Wednesday, October 21, 2009

கேழ்வரகு புட்டு(நூறாவது பதிவு )


தேவையானவை:

கேழ்வரகு மாவு 1 கப்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை 1 டேபிள்ஸ்பூன்
உப்பு 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் தேவையானது
ஏலக்காய் 4

செய்முறை:

* கேழ்வரகு மாவையும் உப்பையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக
தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும்.உதிரியாக இருக்கவேண்டும்.
இந்த கலவையை இட்லி குக்கரில் ஆவியில் 15 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.

* குக்கரில் இருந்து எடுத்து ஒரு அகண்ட தட்டில் பரவலாகப் போட்டு அதில்
பொடித்த சர்க்கரை,நெய்,தேங்காய் துருவல்,ஏலக்காய் (ஏலக்காயை நெய்யில் வறுத்து போடவும்)
சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.

12 comments:

RAGUNATHAN said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.. தொடரட்டும் உங்கள் பணி :)

Menaga Sathia said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா!!

Kanchana Radhakrishnan said...

நன்றி ரகுநாதன்

Kanchana Radhakrishnan said...

நன்றி Menaga

ஊடகன் said...

வாழ்த்துக்கள்..........
தொடருங்கள் உங்கள் இடுகை பணியை.............

Kanchana Radhakrishnan said...

நன்றி ஊடகன்

பித்தனின் வாக்கு said...

புட்டு நல்லா இருக்குங்க. தங்களுடைய நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள். நன்றி.

நானானி said...

நூறாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்!!

புட்டு செய்வதை அழகாக புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள். நானும் செய்து பார்க்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

நன்றி பித்தனின் வாக்கு

Kanchana Radhakrishnan said...

நன்றி நானானி

Jaleela Kamal said...

100 வது பதிவு வாழ்த்துக்கள், இதை பார்த்ததும் படிக்கும் போது பிரேமா அடிக்கடி கேழ்வரகு புட்டு கொண்டு வந்து தருவாள் சூப்பரா இருக்கும், நானும் செய்வேன்

Kanchana Radhakrishnan said...

நன்றி Jaleela

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...