Tuesday, September 27, 2016

தக்காளி சட்னி

தேவையானவை:

தக்காளி  10
மிளகாய் வற்றல்   5
சீரகம்  1 மேசைக்கரண்டி
பூண்டு 4 பல்
இஞ்சி ஒரு துண்டு
குடமிளகாய் 1
புளி   எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி

முந்திரிபருப்பு 6
கறிவேப்பிலை சிறிதளவு
புதினா சிறிதளவு
உப்பு தேவையானது
எண்ணெய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
-------
செய்முறை:


தக்காளியையும் குடமிளகாயையும் பொடியாக நறுக்கிக்கொண்டு எண்ணையில் நன்றாக வதக்கிகொள்ளவும்.
மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு,சீரகம்,பெருங்காயத்தூள் மூன்றையும் த்னியே வறுத்துக்கொள்ளவும்.
பூண்டு,இஞ்சி இரண்டையும் எண்ணெயில் வதக்கிக்கொள்ளவும்.
புளியை தனியாக வறுத்துக்கொள்ளவும்.
முந்திரிபருப்பை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

  புதினா,கறிவேப்பிலை வதக்கி,உப்பு சேர்த்து  எல்லாவற்றையும் ஒன்றாக நைசாக அரைக்கவும்.
கடைசியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து கொத்தமல்லித்தழையை தூவவும்.

4 comments:

கோமதி அரசு said...

பூண்டு, இஞ்சி இல்லாமல் செய்து இருக்கிறேன்.
பூண்டு, இஞ்சி கலந்து செய்து பார்க்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

அருமை. குடைமிளகாய்க்கு பதில் வெங்காயம் சேர்த்து செய்வேன். இதுபோல செய்து பார்க்கிறேன். நன்றி.

Kanchana Radhakrishnan said...

@ கோமதி அரசு...

நானும் இஞ்சி பூண்டு இதுவரை சேர்த்ததில்லை.இதுதான் முதல் முறை.நன்றாக இருந்தது.
வருகைக்கு நன்றி கோமதி அரசு.

Kanchana Radhakrishnan said...

@ ராமலக்ஷ்மி

குடனமிளகாய் சேர்ப்பதால் வித்தியாசமான சுவை தரும்.
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...