தேவையானவை:
பார்லி 1 கப்
பயத்தம்பருப்பு 1/2 கப்
மஞ்சள்தூள் 2/3 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
----------
வெங்காயம் 2
தக்காளி 1
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லிதழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-----------------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1 மேசைக்கரண்டி
---------
செய்முறை:
பார்லியை வெறும் வாணலியில் வறுத்து ரவைபோல உடைத்துக்கொள்ளவும்.
வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை குறுக்கே கீறிக்கொள்ளவும்.
------
குக்கருக்குள் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பார்லி ரவை,பயத்தம்பருப்பு,மூன்று கப் தண்ணீர்,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள்,தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து வைத்து நான்கு விசில் வந்தவுடன்
அடுப்பை அணைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
பிறகு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி அதனுடன் தக்காளியையும்,பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவேண்டும்.
குக்கரில் இருந்த பார்லி,பயத்தம்பருப்பு கலவையை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
இறக்குமுன் கொத்தமல்லித்தழையை தூவவும்.
இதனுடன் பட்டாணி உருளைக்கிழங்கு (தோல் சீவி பொடியாக நறுக்கியது) சேர்க்கலாம்.
4 comments:
சத்துள்ள சமையல் குறிப்பு... நன்றி...
அருமையான சத்தான சமையல் குறிப்பு.
@ திண்டுக்கல் தனபாலன்
Thanks திண்டுக்கல் தனபாலன்.
@ கோமதி அரசு
Thanksகோமதி அரசு
Post a Comment