Thursday, December 16, 2010

பருப்புத் துவையலும் மைசூர் ரசமும்

பருப்புத் துவையல்


தேவையானவை:

துவரம்பருப்பு 1/2 கப்

கடலைப் பருப்பு 1/2 கப்

மிளகாய் வற்றல் 4

பெருங்காயத்துண்டு சிறிதளவு

உப்பு,எண்ணைய் தேவையானது.

செய்முறை:

துவரம்பருப்பு,கடலைப் பருப்பு,மிளகாய் வற்றல்,பெருங்காயம் நான்கையும் சிறிது

எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் உப்பு சேர்த்து மிக்சியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து அரைக்கவேண்டும்.

பருப்புகள் நன்றாக மசிந்து நைசாக ஆகும் வரை அரைக்கவேண்டும்.


மைசூர் ரசம்



தேவையானவை:

துவரம்பருப்பு 1/2 கப்

புளி ஒரு எலுமிச்சை அளவு

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

உப்பு எண்ணைய் தேவையானது

----

அரைக்க:

தனியா 1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 2

மிளகு 10

துவரம்பருப்பு 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

---

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

நெய் 1/2 டீஸ்பூன்

-----

செய்முறை:

துவரம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் குக்கரில் நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் தனியா,மிளகாய் வற்றல்,மிளகு,துவரம்பருப்பு நான்கையும்

எண்ணையில் லேசாக வறுத்து அரைத்து கடைசியில் சீரகத்தை பச்சையாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

-----

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து அதில் உப்பு,பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

புளித்தண்ணீர் கொதித்தவுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்.

கடைசியில் வெந்த பருப்பை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

இறக்கி வைத்த பின் நெய்யில் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்.

------

பண்டிகை நாட்களுக்குப் பிறகு பருப்புத் துவையலும்,மைசூர் ரசமும் சாப்பிட்டால் வயிறு லேசாகும்.

Sunday, December 12, 2010

கீரை அடை

தேவையானவை:
முளைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
புழுங்கலரிசி 1 கப்

துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
பயத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை 10
மிளகாய் வற்றல் 5
பச்சைமிளகாய் 5
பெருங்காயம் 1 துண்டு

------

உப்பு,எண்ணைய் தேவையானது

-------

செய்முறை:


பொடியாக நறுக்கிய முளைக்கீரையை நன்றாக அலசி Microwave 'H" ல் ஒரு நிமிடம்

சிறிது உப்பு சேர்த்து வைக்கவும்.

தேவையானவையில் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் (கீரையை தவிர்த்து)

6 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

(மிகவும் நைசாக அரைக்கவேண்டாம்).

அரைத்த மாவில் கீரையை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அடை மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி

சுற்றி எண்ணைய் விடவேண்டும்.

நன்றாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எண்ணைய் விட்டு முறுகலாக வந்ததும் எடுக்கவேண்டும்

முளைக்கீரைக்கு பதில் முருங்கைக்கீரை,சிறுகீரை,பசலைக்கீரை சேர்க்கலாம்..

Thursday, December 9, 2010

கோதுமை ரவை உப்புமா

தேவையானவை:

கோதுமை ரவை 2 கப்

பீன்ஸ் 10

காரட் 2

பட்டாணி 1/2 கப்

தக்காளி 2

வெங்காயம் 2

ஆலிவ் 10

கொத்தமல்லித்தழை சிறிதளவு

எலுமிச்சம்பழ சாறு 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

-----

vegetable stock 1 1/2 கப்

தண்ணீர் 1 1/2 கப்

நெய் 1 டேபிள்ஸ்பூன்

-------

தனியா தூள் 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் 1 டீஸ்பூன்

வெள்ளை எள் 1 டீஸ்பூன்

நிலக்கடலை 10

-----

செய்முறை:

கோதுமை ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி,பீன்ஸ்,காரட் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணைய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

பின்னர் பீன்ஸ்,காரட்,பட்டாணி,ஆலிவ்,கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் நன்றாக வெந்ததும் உப்பு சேர்க்கவும்.

அதனுடன் vegetable stock,தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

வறுத்து வைத்துள்ள கோதுமை ரவையை தூவி கிளறவும்.

தனியா தூள்,மிளகாய் தூள் சேர்க்கவும்.

இறக்கிய பின் வெள்ளை எள்,நிலக்கடலை இரண்டையும் வறுத்து பொடி பண்ணி தூவவும்.

கடைசியில் எலுமிச்சம்பழ சாற்றினை சேர்க்கவும்.

Sunday, December 5, 2010

வெண்டைக்காய் ...காராமணி ஃப்ரை.

தேவையானவை:
வெண்டைக்காய் 20

வெங்காயம் 2

காராமணி 1 கப்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

கறிப்பொடி 2 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:


வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

காராமணியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

-----

நறுக்கிய வெண்டைக்காய் துண்டுகளை ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு

அதனுடன் உப்பு,மஞ்சள்தூள்,கறிப்பொடி சேர்த்து பிசறி oven ல் வைக்கவும்.

