Sunday, March 19, 2023

1. எண்ணைய் கத்திரிக்காய் குழம்பு




தேவையானவை:

சின்ன கத்திரிக்காய் 12             
பெரிய வெங்காய்ம்  2     
புளி எலுமிச்சைஅளவு
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய்   1/4 கப்
சாம்பார் பொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது                                      
-------
வறுத்து அரைக்க தேவையானது:

வற்றல் மிளகாய்  4
தனியா  1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் 1/2 கப்
வேர்க்கடலை 10
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2  டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு சிறிதளவு
--------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
-------
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
சின்ன கத்திரிக்காயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்    
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.     

வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவைகளில் மிளகாய் வற்றல்,தனியா இரண்டையும் எண்ணெயில்லாமல் வறுக்கவும. மற்றவற்றை 
எண்ணெயில் வறுக்கவும்.
எல்லாவற்றையும் சிறிது உப்பு,தண்ணீர் சேர்த்து கெட்டியான விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த விழுதை குறுக்கே வெட்டிய ஒவ்வொரு கத்திரிக்காயின் உள்ளும் அடைத்து மேலே கொஞ்சம் எண்ணெய் தடவவும்.

அப்படியே வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து வதக்கலாம்.
இல்லாவிடில் Oven ஐ Preheat செய்து விட்டு 25 நிமிடம் வைக்கவும்.(400 deg.-F)(இந்த முறையில் செய்தால் கத்திரிக்காய் மொறு மொறு என்று இருக்கும்.) இதனை தனியே எடுத்து வைக்கவும்.
              
                           
அடுப்பில் நல்லெண்ணய்  வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து  நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். மீதியுள்ள அரைத்த விழுதை கரைத்து
உப்பு சேர்த்து  புளிதண்ணீர்,.மஞ்சள்தூள்,சாம்பார் பொடி சேர்க்கவும்.நன்கு கொதித்ததும் வதக்கிய கத்திரிக்காயை சேர்த்து
இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி.

2. வெண்டைக்காய் சாம்பார்



தேவையானவை:

வெண்டைக்காய் 15

துவரம்பருப்பு   3/4 கப்

புளி எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானது

கொத்தமல்லித்தழை சிறிதளவு

----------------------------

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை ஒரு கொத்து

------------------

செய்முறை:

வெண்டைக்காயை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு ஒரு துணியால் துடைத்து  நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

துவரம்பருப்பை  இரண்டு கப் தண்ணீருடன்  குக்கரில் வைத்து வேகவைக்கவும்.( 4 விசில்)

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து .கடுகு கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெண்டைக்காய் துண்டுகளை மஞ்சள்தூளுடன் சேர்த்து  வதக்கவும்.

வெண்டைக்காய் வெந்தவுடன் புளித்தண்ணீர் சேர்த்து அதனுடன் தேவையான உப்பு,சாம்பார் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

புளி பச்சை வாசனை போனபின் வேகவைத்த பருப்பை சேர்த்து சிறிது கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும்.

கடைசியில் கொத்தமல்லித்தழை தூவவும்.



Thursday, March 15, 2018

GUACAMOLE


தேவையானவை:
அவகோடா    2
மிளகு தூள்     1 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது
எலுமிச்சை   1
-----
செய்முறை:


அவகோடாவை இரண்டாக நறுக்கி நடுவில் உள்ள கொட்டையை நீக்கிவிட்டு ஒரு ஸ்பூனால் விழுதை எடுக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அவகோடா விழுதுடன் மிளகுதூள்,தேவையான உப்பு,எலுமிச்சம்பழ சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
------
தேவையென்றால் இதனுடன் வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.

\இதை ஒரு dip ஆக  Nacho Chips உடன் பறிமாறலாம் அல்லது sandwich spread  ஆக உபயொகப்படுத்தலாம்.
------
அவகோடாவில் நார்சத்தை  தவிர முக்கியமான வைட்டமின் களும் உள்ளன.


