Sunday, January 30, 2011

பெற்றோர்/மற்றோர் கவனத்திற்கு....





பதிவர் ஜலீலா அவர்கள் ஏன் இந்தக் கொடுமை என ஒரு இடுகை இட்டிருந்தார்.அதை படித்ததும் சில விஷயங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள தோன்றியது.அதுவே இந்த இடுகை.

சமீப காலங்களில் குழந்தைகள் கடத்தல் பற்றி அதிகம் கேள்விப்படுகிறோம்.

பள்ளிக்குழந்தைகள் ஆனாலும் சரி மற்ற குழந்தைகள் ஆனாலும் சரி அவர்கள் வீட்டு டிரைவர்,வேலைசெய்பவர்,அல்லது குழந்தைகளுக்கு தெரிந்தவர் குழந்தைகளை கடத்திசென்று.....சிறுமிகளை கற்பழிப்பதும்....அல்லது குழந்தைகள் திரும்ப வேண்டுமானால் பெற்றோரிடம் பணம் கேட்டும் வரும் செய்திகளை

அடிக்கடி பத்திரிகைகளில் பார்க்கமுடிகிறது.

அதேபோல சமீபத்தில் பெங்களுரில் கால் செண்டரில் இரவு வேலை முடிந்து...வேனில் திரும்புகையில் ஒரு பெண் கடத்தப்பட்டு,கற்பழிக்கப்பட்டு,கொலையும் செய்யப்பட்ட செய்தியையும் அறிவோம்.

இப்போதெல்லாம் BPO வில் வேலை செய்யும் பல பெண்கள் இரவு வேலைக்கு செல்கிறார்கள்.இவர்கள் தனியாக ஏற்பாடு செய்து கொண்டோ அல்லது ஆட்டோ,டாக்சி யிலேயோ வீடு திரும்ப வேண்டியுள்ளது.அது போன்ற சமயங்களில் சிலரால் பாலியல் தொந்தரவுக்கும் ஆளாகிறார்கள்.இது பற்றி காவல் துறையில்வழக்குகள் குவிந்து வருகின்றன.

இது பற்றியெல்லாம் எண்ணியபோது தற்செயலாக இந்த நிறுவனத்தின் வெப்சைட் கண்ணில் பட்டது.

இந்நிறுவனம் பேஜர் போன்ற ஒரு கருவியை தருகிறார்கள்.அதை குழந்தைகளோ வேலைக்கு போகும் பெண்களோ வைத்துக்கொண்டால் ...தங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் ஏற்படும் நிலையில் இருந்தால் அந்தக் கருவியை ஐந்து வினாடிகள் மட்டுமே கிளிக் செய்தால் போதும்.அவர்கள் இருக்குமிடம் வீட்டில் உள்ளவர்கள் மொபைலில் தெரிந்துவிடும்.நிலைமை அறிந்து வீட்டிலுள்ளோர் தனியாகவோ,அல்லது காவல் துறை உதவியுடனோ காப்பாற்றி விடமுடியும்.



தவிர்த்து,இன்று பரவலாக மனிதர்களுக்கு குறிப்பாக வயதானவர்களுக்கு அல்சைமர்(alzheimer) எனப்படும் மறதிக்குறைவு அதிகரித்து வருகிறது.

மூளையில் உள்ள செல்கள் அழிந்து வருவதாலே இந்த குறைபாடு ஏற்பட்டு வருவதாக தெரிகிறது.இதற்கு முழு நிவாரணம் கண்டுபிடிக்க முடியவில்லை.அதனால் அல்சைமர் உள்ள பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் வீடு இருக்குமிடம் தெரியாமல் மறந்து போய் மணிகணக்காக எங்கெங்கோ திரிய ஆரம்பித்துவிடுகிறார்கள்.வீட்டிலுள்ளவர்கள் கவலை மேலிட அவரை நகரம் முழுவதும் தேட ஆரம்பிப்பதும்,காவல் துறையில் காணாமல் போனவர் பற்றி புகார் செய்வதுமாக உள்ளது.

.ஆகவே அப்படிபட்டவர்களுக்கும் வீட்டைவிட்டு வெளியே அவர்கள் போகும் போது திரும்ப வழி மறந்தாலும் அவர் இருக்குமிடத்தை கணிணியின் மூலம் கூகுள் மேப்பில் வெப்சைட் மூலம் அவர்கள் இருக்குமிடம் அறிந்து அழைத்து வந்துவிடலாம்.

எதிர்காலத்தில் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக அனைவருக்கும் அமையக்கூடும் என்று தோன்றுகிறது.

