தேவையானவை:
கடலைப்பருப்பு 1 கப்
சோம்பு 1 மேசைக்கரண்டி
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
ஏலக்காய் 2
இஞ்சி 1 துண்டு
பூண்டு 2 பல்
பச்சைமிளகாய் 2
வெங்காயம் 1
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------------------------
செய்முறை:
கடலைப்பருப்பை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.ஊறிய பின் வடிகட்டவேண்டும்.ஒரு தேக்கரண்டி கடலப்பருப்பை தனியே எடுத்துவைக்கவேண்டும்.
சோம்பை தனியாக ஊறவைக்கவேண்டும்.
ஊறிய சோம்பு,பச்சைமிளகாய்,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,இஞ்சி.பூண்டு எல்லாவற்றையும் முதலில் கரகரப்பாக அரைக்கவேண்டும்.
அதனுடன் வடிகட்டிய கடலைப்பருப்பு,தேவையான உப்பு சேர்த்து சற்றே கரகரப்பாக அரைக்கவேண்டும்.
அரைத்ததை ஒரு பாத்திரத்தில் வைத்து அதனுடன் தனியாக எடுத்து வைத்த தேக்கரண்டி கடலைப்பருப்பு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,பொடியாக அரிந்த கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.
கடாயில் எண்ணெய் வைத்து நன்கு காய்ந்ததும் கலந்த மாவை உள்ளங்கையில் வடை போல தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவேண்டும்.
4 comments:
நல்ல குறிப்பு. பட்டை, கிராம்பு சேர்த்ததில்லை இதுவரை. செய்து பார்க்கிறேன். நன்றி.
பட்டடை,கிராம்பு சேர்த்து செய்து பாருங்கள்." மசால் வடை" என்ற பெயருக்கு ஏற்றால் போல் இருக்கும்.
வணக்கம்
நிச்சயம் செய்து பார்க்கிறேன்... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
Post a Comment