(OVEN ஐ 430 F இல் PREHEATசெய்து COOKING TIME 30 நிமிடத்தில் வைத்து எடுக்கவும்.)

வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

காராமணியை வடித்து மூன்று நிமிடம் MICROWAVE HIGH ல் வைத்து வெங்காயத்துடன்

சேர்த்து சிறிது உப்புடன் வதக்கவும்.

வெண்டைக்காயை வெளியே எடுத்து வெங்காயம் காராமணியுடன் சேர்த்து சிறிது நேரம்

அடுப்பில் வைத்து பிரட்டவும்.

Thursday, December 2, 2010

கோதுமை மாவு பிஸ்கட்

தேவையானவை: 

கோதுமை மாவு 1 கப்

பொடித்த சர்க்கரை 1/2 கப்

வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்

பேக்கிங் சோடா 1/2 டீஸ்பூன்

எண்ணைய் தேவையானது



செய்முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்

கோதுமை மாவு,சர்க்கரை,வெண்ணைய்,பேக்கிங் சோடா,ஏலக்காய் தூள் எல்லாவற்றையும்

சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி இடுவது போல இட்டு

பின்னர் சிறு சிறு சதுரங்களாக வெட்டிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள சதுரங்களை பொறித்து எடுக்கவும்.

குழந்தைகளுக்கு இதனை மாலை சிற்றுண்டியாகக் கொடுத்தால்

விரும்பி சாப்பிடுவார்கள்.   மாலை டிபன்

Monday, November 29, 2010

சீரக சாதமும்...பட்டர் வெஜ் மசாலாவும்..

சீரக சாதம்: 
தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்

வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் 2 டேபிள்ஸ்பூன்

உப்பு தேவையானது

செய்முறை:

பாசுமதி அரிசியை மூன்று கப் தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.

வாணலியில் வெண்ணைய் வைத்து உருகினதும் சீரகத்தை பொரிக்கவேண்டும்.

பொரித்த சீரகத்தை ஊறவைத்த பாசுமதி அரிசியுடன் உப்புடன் கலந்து அப்படியே

ele.cooker ல் வைக்கலாம்.



பட்டர் வெஜ் மசாலா:

தேவையானவை:

வெண்ணைய் 1டேபிள்ஸ்பூன்

வெங்காயம் 1

உருளைக்கிழங்கு 1

கார்ன் 1/2 கப்

காரட் 1

பீன்ஸ் 10

குடமிளகாய் 1

தக்காளி 2

-------

இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

சீரகத்தூள் 1 டீஸ்பூன்

தனியாதூள் 1 டீஸ்பூன்

காரப்பொடி 1/2 டீஸ்பூன்

மசாலாதூள் 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை சிறிதளவு

--------

தாளிக்க:

பட்டை சிறு துண்டு

லவங்கம் 2

கசகசா 1 டீஸ்பூன்

சோம்பு 1 டீஸ்பூன்

-----

செய்முறை:

வெங்காயம்,உருளைக்கிழங்கு,காரட்,பீன்ஸ்,குடமிளகாய்,தக்காளி எல்லாவற்றையும் பொடியாக நறுக்க்கிகொள்ளவும்.

கடாயில் வெண்ணைய் வைத்து உருகினதும் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,இஞ்சிபூண்டு விழுது

இரண்டையும் நன்றாக வதக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கியுள்ள காய்கறிகள்,கார்ன்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவேண்டும்

காய்கறிகள் நன்றாக வதங்கியவுடன் உப்பு சேர்க்கவேண்டும்.

அதனுடன் சீரகத்தூள்,தனியா தூள்,காரப்பொடி,மசாலாதூள்,சிறிது தண்ணீருடன் சேர்த்து வதக்கவேண்டும்.

(தண்ணீர் அதிகம் விடவேண்டாம்)

எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் இறக்கியபின் எலுமிச்சை சாறு சேர்க்கவேண்டும்.

கடைசியில் கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.

Wednesday, November 24, 2010

பீட்ரூட் பொரிச்ச கூட்டு

தேவையானவை: பீட்ரூட் 2

பயத்தம்பருப்பு 1/2 கப்

மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்

அரைக்க:

மிளகாய்வற்றல் 4

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் 1 துண்டு

மிளகு 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

நிலக்கடலை 5

தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு



செய்முறை:


பீட்ரூட்டை தோலுரித்து சிறு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பயத்தம்பருப்பு,பீட்ரூட்,இரண்டையும் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைக்கவும்.

(குக்கரில் முதலில் பயத்தம்பருப்பு அதன்மேல் பீட்ரூட் வைத்தால் பருப்பு நன்றாக வெந்துவிடும்)

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு குக்கரில் இருந்து எடுத்த பயத்தம்பருப்பு,பீட்ரூட் கலவையை உப்புடன்

சேர்த்து கொதிக்கவிடவும்.பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.

தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்

(இதே முறையில் பூசணிக்காய்,சௌ சௌ,கொத்தவரங்காய் போன்ற காய்களிலும் செய்யலாம்.)

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...