Wednesday, March 31, 2010

மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்



தேவையானவை:

மரவள்ளிக்கிழங்கு 1 பெரிய துண்டு
காரப்பொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது



செய்முறை:

மரவள்ளிக்கிழங்கின் தோலை சீவிவிட்டு மெல்லிய வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.நறுக்கிய துண்டுகளை தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.ஊறியபின் தண்ணீரிலிருந்து எடுத்து ஒரு பேப்பரில் பரவலாக பிரித்து போடவும்.நன்றாக காய வேண்டும்.
கடாயில் எண்ணைய் வைத்து எண்ணைய் நன்கு காய்ந்தவுடன் அடுப்பை தணித்து காயவைத்த மரவள்ளித்துண்டுகளை ஒவ்வொன்றாக போடவும்.பொரித்த சிப்ஸ்களை பேப்பர் டவலால் ஒத்தி எடுத்து தேவையான உப்பு,காரப்பொடி சேர்த்து பிசறவும்

Sunday, March 28, 2010

வல்லாரை மசியல்



தேவையானவை:
வல்லாரை கீரை 2 கப் (பொடியாக நறுக்கியது)
பயத்தம்பருப்பு 1/4 கப்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு.எண்ணைய் தேவையானது

அரைக்க:

தேங்காய் துருவல் 1/4 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 1
கறிவேப்பிலை சிறிதளவு






செய்முறை:

முதலில் பயத்தம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் பெருங்காயத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும்.(4 விசில் விடவேண்டும்).அரைக்கக் கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.வல்லாரைக் கீரையை காம்புகளை அகற்றிவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் சிறிது தண்ணீர் விட்டு பொடியாக நறுக்கிய வல்லாரைக் கீரையை சேர்த்து வேக வைக்க வேண்டும்.கீரை நன்றாக வெந்ததும் வெந்த பயத்தம்பருப்பை உப்புடன் சேர்க்க வேண்டும். கரண்டியால் நன்கு மசிக்கவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

அடுப்பை அணைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.

வல்லாரைக் கீரை ஞாபக சக்தியை வளர்க்கும் என்பார்கள்

Tuesday, March 23, 2010

பூண்டின் மருத்துவக் குணங்கள்


பூண்டு ஒரு அபூர்வ மருத்துவ சக்தியாயும் சிறந்த கிருமி நாசினியாயும் செயல்படுகிறது.

இதன் மருத்துவ குணங்கள்:

வியர்வையை பெருக்கும்.உடற் சக்தியை அதிகப்படுத்தும்.சிறுநீர் தாராளமாக பிரிய வகைச்செய்யும்.தாய்ப்பாலை விருத்தி செய்யும்.ரத்தக்கொதிப்பை தணிக்கும்.

பூண்டை உப்பு சேர்த்து இடித்து சுளுக்கினால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் சுளுக்கு நீங்கும்.

ஒரு வெள்ளை பூண்டு,ஏழு மிளகு,ஒன்பது மிளகாய் இலை இவைகளை சேர்த்து காலை மாலை சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் போய்விடும்.

பல்வலியால் அவதிப்படுபவர்கள் இரண்டு பூண்டு பரலை உரித்து வலி உள்ள இடத்தில் வைத்துக்கொண்டால் பல்வலி பறந்து விடும்.

நான்கு பூண்டு பல்லை பசும்பாலுடன்,கற்கண்டு,தேன் கலந்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை உண்டால் சீதபேதி குண்மாகும்.

பூண்டுடன் மிளகு,பெருங்காயம் இரண்டையும் சேர்த்து உண்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்கச்செல்லும்போது பூண்டுப்பால் பருக வேண்டும்.அதாவது பூண்டை பசும்பாலில் கொதிக்கவைத்தபின் பூண்டுடன் பாலை பருகி வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளையுடன் பூண்டை சேர்த்து உண்ண வேண்டும்.

பூண்டையும் இஞ்சியையும் சிறிது வென்னீரில் சேர்த்து அரைத்து காலை மாலை இரு வேளைகளிலும் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு வலி குணமாகும்.

பூண்டு கைகால் மூட்டுவலி,பித்தம்,ஒற்றைத்தலைவலி இவற்றை போக்கும்.

