Sunday, November 30, 2014

பூரி..சாகு

பூரி செய்வது எல்லோருக்கும் தெரிந்ததே.

"சாகு" பூரிக்கு உகந்த side dish.

ஹோட்டல்களில் பூரி..சாகு சாப்பிட்டிருப்போம்.

ஆனால் நம்மில் பல பேர் வீட்டில் "சாகு" செய்வதில்லை.

"சாகு" செய்முறையை விளக்குகிறேன்.



தேவையானவை:

காலிஃப்ளவர் 10 பூக்கள்

உருளைக்கிழங்கு 1 கப் (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் 1

பட்டாணி 1/2 கப்

காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

கார்ன் 1/2 கப்

கடலைமாவு 1 டேபிள்ஸ்பூன்

vegetable stock 1 கப்

உப்பு எண்ணைய் தேவையானது

----

அரைக்க:

துருவிய தேங்காய் 1 கப்

பட்டை 1 துண்டு

கிராம்பு 2

சீரகம் 1 டீஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

கசகசா 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 2

கொத்தமல்லித்தழை 1/4 கப்

----

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை 1 கொத்து

பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

-----

செய்முறை:


வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

மற்ற காய்கறிகளை ஒரு microwave bowl ல் வைத்து சிறிது உப்பு சேர்த்து microwave "H'ல் ஐந்து நிமிடம் வைக்கவும்.

காய்கறிகள் நன்றாக வெந்துவிடும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் வேகவைத்த காய்கறிகள்,அரைத்த விழுது சேர்க்கவும்.

இதனுடன் vegetable stock அல்லது தண்ணீர் ஒரு கப்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கடலை மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து ஒரு நிமிடம்

கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.

9 comments:

ADHI VENKAT said...

”சாகு” செய்து பார்க்கத் தூண்டுகிறது.

Kanchana Radhakrishnan said...

Thanks Adhi.

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு. பெங்களூரின் பல ஓட்டல்களில் ரவா இட்லியுடன் சாகு பரிமாறப்படுவதைப் பார்க்கலாம்.

Kanchana Radhakrishnan said...

நாங்களும் பெங்களூர் வந்திருந்தபொழுது சாப்பிட்டிருக்கிறோம்.வருகைக்கு நன்றி ராமலஷ்மி.

Thenammai Lakshmanan said...

மிக ருசியா இருக்கு செய்து பார்க்கிறேன் :)

sangeetha senthil said...

அருமை

Kanchana Radhakrishnan said...

@ Thenammai Lakshmanan

வருகைக்கு நன்றி Thenammai Lakshmanan

Kanchana Radhakrishnan said...

@ Thenammai Lakshmanan

வருகைக்கு நன்றி Thenammai Lakshmanan

Kanchana Radhakrishnan said...

@ sangeethas creations


வருகைக்கு நன்றி sangeethas creations.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...