Monday, February 25, 2013

கீரை அடை




தேவையானவை:
புழுங்கலரிசி 1 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
பசலைக்கீரை 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
மிளகாய் வற்றல் 4
பெருங்காயம் 1 துண்டு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:


புழுங்கலரிசி,துவரம்பருப்பு,கடலைப்பருப்பு,மிளகாய் வற்றல் எல்லாவற்றையும் நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.பெருங்காயத்தை தனியே ஊறவைக்கவேண்டும்.
ஊறியதும் வடிகட்டி தேவையான உப்பு சேர்த்து மிக்சியில் சற்றே கரகரப்பாக அரைக்கவேண்டும்.
அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை சேர்த்து கலக்கவேண்டும்.


-------
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு கரண்டியில் அடை மாவை ஊற்றி சற்று கெட்டியாக வார்க்கவேண்டும்.அடை ஒரே பதத்தில் வேகுவதற்காக நடுவில் ஒரு துளையிட்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வந்ததும் திருப்பி போட்டு சற்று நேரம் கழித்து எடுக்கவும்.
------
அடை அவியல் தான் நல்ல காம்பினேஷன். இட்லி மிளகாய் பொடியுடன் தயிர் சேர்த்தும் சாப்பிடலாம்.
பொடித்த வெல்லத்துடனும் சாப்பிடலாம்.
-------
எல்லா கீரைகளிலும் செய்யலாம்.குறிப்பாக முருங்கைக்கீரை அடை ருசியோ ருசி.

Thursday, February 21, 2013

கத்தரி..உருளை பொரியல்



தேவையானவை:

உருளைக்கிழங்கு 4

கத்தரிக்காய் 4

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

கறிப்பொடி 2 டேபிள்ஸ்பூன்

உப்பு ,எண்ணைய் தேவையானது



செய்முறை:


உருளைக்கிழங்கையும் கத்தரிக்காயையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய உருளைக்கிழங்கையும்,கத்தரிக்காயையும் சேர்த்து

உப்பு,மஞ்சள்தூள்,கறிப்பொடி தூவி எண்ணைய் சேர்த்து பிசிறவும்.

Oven ல் வைப்பதாக இருந்தால் oven ஐ 400 டிகிரி யில் pre heat செய்து பின்னர் cooking time 25 நிமிடம் வைக்கவேண்டும்.

ovenல் இருந்து எடுத்து நன்றாகக் கிளறி மீண்டும் பத்து நிமிடம் வைக்கவேண்டும்.

நேரடியாக அடுப்பிலும் செய்யலாம்.

வாணலியில் எண்ணைய் வைத்து உருள,கத்தரிக் கலவையை சேர்த்து பிரட்டவேண்டும்.

எண்ணைய் கூடுதலாக விட்டு வறுக்கவேண்டும்.

----

கறிப்பொடி செய்யும் முறை:

தேவையானவை:

தனியா 2 கப்

மிளகாய் வற்றல் 10

கடலைப்பருப்பு 1/2 கப்

உளுத்தம்பருப்பு 1/4 கப்

பொட்டுக்கடலை 2 டேபிள்ஸ்பூன்

எள் 1/4 கப்

கசகசா 1 டேபிள்ஸ்பூன்

தேங்காய் துருவல் 1 கப்

பெருங்காய்ம் 1 துண்டு

கறிவேப்பிலை சிறிதளவு

----

எள்,பெருங்காயம் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் தனித்தனியாக எண்ணையில் வறுக்கவேண்டும்.

பெருங்காயத்தை எண்ணையில் பொரிக்கவேண்டும்.

எள்ளை சிறிது தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி வெறும் வாணலியில் வெடிக்கும் வரை வறுக்கவேண்டும்.

பின்னர் எல்லாவற்றையும் மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்.

இந்த கறிப்பொடியை ஒரு மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்..கெட்டுப்போகாது.

