தேவையானவை:
முளைக்கீரை 1/2 கப் (அரிந்தது)
அரைக்கீரை 1/2 கப் (அரிந்தது)
தக்காளி 2
வெங்காயம் 3
பூண்டு 5 பல்
தேங்காய் பால் 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
---------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
முளைக்கீரை,அரைக்கீரை,வெங்காயம் (2),தக்காளி எல்லாவற்றையும் நன்றாக வதக்கி அரைக்கவும்.
வாணலியை எடுத்துக்கொண்டு அதில்; சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம் (1) பூண்டு இரண்டையும் நன்றாக வதக்கவும்.பின்னர் அரைத்த விழுதை தேவையான உப்புடன் சேர்க்கவும். சிறிது கொதித்தவுடன் தேங்காய் பால் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
1 comment:
அருமையான குறிப்பு.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
Post a Comment