Tuesday, September 27, 2016

தக்காளி சட்னி

தேவையானவை:

தக்காளி  10
மிளகாய் வற்றல்   5
சீரகம்  1 மேசைக்கரண்டி
பூண்டு 4 பல்
இஞ்சி ஒரு துண்டு
குடமிளகாய் 1
புளி   எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி

முந்திரிபருப்பு 6
கறிவேப்பிலை சிறிதளவு
புதினா சிறிதளவு
உப்பு தேவையானது
எண்ணெய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
-------
செய்முறை:


தக்காளியையும் குடமிளகாயையும் பொடியாக நறுக்கிக்கொண்டு எண்ணையில் நன்றாக வதக்கிகொள்ளவும்.
மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு,சீரகம்,பெருங்காயத்தூள் மூன்றையும் த்னியே வறுத்துக்கொள்ளவும்.
பூண்டு,இஞ்சி இரண்டையும் எண்ணெயில் வதக்கிக்கொள்ளவும்.
புளியை தனியாக வறுத்துக்கொள்ளவும்.
முந்திரிபருப்பை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

  புதினா,கறிவேப்பிலை வதக்கி,உப்பு சேர்த்து  எல்லாவற்றையும் ஒன்றாக நைசாக அரைக்கவும்.
கடைசியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து கொத்தமல்லித்தழையை தூவவும்.

Wednesday, September 21, 2016

தினை ரவா தோசை



தேவையானவை:
 தினை ரவா - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
தயிர் - ஒரு கப்
தண்ணீர்  2 கப்
இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு - 10 பருப்பு
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
வெங்காயம் 2
----------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
மிளகாய் வற்றல் 2
-----------------

செய்முறை:

தினை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.வறுத்த அரிசியை மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்.

 ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடி பண்ணிய தினை ரவா,அரிசி மாவு,தயிர்,தண்ணீர் தேவையான உப்புசேர்த்து  ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும்.வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்
கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன்,மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும். கலந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து
அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணைய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

இதற்கு சரியான side dish தக்காளி சட்னி,தேங்காய் சட்னி.

Tuesday, September 13, 2016

ஜவ்வரிசி இட்லி

தேவையானவை:

இட்லி ரவா 2 கப்
ஜவ்வரிசி 1 கப்
தயிர் 2 கப்
தண்ணீர் 2 கப்
துருவிய  தேங்காய் 1/2 கப்
ஆப்ப சோடா 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய்  தேவையானவை
-------
தாளிக்க:

கடுகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
---------
செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்  இட்லி ரவா,ஜவ்வரிசி இரண்டையும் கலந்து அதில் தயிர் போதுமான அளவு தண்ணீரும்  உப்பும் சேர்த்து  நன்றாக கலக்கவும்.8 மணி  நேரம் புளிக்க வைக்கவும்.

மாவு புளித்த பின் அதில் ஆப்பசோடா,தேங்காய் துருவல்,கொத்தமல்லித்தழை சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.

கலந்த மாவை இட்லி தட்டில்  15 நிமிடம் ஆவியில் வைத்து எடுக்கவும்.

Monday, September 5, 2016

பிந்தி மசாலா

  



 தேவையானவை:
 வெண்டைக்காய் 15
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
 மிளகாய் தூள்  2 தேக்கரண்டி
   கடலை மாவு  ஒரு மேசைக்கரண்டி
    அரிசி மாவு  ஒரு தேக்கரண்டி
    எண்ணெய்  தேவையான அளவு

   மசாலா செய்வதற்கு:

   வெங்காயம்  2
  தக்காளி  4
  இஞ்சி பூண்டு விழுது  ஒரு தேக்கரண்டி
   கரம் மசாலா  2 தேக்கரண்டி
   கசூரி மேத்தி  ஒரு தேக்கரண்டி
    வெண்ணெய்  ஒரு மேசைக்கரண்டி
    கொத்தமல்லி  அலங்கரிக்க
   உப்பு, எண்ணெய்  தேவையான அளவு
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி

செய்முறை:
வெண்டைக்காயை நன்றாகக் கழுவி துடைத்து நீளமாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய வெண்டைக்காய்,மஞ்சள்தூள்,உப்பு, மிளகாய்தூள்,அரிசி மாவு,கடலைமாவு,சிறித் எண்ணெய் சேர்த்து பிரட்டவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயை பொரித்து எடுக்கவும். 

வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.

கடாயில்வெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து தேவையான உப்புடன் நன்றாக வதக்கவும்.நன்றாக வதங்கியதும் மேலே கூறியுள்ள அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

பின்னர் அதில் பொறித்த வெண்டைக்காய்களை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்

கடைசியில் கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
சுவையான பிந்தி மசாலா ரெடி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...