Monday, May 30, 2016

சாமை கிச்சடி



                                       
தேவையானவை:
                             
 சாமை 1 கப்
பயத்தம்பருப்பு 1/4கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
வெங்காயம் 2
தக்காளி 2
பட்டாணி 1/2 கப்
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 4 பல்
தண்ணீர்  4 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:



 சாமை,பயத்தம்பருப்பு  இரண்டையும்  தனித்தனியே எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு நான்கையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில்  சாமை யை  3 கப் தண்ணீரிலும் ,பயத்தம்பருப்பு,மஞ்சள் தூள் சேர்த்து  1 கப் தண்ணீர் வைத்து ( 5 விசில்) எடுக்கவும்.
.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கியுள்ள தக்காளி, பட்டாணி ,இஞ்சி,பூண்டு வதக்கி குக்கரில் இருந்து எடுத்த சாமை,பயத்தம்பருப்பு,தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
எல்லாம் ஒன்று  சேர்ந்து நன்றாக வெந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் அணைக்கவும்.

2 comments:

கோமதி அரசு said...

நன்றாக இருக்கிறது. சாமை அரிசி நேற்று வாங்கி வந்தேன். பொங்கல் செய்வேன். சாமை கிச்சடி செய்து விடுகிறேன் நாளை.
நன்றி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கோமதி அரசு.
செய்து பாருங்கள்.சுவையாக இருக்கும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...