Wednesday, January 12, 2011

பொங்கலோ பொங்கல்

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்














பால் பொங்கல்

தேவையானவை:

அரிசி 1 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்

பால் 5 கப்
சர்க்கரை 1 கப்
ஏலத்தூள் 1 டீஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 10
திராட்சை 10


செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலை நன்றாக கொதிக்கவைக்கவேண்டும்.

பின்னர் அரிசியையும் பருப்பையும் பாலுடன் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

அரிசியும் பருப்பும் நன்றாக வெந்ததும் சர்க்கரையை சேர்க்கவேண்டும்.

சர்க்கரை நன்றாக கரைந்து பொங்கல் பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும்.ஏலத்தூள் சேர்க்கவும்.

முந்திரிபருப்பு,திராட்சை இரண்டையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்



வெண்பொங்கல்



தேவையானவை:



பச்சரிசி 2 கப்

பயற்றம்பருப்பு 1/2 கப்

மிளகு 15

சீரகம் 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

முந்திரிபருப்பு 10

நெய் 1/4 கப்

தண்ணீர் 10 கப்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கருவேப்பிலை ஒரு கொத்து

உப்பு தேவையானது



செய்முறை:








அரிசியையும் பருப்பையும் தனித்தனியாக வாணலியில் எண்ணைய்விடாமல் வறுக்கவும்.(ஒரு புரட்டுபுரட்டினால் போதும்.)

ஒரு அகண்ட அடி கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 10 கப் தண்ணீர் விடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரிசியையுன் பருப்பையும் நன்றாக களைந்து போட்டு கிளறவும்.பொங்காமல் இருக்க low flame ல் வைத்து க் கிளறவும்.அரிசி ,பருப்பு இரண்டும் நன்றாக வெந்தவுடன் உப்பு போடவேண்டும்.(அரிசி,பருப்பு இரண்டும் குழையாமல் உப்பு போடக்கூடாது.)



மிளகு,சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக mixy ல் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும்.

பெருங்காயத்தூள்,கருவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்துப்போடவும்.

கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.



(அரிசி பருப்பு இரண்டையும் குறிப்பிட்ட அளவு தண்ணீருடன் குக்கரில் வைக்கலாம்.ஆறு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.அப்பொழுதுதான் நன்றாக குழைவாக இருக்கும்

குக்கரை திறந்தவுடன் உப்பு சேர்த்து மற்றவைகளையும் சேர்த்து கிளறவேண்டும்..)





சர்க்கரை பொங்கல்





தேவையானவை:



பச்சரிசி 1 கப்

பயற்றம்பருப்பு 1/4 கப்

பொடித்தவெல்லம் 1 1/2 கப்

தண்ணீர் 4 1/2 கப்

நெய் 1/4 கப்

பால் 1/2 கப்



ஜாதிக்காய் 1 துண்டு

குங்குமப்பூ 1 டீஸ்பூன்

ஏலக்காய் 4

முந்திரிபருப்பு 10

உலர்ந்த திரட்சை 10

கேசரிப்பவுடர் 1டீஸ்பூன்



செய்முறை:











ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு பயற்றம்பருப்பை எண்ணைய் விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.

வெல்லத்தை அரை கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டவும்.

பயற்றம்பருப்பை அரிசியுடன் சேர்த்து நன்றாக களைந்து கொள்ளவும்.



ஒரு அகண்ட கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 4 1/2 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் நன்கு கொதித்தவுடன் களைந்துவைத்திருந்த அரிசி,பருப்பைப்போட்டு அடிபிடிக்காமல் நன்கு கிளறவும்.அரிசியும் பருப்பும் நன்றாக சேர்ந்து வெந்தவுடன் வடிகட்டிய வெல்லத்தைப்போட்டு medium flame ல் ஒரு பத்து நிமிடம் வைத்து கிளறவும்.



ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு அதில் கேசரிப்பவுடர்,குங்குமப்பூ,ஏலக்காய் இவற்றைப்போடவும்.ஜாதிக்காய் துண்டை நெய்யில் வறுத்து பொடிசெய்து அதையும் பாலில் சேர்த்து கரைத்து பொங்கலில் சேர்க்கவும் மீதமுள்ள பாலையும் பொங்கலில் சேர்க்கவும்.திராட்சை,முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.மீதியுள்ள நெய்யை உருக்கி பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

Sunday, January 9, 2011

பாகற்காய் பிட்லை

தேவையானவை:

பெரிய பாகற்காய் 2
வேகவைத்த கொண்டக்கடலை 1/4 கப்     
துவரம் பருப்பு 1/4 கப்
கடலைப் பருப்பு 1/4 கப்
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
புளி ஒரு எலுமிச்சை அளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
------
அரைக்க:
தனியா 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
வற்றல் மிளகாய் 6
தேங்காய் துருவல் 1/2 கப்
-----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:


துவரம்பருப்பையும் கடலைப் பருப்பையும் நன்றாக வேகவைத்துக்கொள்ளவேண்டும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது புளித்தண்ணீர்,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து வடிகட்டி வைக்கவேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து விழுதுபோல அரைத்துக்கொள்ள வேண்டும்.
------
ஒரு கடாயில் அரைத்து வைத்துள்ள விழுதை மீதி புளித்தண்ணீர்,உப்பு சேர்த்துகொதிக்கவிடவேண்டும்.
சிறிது கொதித்த பின் வேகவைத்த பாகற்காய்,வேகவைத்த கொண்டக்கடலை,வேகவைத்த பருப்புகள் மூன்றையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவேண்டும்.
.இறக்கிய பின் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.

Wednesday, January 5, 2011

அங்காயப் பொடி

தேவையானவை:

வேப்பம்பூ 1/2 கப்  தனியா 1/2 கப்

மிளகு 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் 2 டேபிள்ஸ்பூன்

சுண்டைக்காய் வற்றல் 15

மிளகாய் வற்றல் 4

பெருங்காயம் 1 துண்டு

கறிவேப்பிலை 1/2 கப்

சுக்குப்பொடி 2 டீஸ்பூன்

கடுகு 1/2 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது



செய்முறை:


ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் வேப்பம்பூவை கருஞ்சிவப்பாக வறுக்கவேண்டும்.

தனியா,மிளகு,சீரகம் மூன்றையும் சிறிது எண்ணையில் நல்ல சிவப்பாக வறுக்கவேண்டும்.

சுண்டைக்காய் வற்றலை எண்ணையில் வறுக்காமல் பொறிக்கவேண்டும்.

மிளகாய் வற்றல்,பெருங்காயம்,கறிவேப்பிலை மூன்றையும் வறுக்கவேண்டும்.

சுக்கை சிறு சிறு துண்டுகளாக்கி பொடி செய்யலாம்.(அல்லது கடையில் சுக்குப்பொடியே கிடைக்கும்.அதை வாங்கிக் கொள்ளவும்)

கடுகையும் உப்பையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவேண்டும்.

எல்லாவற்றையும் ஒன்றாக மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவேண்டும்.

சாதத்தில் முதலில் நல்லெண்ணைய் சேர்த்து பிசறி பின் இந்த பொடியை சேர்த்து சாப்பிடவேண்டும்.

ஜீரணத்திற்கு நல்லது.

Sunday, January 2, 2011

பிரௌன் ரைஸ் பிஸிபேளாபாத்

தேவையானவை:  
பிரௌன் ரைஸ் 1 கப்

துவரம்பருப்பு 1/2 கப்

மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்

தண்ணீர் 7 கப்

புளி ஒரு எலுமிச்சை அளவு

நெய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

------

வெங்காயம் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

பீன்ஸ் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

பட்டாணி 1/2 கப்

-----

பொடி பண்ண:

கடலைபருப்பு 1 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

தனியா 2 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் 1/2 டீஸ்பூன்

மிளகு 10

வற்றல் மிளகாய் 5

பெருங்காயம் 1 துண்டு

கிராம்பு 2

பட்டை 1 துண்டு

துருவிய தேங்காய் 1/2 கப்

வறுத்து பொடி பண்ணியது:



-------

தாளிக்க:

கறிவேப்பிலை சிறிதளவு

மிளகாய் வற்றல் 2

முந்திரிபருப்பு 10

நிலக்கடலை 10 (உடைத்தது)

-----

செய்முறை:


பிரௌன் ரைஸை ஒரு கப்புக்கு 2 1/2 கப் தண்ணீர் வீதம் வைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் அடி பாத்திரத்தில் பிரௌன் ரைஸையும் மேல் தட்டில் துவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து

ஒரு கப் தண்ணீருடன் வைத்து 6 விசில் விட்டு குக்கரை அணைக்கவேண்டும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.

