தேவையானவை:
வரகு 1 கப்
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 2
பட்டாணி 1/4 கப்
காரட் 2
பீன்ஸ் 10
உருளைக்கிழங்கு 2
காலிஃபிளவர் 10 பூக்கள்
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
மசாலா தூள் 1 மேசைக்கரண்டி
புதினா சிறிதளவு
உப்பு, எண்ணெய் தேவையானது
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
லவங்கம் 4
சோம்பு 1 தேக்கரண்டி
ஏலக்காய் 2
-----------
செய்முறை:
வரகு அரிசியை 2 மணி நேரம் 2 கப் தண்ணீருடன் ஊறவைக்கவேண்டும்.
வெங்காயம்,காரட்,பீன்ஸ் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அடுப்பில் கடாய் வைத்து வெண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன் முறுவலாக வதக்கவும்..பச்சைமிளகாயை குறுக்கே வெட்டி சேர்த்து பின்னர் எல்லா காய்கறிகளையும் அதனுடன் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது,மசாலா தூள் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
குக்கரில் ஊறவைத்த வரகரிசியை (தண்ணீருடன்) வதக்கிய காய்கறி கலவையுடன் கலந்து புதினா,கொத்தமல்லித்தழை சேர்த்து 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வரகரிசியில் குறைவான மாவுச்சத்துதான்.பசைத்தன்மை அறவே இல்லாதது.கொழுப்பை அதிகமாக்காது.நல்ல கொழுப்பைக் கொண்டது.
அதனால் நீரிழிவும் இதயநோயும் வராமலிருக்க உதவும்..

No comments:
Post a Comment