தேவையானவை:
வரகரிசி 1 கப்
-------
அரைக்க:
துவரம்பருப்பு 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 3
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
தெங்காய்துருவல் 1/2 கப்
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கடலைபருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
மிளகாய் வற்றல் 2
-------
செய்முறை:
வரகரிசியைவெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்..
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
(ஒரு கப் வரகரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் வீதம்)
அரைத்த விழுதையும் தேவையான உப்பையும் அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
தண்ணீர் கொதித்தவுடன் வரகசிசியை மெதுவாக தூவி கட்டியில்லாமல் கிளறவேண்டும்.
தேவையானால் சிறிது எண்ணெய் சேர்த்து கிளறலாம். அல்லது
(வரகரிசி,அரைத்தவிழுது.தண்ணீர்.உப்பு,தாளித்தவைகள் எல்லாவற்றையும் குக்கரில் வைக்கும் பாத்தி
ரத்தில் வைத்து 4 விசில் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்,)
ஆறினவுடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுக்க
சுவையான வரகு உப்புமா கொழுக்கட்டை ரெடி.
2 comments:
வித்தியாசமாக செய்துள்ளீர்கள்... முயற்சி செய்கிறோம்... நன்றி...
நன்றி. திண்டுக்கல் தனபாலன்.
Post a Comment