வெங்காயத்தை முதலில் பொன்னிறமாக வதக்கி அதனுடன் மற்ற காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

-----

வேகவைத்த சாதம்,பருப்பு இரண்டையும் குக்கர் பாத்திரத்தில் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

அதில் வதக்கின காய்கறிகள்,அரைத்து வைத்துள்ள பொடி,தேவையான உப்பு சேர்க்கவும்.

சாதம்,பருப்பு,காய்கறிகள்,பொடி எல்லாம் நன்றாக ஒன்று சேர்ந்ததும் புளித்தண்ணீர் சேர்த்து மீதமுள்ள தண்ணீர் (1 1/2 கப்)

சேர்த்து அடுப்பை ஸ்லிம்மில் வைத்து நன்றாக கொதிக்கவிடவும்..

முந்திரிபருப்பு,நிலக்கடலை,கறிவேப்பிலை,வற்றல் மிளகாய் எல்லாவற்றையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

Friday, December 31, 2010

புத்தாண்டு வாழ்த்துகள்






அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Sunday, December 26, 2010

காராமணி மசாலா

தேவையானவை:

காராமணி 1 கப்
வெங்காயம் 1
உருளைக்கிழங்கு 2
தக்காளி 1
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
தனியாதூள் 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி சில்லித்தூள் 1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி 1/2 டீஸ்பூன்
------
அரைக்க: 
தேங்காய் துருவல் 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்
-----
தாளிக்க:
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
சோம்பு 1 டீஸ்பூன்
----

செய்முறை:
காராமணியை லேசாக வறுத்து இரண்டு கப் தண்ணீரில் வேகவைத்தால் ஐந்து நிமிடத்தில் வெந்துவிடும்.
வெந்தவுடன் வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.
வெங்காயம்,தக்காளி,உருளைக்கிழங்கு மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் லேசாக வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
-----
ஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு,தக்காளி,வேகவைத்த காராமணி.தேவையான உப்பு,சிறிது தண்ணீர் எல்லாம்
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
அவற்றுடன் தனியா தூள்.காஷ்மீரி சில்லித்தூள்,ஆம்சூர் பொடி,அரைத்த விழுது சேர்த்து நன்றாக கொதித்தவுடன் இறக்கவேண்டும்.

Sunday, December 19, 2010

பூரி...சாகு

பூரி செய்வது எல்லோருக்கும் தெரிந்ததே.

"சாகு" பூரிக்கு உகந்த side dish.

ஹோட்டல்களில் பூரி..சாகு சாப்பிட்டிருப்போம்.

ஆனால் நம்மில் பல பேர் வீட்டில் "சாகு" செய்வதில்லை.

"சாகு" செய்முறையை விளக்குகிறேன்.



தேவையானவை:

காலிஃப்ளவர் 10 பூக்கள்

உருளைக்கிழங்கு 1 கப் (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் 1

பட்டாணி 1/2 கப்

காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

கார்ன் 1/2 கப்

கடலைமாவு 1 டேபிள்ஸ்பூன்

vegetable stock 1 கப்

உப்பு எண்ணைய் தேவையானது

----

அரைக்க:

துருவிய தேங்காய் 1 கப்

பட்டை 1 துண்டு

கிராம்பு 2

சீரகம் 1 டீஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

கசகசா 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 2

கொத்தமல்லித்தழை 1/4 கப்

----

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை 1 கொத்து

பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

-----

செய்முறை:


வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

மற்ற காய்கறிகளை ஒரு microwave bowl ல் வைத்து சிறிது உப்பு சேர்த்து microwave "H'ல் ஐந்து நிமிடம் வைக்கவும்.

காய்கறிகள் நன்றாக வெந்துவிடும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் வேகவைத்த காய்கறிகள்,அரைத்த விழுது சேர்க்கவும்.

இதனுடன் vegetable stock அல்லது தண்ணீர் ஒரு கப்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கடலை மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து ஒரு நிமிடம்

கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...