Thursday, January 27, 2011

பயத்தம்பருப்பு தோசை



தேவையானவை:
பயத்தம்பருப்பு    3 கப்  
புழுங்கலரிசி 3/4 கப்
பச்சைமிளகாய் 5
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
கொத்தமல்லித்தழை 1 கப் (ஆய்ந்தது)
உப்பு,எண்ணைய் தேவையானது
----
செய்முறை:

பயத்தம்பருப்பு அரிசி இரண்டையும் நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.
ஊறவைத்த அரிசி,பருப்பை வடிகட்டி அதனுடன் பச்சைமிளக்காய்,சீரகம்,
இஞ்சி,கொத்தமல்லித்தழை,தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில்
அரைக்கவேண்டும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் காய்ந்ததும் மாவை ஒரு கரண்டி ஊற்றி
மெல்லிசாக வார்க்கவேண்டும்.இறுபுறமும் எண்ணைய் விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

இந்த தோசையை அரைத்த உடனே சாப்பிடலாம்..
தக்காளி சட்னி,வெங்காய சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Wednesday, January 26, 2011

வெள்ளரிக்காய் பச்சடி





தேவையானவை:

வெள்ளரிக்காய் 2

தயிர் 1 கப்

தேங்காய் துருவல் 1/4 கப்

பச்சைமிளகாய் 2

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது



செய்முறை:


வெள்ளரிக்காயை தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

தேங்காய் துருவல்,பச்சைமிளகாய் இரண்டையும் ஒரு டேபிள்ஸ்பூன் தயிர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நறுக்கிய வெள்ளரிக்காய்,அரைத்த விழுது,மீதமுள்ள தயிர்,தேவையான உப்பு

சேர்த்து நன்கு கலக்கவும்.கடைசியில் கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.


சாதாரணமாக புலவ்,பிரியாணிக்கு ரெய்தாவைப் போல இந்த பச்சடியும் நன்றாக இருக்கும்.

Sunday, January 23, 2011

வெஜிடபிள் சிலி



வெஜிடபிள் சிலி என்பது ஒரு வகையான Stew ஆகும்.காய்கறிகளும் தானியங்களும் சேர்ந்த கலவை.

இதனை சூப் என்றும் கூறலாம்.ஆனால் சூப்பைவிட கொஞ்சம் திக்காக இருக்கும்.இதனை சாதத்தோடு சேர்ந்து சாப்பிட ஒரு வேளை உணவாகும்.

.டின்னருக்கு bread ஐ toast பண்ணி இத்துடன் சாப்பிடலாம்.


தேவையானவை:

ராஜ்மா (white) 1/4 கப்

ராஜ்மா (black) 1/4 கப்

கொண்டக்கடலை 1/4 கப்

வெங்காயம் 1

தக்காளி 2

கொடமிளகாய் (green) 1

கொடமிளகாய் (red) 1

கார்ன் 1/4 கப்

பட்டாணி 1/2 கப்

வெஜிடபிள் ஸ்டாக் 1 கப்

தண்ணீர் 1 கப்

உப்பு,எண்ணைய் தேவையானது

----

தனியா தூள் 1/2 டீஸ்பூன்

சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்

காஷ்மீரி சில்லி தூள் 1 டீஸ்பூன்

ஆம்சூர் பொடி 1/2 டீஸ்பூன்

----

பூண்டு 4 பல்

கொத்தமல்லி தழை சிறிதளவு

cream 2 டேபிள்ஸ்பூன்



செய்முறை:



 ராஜ்மா இரண்டு வகைகளையும்,கொண்டக்கடலையையும் ஒருமணிநேரம்   ஊறவைத்து குக்கரில் வைத்து எடுக்கவும்.(மூன்று விசில்).


வெங்காயம்,குடமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்து வதக்கிக்கொள்ளவும்.

பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

-----

ஒரு அகண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணைய் சிறிது விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

அதில் குக்கரிலிருந்து எடுத்த ராஜ்மா,கொண்டக்கடலையை சேர்க்கவும்.

இருவகை கொடமிளகாயையும்,கார்ன், பட்டாணி,பொடியாக நறுக்கிய பூண்டையும் சேர்க்கவும்.

இத்துடன் வெஜிடபிள் ஸ்டாக் ஒரு கப்,தண்ணீர் ஒரு கப் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

பின்னர் தக்காளி பேஸ்டுடன் தனியா தூள்,சீரக்த்தூள்,காஷ்மீரி சில்லி தூள்,ஆம்சூர் பொடி சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.

அதிக தண்ணீர் விடவேண்டாம்.

கடைசியில் கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.

சாப்பிடும் முன்பு fresh cream ஐ மேலே போட்டு சாப்பிடவும்.

