Thursday, June 5, 2014

அரைப்புளி குழம்பு


தேவையானவை:  
சேனைக்கிழங்கு  1/4 கிலோ
கொண்டக்கடலை 1 கப் (channa)
புளி ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி 3 மேசைக்கரண்டி
தேங்காய் துண்டுகள் 1/4 கப்
அரிசிமாவு 1 டீஸ்பூன்
எண்ணைய், உப்பு தேவையானது
------
தாளிக்க:
நல்லெண்ணை 2 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
மிளகாய் வற்றல் 3
கறிவேப்பிலை 1 கொத்து
-----
செய்முறை:

 கொண்டக்கடலையை  நான்கு மணிநேரம் ஊறவைத்து  பின்னர்
 குக்கரில் வைத்து (3விசில்) வேகவைக்கவேண்டும்.
சேனைக்கிழங்கை தோல் சீவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,மிளகாய் வற்றல்,
 இவைகளுடன் கொண்டக்கடலையையும் போட்டு சிவக்க வறுக்கவும்.பின்னர் தேங்காய் துண்டங்களையும் போட்டு சற்று வறுத்து கறிவேப்பிலையை சேர்த்து
வெடிக்கவிடவும்.வெடித்ததும் சாம்பார் பொடி போட்டு வறுக்கவும்.
பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு உப்பு சேர்த்து நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.
நன்றாக கொதித்து வற்றியவுடன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு எல்லாம் சேர்ந்து கொதித்தபின் இறக்கவும்.
வேண்டுமென்றால் அப்பளத்தை சிறு துண்டுகளாக்கி பொரித்து போடலாம்.

4 comments:

RajalakshmiParamasivam said...

கொண்டைக்கடலையை குக்கரில் வேக வைக்க வேண்டாமா?

Kanchana Radhakrishnan said...

கொண்டக்கடலையை குக்கரில் வைத்து (3விசில்) வேகவைக்கவேண்டும்.
அதை குறிப்பிட மறந்துவிட்டேன்
Thanks rajalakshmi paramasivam

திண்டுக்கல் தனபாலன் said...

புதிதாக இருக்கிறது... நன்றி...

செய்து சுவைக்கிறோம்...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...