மதுரையில் பிரசித்திபெற்ற குளிர்பானம்
தேவையானவை:
பால் 4 கப்
பாதாம் பிசின் 1 டேபிள்ஸ்பூன்
நன்னாரி சிரப் 1 டேபிள்ஸ்பூன்
அல்லது
ரோஸ் எஸன்ஸ்
ஐஸ்கிரீம் தேவையானது
செய்முறை:
பாதாம் பிசின் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.பிசின் போல் இருக்கும்.இதனை தண்ணீரில் எட்டு மணிநேரம் ஊறவைக்க...ஜெல்லி போன்று வந்துவிடும்.
பாலை நன்கு சுண்டக் காய்ச்ச வேண்டும்.நான்கு கப் பால் இரண்டு கப்பாக ஆகவேண்டும்.இப்போது பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.பின் பாலை ஆறவைத்து ஃப்ரிட்ஜில் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் வைக்கவேண்டும்.
ஒரு கண்ணாடி தம்ளரை எடுத்துக்கொண்டு அதில் அரை கப் குளிர்ந்த பால் ...ஒரு டேபிள்ஸ்பூன் ஜெல்லியான பதாம் பிசின் சேர்த்து அதன் மீது நன்னாரி சிரப் ..அல்லது ரோஸ் எஸன்ஸ்
விடவும்.ஐஸ்கிரீமை மேலே போடவும்.
வெயில் நேரத்தில் குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் விரும்பிக் குடிக்கும் சத்து மிகுந்த குளிர்பானம் இது.
பாதாம் பிசின் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்
34 comments:
நான் ஒரு வாட்டி குடித்து இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கும். ஆனா இன்னிக்கிதான் ரொசிப்பி தெரியும். காட்டாயம் செய்து பார்த்து சொல்லுகிறேன் காஞ்சனா.
சுப்பர் கோடை காலத்துக்கேத்த பானம்!!
ஆஹா, அருமையான பகிர்வு.. இந்தூர்ல பாதாம்பிசினுக்கு நான் எங்கே போவேன்?
Yummy refreshing drink :-)
வருகைக்கு நன்ற் prabhadamu.செய்து பாருங்கள்
வருகைக்கு நன்றி Menaga
ஹா ஹா ஜிகர் தண்டா பார்த்ததும் வடிவேலு படம் ஆதவ்ன் ஞாபகம் தான் வருது.
வருகைக்கு நன்றி அநன்யா மஹாதேவன்
வருகைக்கு நன்றி Aruna Manikandan
naan idhuvarai kudithathu illai thanks for the recipe. sugar podalaiye?
//Jaleela said...
ஹா ஹா ஜிகர் தண்டா பார்த்ததும் வடிவேலு படம் ஆதவ்ன் ஞாபகம் தான் வருது.//
:-)))
//kathiravan said...
naan idhuvarai kudithathu illai thanks for the recipe. sugar podalaiye?
//
இதற்கு சர்க்கரைத் தேவையில்லை
அவ்வப்போது ஜிகர்தண்டா வலைப்பதிவுகளில் தலைதூக்குகிறது. நானும் சளைக்காமல் பின்னூட்டம் இடுகிறேன்.
ஜிகர்தண்டாவைப் பற்றிய என்பதிவுகள் இதோ
http://sivacalgary.blogspot.com/2006/05/blog-post.html
http://sivacalgary.blogspot.com/2006/09/blog-post.html
அட இது நம்ம ஊரு ஐட்டம்... :-)
நல்லா இருக்கும்.
உங்க ரெசிபிக்கு ரொம்ப நன்றிங்க...இருந்தாலும் இதுல இருக்கற இத்தனை நெளிவு சுளிவு தயாரிப்பு முறை மற்றும் தி.நகர்ல இருக்கற முருகன் இட்லிக்கடையின் ஜிகிர்தண்டா வியாபாரம் ரெண்டையும் கருத்துல கொண்டுங்க ...நான் வீட்ல தயாரிக்கற திட்டத்த கை விடறேனுங்க....எனிவே நன்றிங்க...ஓட்டு உங்களுக்குங்க...வரேனுங்க...
-கிரி
http://sasariri.com
வருகைக்கு நன்றி ரோஸ்விக்
வருகைக்கு நன்றி..கால்கரி சிவா
உங்கள் வலைப்பூவையும் பார்த்தேன்
வருகைக்கும்..ஓட்டிற்கும் நன்றி கிரி..
முருகன் இட்லி கடையில்..ஜிகர்தண்டா மீதி ஐஸ்கிரீம்..மற்றும் பாசந்தியும் போட்டுத் தருவார்கள்.மற்றபடி செய்முறை இதுதான்..
ஓ ஜிகிர்தாண்டாவில் போடப்படுவது பாதாம் பிசினா? நான் இத்தனை நாள் சோத்துக்கத்தாழையில் இருந்து எடுக்கப்படும் சதைப்பகுதி என்று நினைத்துருந்தேன். வடசென்னையின் பல பகுதிகளில் விற்றாலும், இதுவரை இதை நான் சாப்பிட்டதில்லை. தகவலுக்கு நன்றி.
வருகைக்கு நன்றி
பித்தனின் வாக்கு
//பாதாம் பிசின் 1 டேபிள்ஸ்பூன்//
இதற்கு என்ன ஆங்கில பெயர்?
பாதாம் பிஸினுக்கு நான் எங்கே போவேன் :(
அருமையான பகிர்வு..
அருமையான பகிர்வு..
Jigardanta is famous in madurai,,when i was doing my college ter i enjoyed this drink,,,it taste yummy n delicious,,,thanks for sharing dear,,, looks delicious n perfect,,,,take care n keep smiling
வருகைக்கு நன்றி வி. ஜெ. சந்திரன்.
பாதாம் பிசின் ஆங்கில பெயர் Almond Gum.பாதாம் மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.
வருகைக்கு நன்றி Thooya
வருகைக்கு நன்றி Sangkavi
வருகைக்கு நன்றி SathyaSridhar
Nice post yaar...
வருகைக்கு நன்றி மதுரைக்காரன்
mm..chillll:-)
வருகைக்கு நன்றி இயற்கை
மிக்க நன்றி
Post a Comment