ரத்தத்தை தூய்மை படுத்தும்.மூளையை பலம்பெறச் செய்யும்

Saturday, March 20, 2010

சோயா பீன்ஸ் ஊத்தப்பம்




தேவையானவை:

சோயா பீன்ஸ் 1 கப்
தண்ணீர் 3 கப்
---
ரவை 1 கப்
வெங்காயம் 1
காரட் 1
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு தேவையானது

செய்முறை:

சோயாவை தண்ணீரில் நான்கு மணிநேரம் ஊறவைத்து மூன்று கப் தண்ணீருடன் மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டி சோயாபாலை தனியே எடுத்துவைக்கவும்.

ஒரு கப் ரவையுடன் சோயாபாலை கலந்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.

வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சிமூன்றையும் பொடியாக நறுகிக்கொள்ளவும்.

காரட்டை துருவிக்கொள்ளவும்.

கொத்தமல்லித்தழையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஊறவைத்துள்ள சோயாபால், ரவை கலவையுடன் நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை,சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

தோசைத் தவாவில் எண்ணைய் விட்டு எண்ணைய் காய்ந்ததும் தயாராக உள்ள மாவை ஒரு கரண்டி நடுவில் விட்டு சாதாரண ஊத்தப்ப அளவில் வார்த்து மேலே துருவிய காரட்டை தூவி எண்ணைய் ஊற்றவும்.இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

இதற்கு தக்காளி,வெங்காயம் ஆகியவற்றால் ஆன கார சட்னி நல்ல combination.

Wednesday, March 17, 2010

ஜிகர்தண்டா


மதுரையில் பிரசித்திபெற்ற குளிர்பானம்
தேவையானவை:

பால் 4 கப்
பாதாம் பிசின் 1 டேபிள்ஸ்பூன்
நன்னாரி சிரப் 1 டேபிள்ஸ்பூன்
அல்லது
ரோஸ் எஸன்ஸ்
ஐஸ்கிரீம் தேவையானது

செய்முறை:

பாதாம் பிசின் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.பிசின் போல் இருக்கும்.இதனை தண்ணீரில் எட்டு மணிநேரம் ஊறவைக்க...ஜெல்லி போன்று வந்துவிடும்.

பாலை நன்கு சுண்டக் காய்ச்ச வேண்டும்.நான்கு கப் பால் இரண்டு கப்பாக ஆகவேண்டும்.இப்போது பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.பின் பாலை ஆறவைத்து ஃப்ரிட்ஜில் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் வைக்கவேண்டும்.

ஒரு கண்ணாடி தம்ளரை எடுத்துக்கொண்டு அதில் அரை கப் குளிர்ந்த பால் ...ஒரு டேபிள்ஸ்பூன் ஜெல்லியான பதாம் பிசின் சேர்த்து அதன் மீது நன்னாரி சிரப் ..அல்லது ரோஸ் எஸன்ஸ்
விடவும்.ஐஸ்கிரீமை மேலே போடவும்.

வெயில் நேரத்தில் குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் விரும்பிக் குடிக்கும் சத்து மிகுந்த குளிர்பானம் இது.

பாதாம் பிசின் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்

Saturday, March 13, 2010

வெல்ல அடை,உப்புஅடை (காரடையான் நோன்பு )




14.3.2010 அன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.அன்று வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.
----

முதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை வரும்வரை வறுக்கவும்.
--

வெல்ல அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
தண்ணீர் 2 கப்

செய்முறை:

காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.
வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.
வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி
இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

உப்பு அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் துண்டுகள் 1/2 கப்
தண்ணீர் 2 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை
தூவிக்கொண்டே கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

Friday, March 12, 2010

பனீர் போண்டா


பனீர் துருவியது 1 கப்
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 1
காரட் 2
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
கடலைமாவு 1/2 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
bread crums 1/4 கப்
காரப்பொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

வெங்காயம்,காரட்,பச்சைமிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் துருவிய பனீர், மசித்த உருளைக்கிழங்கு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,காரட்,பச்சைமிளகாய்,காரப்பொடி,
துருவிய இஞ்சி,கடலைமாவு,சீரகம்,உப்பு,கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கெட்டியாக பிசைய வேண்டும்.வேீண்டுமென்றால் தண்ணீர் தெளித்தால் போதும்,
பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி bread crums ல் பிரட்டி எண்ணையில் பொறித்து எடுக்கவேண்டும்.

இதற்கு ஏற்ற side dish தேங்காய் சட்னி.

