தேவையானவை:
குதிரைவாலி 2 கப்
பீன்ஸ் 10
காரட் 2
பட்டாணி 1/2 கப்
தக்காளி 2
வெங்காயம் 2
தண்ணீர் 4 கப்
நெய் 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
எலுமிச்சம்பழ சாறு 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
---------
தனியா தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
வெள்ளை எள் 1 டீஸ்பூன்
நிலக்கடலை 10
-----
செய்முறை:
குதிரைவாலியை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,பீன்ஸ்,காரட் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணைய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
பின்னர் பீன்ஸ்,காரட்,பட்டாணி, எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும் உப்பு சேர்க்கவும்.
அதனுடன் 4 கப்,தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
வறுத்து வைத்துள்ள குதிரைவாலியை சிறிது சிறிதாக போட்டு கிளறவும்.
அடுப்பை ஸிம்மில் வைத்து கிளறவும்.வேகுவதற்கு 10 நிமிடம் ஆகும்.
தனியா தூள்,மிளகாய் தூள் சேர்க்கவும்.
இறக்கிய பின் வெள்ளை எள்,நிலக்கடலை இரண்டையும் வறுத்து பொடி பண்ணி தூவவும்.
கடைசியில் எலுமிச்சம்பழ சாற்றினை சேர்க்கவும்.
4 comments:
குதிரைவாலியில் உப்புமா செய்வதற்கான செய்முறைக் குறிப்பு பார்த்தேன். மிக மிக சுலபமாக செய்யலாம் போலிருக்கிறதே. செய்து பார்க்க வேண்டும். நன்றி
நன்றாக இருக்கிறது குதிரைவாலி உப்புமா.
@ Viya Pathy
வருகைக்கு நன்றி Viya Pathy.
@ கோமதி அரசு
வருகைக்கு நன்றி கோமதி அரசு.
Post a Comment