தேவையானவை:
கேழ்வரகு மாவு 2 கப்
உப்பு ஒரு சிட்டிகை
----
வேர்க்கடலை 1 கப்
கருப்பு எள் 1 கப்
வெல்லம் 1 1/2 கப் (பொடித்தது)
நெய் 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
கேழ்வரகு மாவை சிட்டிகை உப்பு தேவையான தண்ணீருடன் நன்றாக சப்பாத்தி மாவு போல
பிசைந்துகொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து பிசைந்த மாவை உருண்டைகளாக்கி
கையால் அடை போல தட்டி இருபுறமும் எண்ணைய் விட்டு சிவந்ததும் எடுக்கவும்.
அடை கொஞ்சம் ஆறியவுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு பொடி பண்ணவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
வேர்க்கடலையையும் கறுப்பு எள்ளையும் தனித்தனியாக வாணலியில் எண்ணைய் விடாமல் வறுத்து
வெல்லத்துடன் சேர்த்து மிக்சியில் பொடி பண்ணவும்..
இந்த பொடியுடன் கேழ்வரகு பொடியை சேர்க்கவும்.. சிறிது நெய் விட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
இது ஒரு வாரம் வரை கெடாது.
பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல சத்துள்ள சிற்றுண்டி.
4 comments:
புதுமையான லட்டாக இருக்கே!
செய்து பார்த்து விடுகிறேன்.
செய்து பாருங்கள்.மிகவும் ருசியாக இருக்கும்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.
சத்துள்ள உணவு..!
Thanks
இராஜராஜேஸ்வரி
Post a Comment