Sunday, March 7, 2010

மகளிர் தின ஸ்பெஷல்..செய்திகள்

இன்று மகளிர் தினம்..

உலகிலேயே முதன் முதலாக நியூஸிலாந்தில் மாகாண பிரதிநிதிகள் தேர்வு செய்ய 1893ல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப் பட்டது.1950ல் இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்கள் பெண்களுக்கு சம உரிமைகளை வழங்கின.புருனே நாட்டில் இன்றுவரை பெண்களுக்கு வாக்குரிமை இல்லை

2)கிட்டத்தட்ட 50 கோடி பெண்கள் வாழும் நாடு இந்தியா..அதில் 48.3 % கல்வி அறிவு பெற்றவர்கள்.28 % வேலையில் உள்ளவர்கள்

3)உலக அளவில் கலப்புத் திருமணங்களில் 40 % இந்தியாவில் தான் நடக்கிறது.

4)பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் புள்ளிவிவரப்படி அதிகரித்து வருகின்றன.2007 ஆம் ஆண்டு இந்தியாவில் 20737 வழக்குகள் பதிவாகி உள்ளன.குற்றவாளிகள் 92 சதவிகிதத்திற்கு மேல் தெரிந்தவர்களாகவே உள்ளனர்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.இது நிறைவேறினால் 33.3 % பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்கள்.

பெண்களுக்கான பிரச்னைகள் முழுதும் இன்னும் தீரவில்லை என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய ஒரு கசப்பான செய்தியே!

இனி..மகளிர் தினத்தை ஒட்டி ஒரு ஸ்வீட் ரெசிபி பார்ப்போம்


ஓட்ஸ் சர்க்கரைப் பொங்கல் :



தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்
பொடித்த வெல்லம் 3/4 கப்
முந்திரிபருப்பு 10
திராட்சை 10
நெய் 1/4 கப்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
கேசரி பவுடர் 1/2 டீஸ்பூன்
பால் 1/4 கப்

செய்முறை:

பயத்தம்பருப்பை குக்கரில் வைத்து நன்கு குழைய வேகவிடவேண்டும். (4 விசில்
)தனியே எடுத்துவைக்கவும்.
வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவேண்டும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு முதலில்
முந்திரிபருப்பையும்,திராட்சையையும் சிறிது நெய்யில் வறுத்து
வைக்கவேண்டும்.அதே வாணலியில் ஓட்ஸை பொன்னிறமாக வறுக்கவேண்டும்.

ஒரு அகண்ட அடி கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கப்
தண்ணீர் விட்டு,தண்ணீர் நன்கு கொதித்தவுடன் ஓட்ஸை சேர்த்து
கிளறவேண்டும்.ஓட்ஸ் நன்றாக வெந்ததும்
தயாராக உள்ள வெந்த பயத்தம்பருப்பை சேர்த்து கிளற வேண்டும்.பின்னர்
வடிகட்டிய வெல்லத்தையும் மீதமுள்ள நெய்யுடன் இந்த கலவையில்
சேர்க்கவேண்டும்.
ஓட்ஸ்,பயத்தம்பருப்பு,வெல்லம்,நெய் எல்லாம் நன்கு சேரும்வரை
அடிபிடிக்காமல் கிளறவேண்டும். பொதுவானவை

அடுப்பை தணித்து பாலில் கேசரிப்பவுடரைக் கலந்து ஓட்ஸ்
சர்க்கரைப்பொங்கலில் கலக்கவேண்டும்.

கடைசியில் வறுத்த முந்திரி,திராட்சை சேர்க்கவேண்டும்.

Tuesday, March 2, 2010

ஸ்ட்ராபெர்ரி,பைன்-ஆப்பிள் ஸ்மூதி


தேவையானவை
ஸ்ட்ராபெர்ரி 1 கப் (நறுக்கியது)
பைன்-ஆப்பிள் 1 கப் (நறுக்கியது)
மலை வாழைப்பழம் 2
பால் 1 கப்
தூளாக்கிய ஐஸ்கட்டி சிறிதளவு
சர்க்கரை தேவையானது

செய்முறை:

மேற்கூறிய எல்லாப் பொருட்களையும் Mixie or Blender ல் நைசாக அரைக்கவும்.

குழந்தைகளின் பரிட்சை நேரமிது.
பரிட்சை எழுதி முடித்து வீடு திரும்பும் மாணவ/மாணவியருக்கு கொடுக்க புத்துணர்ச்சி ஏற்படும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...