தேவையானவை:
அன்னாசிப்பழம்1 (பழுத்தது)
தேங்காய் துருவல்1 கப்
மிளகாய் தூள்1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
சீரகம்`1 தேக்கரண்டி
சர்க்கரை 2 கப்
தயிர் 1 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
தேங்காய் எண்ணெய்1மேசைக்கரண்டி
கடுக்1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்2
கறிவேப்பிலை 1 கொத்து
--------
செய்முறை:
அன்னாசிப் பழத்தை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
சீரகத்தை தேங்காய் துருவலுடன் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அன்னாசிப்பழத் துண்டுகளை மிளகாய் தூள்,மஞ்சள்தூள் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
பழத்துண்டுகள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் சீரக விழுதையும் சர்க்கரையையும் சேர்க்கவும்.
பழம் குழைந்து வரும்போது தயிரை ஊற்றி கிளறி இறக்கவும்.
தேங்காய் எண்ணெயில் கடுகு,கிள்ளிய மிளகாய் வற்றல் கறிவேப்பிலை தாளித்து சேர்க்க பைனாப்பிள் ஸ்வீட் கிச்சடி ரெடி.

