Thursday, August 28, 2008

காலிஃபிளவர் பக்கோடா

தேவையானவை:

காலிபிளவர் 1
கடலை மாவு 1 கப்
சோளமாவு 2 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது
எலுமிச்சம்பழ சாறு 2 டேபிள்ஸ்பூன்

அரைக்க:
மிளகாய் வற்றல் 3
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்

செய்முறை:

காலிபிளவரை சிறு சிறு கொத்துக்களாக ஆய்ந்து பின்னர் தண்ணீரில் சிறிது உப்பு போட்டு வேகவைக்கவும்.வெந்ததும் வடிகட்டி வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் எலுமிச்சம்பழ சாறு சேர்த்து அரைக்கவும்.
வடிகட்டிய காலிபிளவருடன் கடலைமாவு,சோளமாவு அரைத்த விழுது சிறிது உப்பு கலந்து நன்றாக பிசறி எண்ணையில் பொறித்து எடுக்கவும்.

Sunday, August 24, 2008

Bakar Vadi (Maharashtrian dish)

தேவையானவை:-

கடலைமாவு 3 கப்
சோளமாவு 1 1/2 கப்
மிளகாய் தூள் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
புளித்தண்ணீர் அரை கப்

பூரணம் செய்ய:

வெள்ளை எள் 1/4 கப்
துருவிய கொப்பரை 1/4 கப்
கசகசா 1/4 கப்
கொத்தமல்லி தழை சிறிதளவு
மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
மராட்டி மசாலா பொடி 2 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி அரை டீஸ்பூன்
சர்க்கரை 2 டீஸ்பூன்
(மராட்டி மசாலா பொடி எல்லா கடைகளிலும் கிடைக்கும்.
எனினும் கீழே அதன் செய்முறை எழுதியிருக்கிறேன்)

செய்முறை:
முதலில் பூரணம் செய்துகொள்ளவேண்டும்.
வெள்ளை எள்,துருவிய கொப்பரை,கசகசா மூன்றையும் தனித்தனியாக
வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.
இதனுடன் உப்பு,கொத்தமல்லித்தழை,மேலே குறிப்பிட்ட பொடி வகைகள்,
சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து பூரணம் செய்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர் கடலைமாவு,சோளமாவு,உப்பு,மிளகாய்தூள் எல்லாவற்றையும் சேர்த்து
மாவு போல் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக வைக்கவும்.
ஒரு உருண்டையை எடுத்து வடை போல தட்டி அதன் மேல் புளித்தண்ணீர் தடவி
சிறிது பூரணம் வைத்து காலண்டர் அல்லது பேப்பர் சுருட்டுவதுபோல் சுருட்டி
ஓரங்களை சீல் செய்து எண்ணையில் பொறித்து எடுக்கவும்.
இது போல எல்லா உருண்டைகளையும் செய்யவும்.
இது ஒரு மாலை நேர சிற்றுண்டி.

மராட்டி மசாலா பொடி செய்யும் முறை:-

பூண்டு 6 பல்
தனியா 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 5
மிளகு 4
சீரகம் 1 டீஸ்பூன்
ஏலக்காய் 3
பட்டை 1 துண்டு
மராட்டி மொக்கு 1
ஜாதிக்காய் 1
எல்லாவற்றையும் வறுத்து பொடி செய்யவேண்டும்.
Labels: சமையல்

Saturday, August 23, 2008

வேர்க்கடலை அல்வா

தேவையானவை:

வேர்க்கடலை 2 கப் (வறுத்த வேர்க்கடலை)
வெண்ணைய் கால் கப்
பால் பவுடர் 1 கப்
ஏலக்காய் பொடி 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை 1 கப்
vennila essence 1 drop
தண்ணீர் 1 கப்

செய்முறை:

வேர்க்கடலை தோலை உரித்துவிட்டு பொடியாக அரைக்கவும்.
பால் பவுடரை தண்ணீரில் கலந்து அதனுடன் பொடியாக்கிய வேர்க்கடலை
சர்க்கரை,வெண்ணைய் மூன்றையும் கலந்து அடுப்பில் வைத்து விடாமல் கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் திக்காக வந்தவுடன் ஏலப்பொடி,வெனிலா எஸன்ஸ் சேர்த்து
கிளறவும்.
ஒரு பெரிய தட்டை எடுத்து அதில் நெய் தடவி வேர்க்கடலை கலவையை ஊற்றி
ஆறினவுடன் வில்லை போடவும்

Thursday, August 21, 2008

பாதாம் மில்க் ஷேக்

தேவையானவை:

பாதாம் 15
ஏலக்காய் 8
சோம்பு 1 டேபிள்ஸ்பூன்
மிளகு 10
கசகசா 1 டீஸ்பூன்
பால் 2 கப்
சர்க்கரை 4 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் 1 கப்

செய்முறை:-

பாதாம்பருப்பை இரவிலே ஊறவைத்து அடுத்தநாள் காலையில்
அரை கப் தண்ணீருடன் மிக்சியில் விழுது போல அரைக்கவும்.
ஏலக்காய் தோலை எடுத்துவிட்டு சோம்பு, மிளகு,கசகசாவுடன்
மீதியுள்ள தண்ணீருடன் ஒரு மணிநேரம் ஊறவைத்து வடிகட்டவும்..
பின்னர் வடிகட்டிய தண்ணீருடன் அரைத்துவைத்த விழுது.பால்,
சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து மிக்சியில் whipper ல் அடிக்கவும்.
சுவையான milk shake ready.

Lassi க்கு பாலுக்கு பதில் தயிர் சேர்க்கவும்.
rose essenceஇரண்டு துளி சேர்க்கவும்.

Tuesday, August 19, 2008

கசகசா குருமா

தேவையானவை:
பீன்ஸ் 15
காரட் 2
உருளைக்கிழங்கு 2
(மூன்றையும் நீளவாக்கில் நறுக்கவும்)
வெங்காயம் 1
தயிர் அரை கப்
உப்பு தேவையானது

அரைக்க:-
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்
பச்சைமிளகாய் 4
கசகசா 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி 6
தேங்காய் துருவல் அரை கப்

தாளிக்க:-
பட்டை,லவங்கம்,ஏலக்காய்,எண்ணைய்

செய்முறை:-

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டுநீட்டவாக்கில் நறுக்கிய காய்கறிகளை
சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை நன்றாக விழுதுபோல் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
எண்ணைய் காயவைத்து பட்டை,லவங்கம்,ஏலக்காய் தாளித்து
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து அதனுடன்வேகவைத்த காய்கறிகளையும்
உப்பையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.
கடைசியில் தயிரை சேர்த்து கிளறி இறக்கவும்.

Sunday, August 17, 2008

Chilli Paneer

தேவையானவை:-

Paneer cubes ஒரு கப்
சோள மாவு 1 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,தண்ணீர் தேவையானது
எலுமிச்சம்பழ சாறு 1 டேபிஸ்பூன்
கொத்தமல்லிதழை அரை கப்

ஒரு bowl யை எடுத்துக்கொண்டு அதில் கீழ்குறிப்புட்டுள்ள பொருட்களை
போடவும்.

சீரகப்பொடி,இஞ்சிபூண்டு விழுது,தனியா பொடி,
chilli garlic sauce,பொடித்த மிளகு,காரப்பொடி,soya sauce,
எல்லம் அரை டீஸ்பூன்.
பூண்டு 4 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் 3 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:-

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சோள மாவு,மைதா மாவு,
இஞ்சிபூண்டு விழுது,சிறிது உப்பு எல்லாவற்றையும் அரை கப் தண்ணீர் விட்டு
பிசையவும்.அந்த கலவையில் Paneer cubes யை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக
எண்ணையில் பொறித்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணைய் விட்டு bowl ல் வைத்துள்ள எல்ல பொருட்களையும்
போட்டு நன்றாக வதக்கி சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும்.உப்பு சேர்க்கவும்.
இறக்கினவுடன் எலுமிச்சம்பழ சாறை விடவும்.
வருத்த paneer cubes யை இதில் சேர்த்து நன்கு பிரட்டவும்.
கடைசியில் கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கி தூவவும்.

Friday, August 15, 2008

அவியல்

தேவையானவை:
கீழ்கண்ட காய்கறிகளை நீட்டவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவேண்டும்

1.சேனைக்கிழங்கு 1 கப்
2.காராமணி 1 கப்
3.கத்திரிக்காய் 1கப்
4.முருங்கைக்காய் 1 கப்
5.காரட் 1 கப்
6.வாழைக்காய் 1 கப்
7.கறிவேப்பிலை ஒரு கொத்து
8.தயிர் 1 கப்

அரைக்க:
தேங்காய் 1 கப் (துறுவியது)
பச்சைமிளகாய் 3
சீரகம் 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு கடாய் எடுத்துக்கொண்டு தேங்காயெண்ணையில் சீரகம் கறுவேப்பிலை
தாளிக்கவும்.
பின்னர் காய்கறிகளை வதக்கவும்.தண்ணீர் விட வேண்டாம்
அரைத்து வைத்த விழுதை போட்டு வதக்கவும்.
பச்சை வாசனை போனபின் தயிரை விடவும்.
இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...