Thursday, January 20, 2011

இட்லி மிளகாய்ப் பொடி



தேவையானவை:

கடலைப் பருப்பு 1 1/2 கப்

உளுத்தம்பருப்பு 1/2 கப்

சிவப்பு மிளகாய் 1 1/2 கப்

கொப்பரை 1 1/2 கப் (துண்டுகள்)

புளி ஒரு எலுமிச்சை அளவு

வெல்லம் 1/4 கப் (பொடித்தது)

பெருங்காயம் 1 துண்டு

கடுகு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை ஒரு கொத்து

உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:


கடலைப் பருப்பையும் உளுத்தம்பருப்பையும் எண்ணையில் பொன்னிறமாக வறுக்கவேண்டும்.

சிவப்பு மிளகாயை சிறிது எண்ணையில் தனியாக வறுக்கவேண்டும்.

கொப்பரையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது எண்ணைய் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுக்கவேண்டும்.

புளி,உப்பு,பெருங்காயம் மூன்றையும் தனித்தனியே வறுத்து எடுக்கவேண்டும்.

-----

மிக்சியில் அரைக்கும்போது கொப்பரையை முதலில் கரகரப்பாக அரைத்து வைக்கவும்.

அடுத்து கடலைப் பருப்பு,உளுத்தம்பருப்பு,புளி,உப்பு எல்லாவற்றையும் அரைக்கவேண்டும்.

சிவப்பு மிளகாயை தனியே நைசாக அரைக்கவேண்டும்.

கடைசியில் எல்லாவற்றையும் வெல்லத்தோடு சேர்த்து ஒரு சுற்று சுற்றவேண்டும்.

அரைத்த இட்லிப் பொடியை ஒரு அகண்ட பாத்திரத்தில் கொட்டி கடுகு கறிவேப்பிலை தாளித்து

நன்றாக கலந்து எடுத்து வைக்கவேண்டும்.

Tuesday, January 18, 2011

ரவா தோசை

தேவையானவை:
ரவா 1 கப்
இட்லி மாவு or
அரிசி மாவு 1 கப்
மைதா மாவு 1 கப்
மிளகு 10
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 3
இஞ்சி 1 துண்டு
கறிவேப்பிலை சிறிது
-------
செய்முறை:

ரவையை 1 1/2 கப் தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
இட்லி மாவையும் மைதாமாவையும் தண்ணீரில் கரைத்து உப்பு சேர்க்கவும்.
ஊறவைத்த ரவாவை அதனுடன் கலந்து சற்று நீர்க்க கரைக்கவும்.
மிளகு,சீரகம்,கறிவேப்பிலை மூன்றையும் எண்ணையில் பொறித்து போடவும்.
பச்சைமிளகாய்,இஞ்சி இரண்டையும் பொடியாக நறுக்கி பச்சையாக போடவும்.
-------
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து
அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணைய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

இதற்கு சரியான side dish தக்காளி சட்னி,தேங்காய் சட்னி.

Sunday, January 16, 2011

வெஜ் பரோட்டா

தேவையானவை: 
கோதுமைமாவு 2 கப்
உருளைக்கிழங்கு 2
முட்டைக்கோஸ் 1 கப் (பொடியாக நறுக்கியது)
பட்டாணி 1 கப்
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
காரப்பொடி 1 டீஸ்பூன்
மசாலாதூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

------

செய்முறை:

கோதுமைமாவில் தேவையான உப்பு,தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும்.
உருளைக்கிழங்கை microwave 'H' ல் 5 நிமிடம் வைத்து எடுக்கவும்.தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
முட்டைக்கோஸை microwave 'H' ல் 5 நிமிடம் வைத்து எடுத்து மசித்துக்கொள்ளவும்.
பட்டாணியை வேகவைத்து எடுத்து வைக்கவும்.

------

கடாயில் எண்ணைய் வைத்து கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து மசித்துவைத்த உருளைக்கிழங்கு,முட்டைக்கோஸ்,
வேகவைத்த பட்டாணி,தேவையான உப்பு சேர்த்து பிரட்டவும்.
அதனுடன் மஞ்சள்தூள்,காரப்பொடி,மசாலாத்தூள் சிறிது எண்ணைய் சேர்த்து பிரட்டவும்.
தண்ணீர் சேர்க்கவேண்டாம். எல்லாம் ஒன்று சேர்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

-----
பிசைந்த சப்பாத்தி மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி அளவு இட்டு
அதன் நடுவில் செய்து வைத்திருந்த வெஜ் உருண்டை ஒன்றை வைத்து எல்லா ஓரங்களையும் மையப்பகுதி நோக்கி
மசாலா தெரியாதவாறு மூடவும்.மீண்டும் சப்பாதி போல் தேய்க்கவும்.

அடுப்பில் தவாவை வைத்து இட்டு வைத்த பரோட்டாவை போட்டு இறுபுறமும் எண்ணைய் விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...