தேவையானவை:
கறிவேப்பிலை 1 கப் (ஆய்ந்தது)
மிளகாய்வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
புளி சி றி தளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து ஆய்ந்து வைத்துள்ள கறிவேப்பிலையை போட்டு எண்ணைய் விடாமல் ஒரு பிரட்ட வேண்டும்.
ஈரமெல்லாம் போனவுடன் தனியே எடுத்து வைக்கவேண்டும்.
வாணலியில் சிறிது எண்ணைய் வைத்து மிளகாய் வற்றலை தனியே வறுத்து எடுக்கவேண்டும்.
அதே வாணலியில் கடலை பருப்பு,உளுத்தம்பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுக்கவேண்டும்.
பெருங்காயத்தை தனியே பொரித்து எடுக்கவேண்டும்
கடைசியில் புளியையும் உப்பையும் ஒரு பிரட்டு பிரட்ட வேண்டும்.
மிக்சியில் முதலில் பருப்புகளையும்,மிளகாய்வற்றல், பெருங்காயம் புளி உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி விட்டு கறிவேப்பிலையை சேர்த்து
பொடியாக அரைக்கவேண்டும்.
கறிவேப்பிலை பொடியை சாதத்தோடு சிறிது நல்லெண்ணைய் சேர்த்து சாப்பிடலாம்.
தயிர் சாதத்திற்கு ஊறுகாய்க்கு பதில் தொட்டுக்கொள்ளலாம்.
6 comments:
தொண்டை தான் "கப்" என்று பிடித்துக் கொள்கிறது...
கறிவேப்பிலைச் செடி உள்ளதால்
எங்களுக்கு இந்தப் பதிவு அனைவரை விட
அதிக பயனுள்ளதாய் உள்ளது
வாழ்த்துக்கள்
tha.ma 3
பயனுள்ள குறிப்பு. எனக்கு மிகவும் பிடிக்கும்.
@ திண்டுக்கல் தனபாலன்.
சாதத்தோடு பிசையும் போது கூடுதலாக நல்லெண்ணை ஊற்றிக்கொள்ளவும்.வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
@ Ramani S.
Thanks Ramani Sir.
Post a Comment