Thursday, September 25, 2014

காராமணி இனிப்பு சுண்டல்



தேவையானவை:
காராமணி 1 கப்
பொடித்த வெல்லம் 1/2 கப்
துருவிய தேங்காய் 1/4 கப்
ஏலக்காய் தூள்  சிறிதளவு
உப்பு ஒரு சிட்டிகை
------
செய்முறை:


காராமணியை லேசாக வறுத்து 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் ஒரு சிட்டிகை உப்புடன் வைத்து (மூன்று விசில்) எடுக்கவும்.
வெல்லத்தை சிறிது தண்ணீருடன் அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டிய காராமணி, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
எல்லாம் சேர்ந்து நன்றாக கிளறியவுடன்  தேங்காய் துருவல் சேர்க்கவும்.

3 comments:

ராமலக்ஷ்மி said...

நவராத்திரி விழாக்கால வாழ்த்துகள்!

அருமையான குறிப்பு.

Kanchana Radhakrishnan said...

நன்றி.தங்களுக்கும் விழாக்கால வழ்த்துகள்.

கோமதி அரசு said...

அருமையான காராமணி இனிப்பு சுண்டல்.
வாழ்த்துக்கள்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...