Friday, February 23, 2018

வண்ண வண்ண சாலட்

தேவையானவை:

குடமிளகாய்    4
சிவப்பு,பச்சை.ஆரஞ்சு,மஞ்சள்
ஒவ்வொன்றிலும் ஒன்று
வெள்ளரிக்காய் 2
காரட் துருவல் 1/2 கப்
நிலக்கடலை  1 கப்
சாட் மசாலா    1மேசைக்கரண்டி
ஆம்சூர் பவுடர்  1 மேசைக்கரண்டி
எலுமிச்சை ஜூஸ் 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை 1/4 கப்
உப்பு  தேவையானது
------------------
செய்முறை:


நிலக்கடலையை சிறிது உப்புடன் குக்கரில் மூன்று விசில் வந்தவுடன் எடுத்து வைக்கவும்.
குடமிளகாய்,வெள்ளரிக்காய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட  பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் குக்கரில் இருந்து எடுத்த நிலக்கடலை,பொடியாக நறுக்கிய குடமிளகாய்கள்,காரட் துருவல்,வெள்ளரிக்காய் எல்லாவற்றையும் சேர்த்து அதனுடன் சாட் மசாலா,ஆம்சூர் பவுடர்,தேவையான உப்பு.எலுமிச்சை ஜூஸ் சேர்த்து நன்றாக குலுக்கவும்,'கடைசியில் கொத்தமல்லித்தழையை தூவவும்.

வண்ண வண்ண சாலட் நார் சத்து நிரம்பிய ஆரோக்கியமான ஒன்று.

Friday, February 16, 2018

Energy Smoothie

தேவையானவை:
சிறிய வாழைப்பழம் 1
சிறிய ஆப்பிள்  1
பசலைக்கீரை  10 இலைகள்
Blueberry                 10
Strawberry                2
அன்னாசி             4 துண்டுகள்
தயிர்                        1/4 கப்
தண்ணீர்                1/2 கப்
--------------------

செய்முறை:
எல்லாவற்றையும் மிக்சியில் ( juicer) நன்றாக  அரைக்கவும்.
பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த  smoothie யை
சில்லென்று கொடுத்தால் உடல் சூடு தணியும்.


Monday, February 12, 2018

தூவல் பனீர் கிரேவி

தேவையானவை:

வெங்காயம்   1
தக்காளி  1
துருவிய பனீர் 2 கப்
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
காரப்பொடி 1 தேக்கரண்டி
மசாலாத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------------------
செய்முறை:

வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நடுக்கிக்கொள்ளவும்.
வாணலியில்  அடுப்பில்  வைத்து சிறிது எண்ணெயில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.
அதனுடன் தக்காளியையும் சேர்த்துவதக்கி தேவையான உப்பும் காரப்பொடி,மசாலாத்தூள் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
கடைசியில் துருவிய பனீர் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.
கொத்தமல்லித்தழையை தூவவும்.

தூவல் பனீர் கிரேவி சப்பாத்திக்கு ஏற்ற sidedish
Sandwich ஆகவும் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்


Thursday, February 1, 2018

சேம்பு இலை பொரியல்

தேவையானவை:

சேம்பு இலை   4
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
துவரம் பருப்ப் 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
பயத்தம்பருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல் 3
பெருங்காயம் 1 துண்டு
--------
செய்முறை:
முதலில்  மூன்று  பருப்புகளையும் இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.
-------
சேம்பு இலையை பின்புறமாக ஒரு தட்டில் வைத்து பாதியாக கட் பண்ணி அதன் மேல் எண்ணையை தடவி அரைத்த மாவை பரவலாக இடவேண்டும்

பின்னர் அதனை சுருட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து பதினைந்து நிமிடம் கழித்து எடுக்கவேண்டும்.

இட்லி தட்டிலிருந்து எடுத்து சிறு துண்டுகளாக கட் பண்ணவேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெயில் சேம்பு துண்டுகளை பொரித்து எடுக்கவேண்டும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...