார்த்து விட்டேன்:)! நன்றி.
வருகைக்கும் செய்துபார்த்ததற்கும் நன்றி ராமலஷ்மி
Super mixing congrats
Super mixing congrats
Post a Comment