எல்லா விதமான பொரியலுக்கும் உபயோகப்படுத்தலாம்

Tuesday, February 12, 2013

இட்லி...சாம்பார்




இட்லிக்கு தேவையானது:

இட்லி ரவா 3 கப்
உளுத்தம்பருப்பு 1 1/4 கப்
அவல் 1/4 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
செய்முறை:
உளுத்தம்பருப்பை 4 அல்லது 5 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
வெந்தயத்தை தனியே ஊறவைக்கவேண்டும்.
அவலை ஊறவைக்கவேண்டியதில்லை.
------
உளுந்து ஊறியதும் உளுந்து,வெந்தயம்  தண்ணீரில் நனைத்த அவல் மூன்றையும் சேர்த்து கிரைண்டரில் 35 நிமிடம் அரைக்கவேண்டும்.
இட்லி ரவாவை ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் விட்டு இட்லிக்கு தேவையான உப்பை அதனுடன் சேர்த்து கெட்டியாக பிசற வேண்டும். அரை மணி நேரம் ஊறினால் போதும்.(உளுந்தை அரைக்க ஆரம்பிக்கும் போது இட்லி ரவாவை ஊறவைத்தால் போதும்)
உளுந்தை அரைத்தவுடன் பிசறிய இட்லி  ரவாவில் இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.(கலந்த மாவை மீண்டும் கிரைண்டரில் அரைக்கக்கூடாது)
இந்த மாவை 8 மணி நேரம் புளிக்கவைக்கவேண்டும்.
இட்லி மாவு ரெடி.
-------------------------------------------
சாம்பாருக்கு தேவையானது:
துவரம்பருப்பு 1 கப்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி 1 மேசைக்கரண்டி
-------
சின்ன வெங்காயம் 15
தக்காளி 2
----------
அரைக்க:
தனியா 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 5
வெந்தயம் 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
கடலைபருப்பு 1தேக்கரண்டி
துவரம்பருப்பு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 4
உப்பு,எண்ணெய் தேவையானது
---------
தாளிக்க:
கடுகு 1தேக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:

சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவேண்டும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
---------
துவரம்பருப்பை இரண்டு கப் தண்ணீருடன் மஞ்சள்தூள்,நல்லெண்ணெய்,சீரகம் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்கவேண்டும்.(4 விசில்)
---------
அரைக்கக்கொடுத்துள்ளவைகளில் முதலில்
வெறும் வாணலியில் சீரகத்தை பொரிக்கவேண்டும்.
அதனுடன் மிளகாய் வற்றல்,சின்ன வெங்காயம் இரண்டையும் தவிர்த்து மற்றவற்றை சேர்த்து வறுக்கவேண்டும்.
மிளகாய் வற்றலையும் வெங்காயத்தையும் எண்ணெயில் வதக்கவேண்டும்.
எல்லாவற்றையும் மிக்சியில் தண்ணீர் சேர்த்து விழுது போல் அரைக்கவேண்டும்.
------
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து சின்ன வெங்காயத்தையும் தக்காளியையும் வதக்கவேண்டும்.
வெங்காயம் வதங்கியபின் வேகவைத்த துவரம்பருப்புஅரைத்த விழுது,சாம்பார் பொடி,தேவையான உப்பு எல்லாவற்றையும் சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும். சாம்பார் நீர்க்க இருக்கவேண்டும். கொதித்தவுடன் அடுப்பை அணைக்கலாம்.
------
இட்லியை இந்த சாம்பாரில் மிதக்கவிட்டு உங்கள் காலை உணவை ருசியுங்கள்.

(முக்கிய குறிப்பு.   இந்த சாம்பாரில் புளியோ தேங்காயோ கிடையாது)

Sunday, February 3, 2013

தக்காளி, அவகோடா( Avocado) சாலட்



தேவையானவை:

தக்காளி 2
Avocado 2
வெங்காயம் 2
வெள்ளரிக்காய் 1
வினிகர் 1 டேபில்ஸ்பூன்
எலுமிச்சம்பழம் 1
ஆலிவ் எண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
மிளகு தூள் 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிதளவு

செய்முறை:


Avocado வை குறுக்கு வாட்டில் வெட்டி உள்ளே இருக்கும் கொட்டைகளை எடுத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி,வெங்காயம்,வெள்ளரிக்காய் மூன்றையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு நறுக்கிய எல்லாவற்றையும் போட்டு மேலே மிளகுத்தூள்,வினிகர் சேர்த்து Olive oil யை பரவலாக ஊற்றவும்.அதன் மேல்
எலுமிச்சம்பழத்தை சிறு சிறு வட்டமாக நறுக்கி வைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவவும்.
அரைமணிநேரம் ஊறவைத்து சாப்பிடலாம்.
Avocado ல் நிறைய விட்டமின் சத்துக்கள் உண்டு,எல்லா சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும் .

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...