Wednesday, October 31, 2012

வேர்க்கடலை சுண்டல்




தேவையானவை:

வேர்க்கடலை 2 கப்
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
மிளகாய் வற்றல் 2
உப்பு,எண்ணெய் தேவையானது
---------
செய்முறை:

வேர்க்கடலையை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வைக்கவும்.(மூன்று விசில்)
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெயில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்,கிள்ளிய மிளகாய் வற்றல் ஆகியவற்றை தாளித்து குக்கரிலிருந்து வேர்க்கடலையை வடிகட்டி இதனுடன் சேர்த்து கிளறவேண்டும்.
கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவேண்டும்.

Wednesday, October 24, 2012

செவியன் (SEVIYAN)





சேமியா வைக்கொண்டு செய்யப்படுவது செவியன்.

இஸ்லாமிய சகோதரர்கள்[ சகோதரிகளால் "ஈத் " பண்டிகைக்கு செய்யப்படும் முக்கியமான் இனிப்புகளில் ஒன்று.

இந்த இனிப்பின் தனித்துவம் என்னவென்றால்,இந்துக்களாலும் "சேமியா பாயசம் " என்ற பெயரில் விசேஷங்களுக்கு செய்யப்படுகிறது.

தவிர்த்து,இது நமது அன்றாட சமையலில் ஒரு DESSERT ஆகவும் செயல்படுகிறது.

 

தேவையானவை:

சேமியா 1 கப்
சர்க்கரை 1 1/2 கப்
பால் 3 கப்
முந்திரிபருப்பு 5
உலர்ந்த திராட்சை 5
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்

செய்முறை:


சேமியாவை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
முந்திரிபருப்பையும்,திராட்சையையும் பொன்னிறமாக நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி சேமியாவை சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.சர்க்கரை கரைந்ததும் பாலை ஊற்றி சிறிது கொதிக்கவிடவும்.
அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பால்,சர்க்கரை,சேமியா மூன்றும் ஒன்றாக சேர்ந்து வரும்போது ஏலக்காய் தூள் சேர்த்து
அடுப்பை அணைக்கவும்.
கடைசியில் வறுத்த முந்திரி,திராட்சை சேர்க்கவும்.

இந்தப் பதிவை பதிவுலக சிநேகிதி Asiya Omar அவர்களின் "My First Event-Feast of Sacrifice" க்கு அனுப்புகிறேன்.



Monday, October 22, 2012

பனானா -டேட்ஸ்..ஸ்மூத்தி




தேவையானவை:

வாழைப்பழம் 2
பேரீச்சம்பழம் 4
பால் 1 கப்
சர்க்கரை 1 மேசைக்கரண்டி
ஐஸ் கட்டிகள் சிறிதளவு
-------

செய்முறை:


மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் blender ல் போடு அரைக்கவும்.
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

Monday, October 15, 2012

CABBAGE பொரியல்




தேவையானவை:

முட்டைகோஸ் 1
பட்டாணி 1 கப்
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 2
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
 *கறிப்பொடி 2 மேசைக்கரண்டி
மசாலா தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் 1
உப்பு எண்ணெய் தேவையானது

தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
-------

செய்முறை:
முட்டைகோஸை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பச்சைமிளகாயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்.
------
முட்டைகோஸை சிறிது தண்ணீர். மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.
வெந்ததும் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து நன்கு கிளறி வடிகட்டவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் பச்சைமிளகாய்,பாட்டாணி சேர்த்து வதக்கி அதனுடன் வடிகட்டிய முட்டைகோஸை சேர்த்து வதக்கவும்.
பின்னர் கறிப்பொடி,மசாலா தூள் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
கடைசியில் எலுமிச்சம் பழ சாறை பிழையவும்.
*
http://annaimira.blogspot.com/2010/10/blog-post.html

Thursday, October 11, 2012

நவராத்திரியும் நைவேத்தியமும்






நவராத்திரி புரட்டாசி மாசம் மாளய அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் பூஜிக்கும் வழக்கம் உண்டு.தேவியின் பெருமைகளை ஒன்பது நாட்களும் சொல்லி வழிபடுவார்கள்.ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நைவேத்தியம் செய்வார்கள்.ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு நைவேத்தியம் விசேஷம்.அதைச்சொல்வதே இந்த பதிவு.
-----------
ஞாயிற்றுக்கிழமை: கோதுமை

கோதுமை அப்பம்:

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து 3/4 கப் பொடித்த வெல்லத்தை கரைத்துக்கொள்ளவும்.
அதில் கோதுமை மாவு 1 கப்,ரவை 1 மேசைக்கரண்டி,மைதா 1 மேசைக்கரண்டி சேர்த்து கரைக்கவும்.
ஏலப்பொடி,தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கரைத்து சிறு சிறு அப்பங்களாக எண்ணையில் பொரித்து எடுக்கவேண்டும்.
----------------------------
திங்கட்கிழமை: பாசிப்பயறு (பயத்தம்பருப்பு)

பாசிப்பயறு சுண்டல்:

ஒரு கப் பாசிப்பயற்றை கொஞ்சம் தண்ணீர் விட்டு வேகவைக்கவேண்டும்.நன்றாக வெந்ததும் வடிகட்டவேண்டும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணைய் வைத்து கடுகு பெருங்காயத்தூள் தாளித்து வடிகட்டிய பாசிப்பயற்றை தேவையான உப்புடன் சேர்த்து கிளறவேண்டும்.
கடைசியில் தேங்காய் துருவல்,இஞ்சி துருவல்,கறிவேப்பிலை சேர்த்து இறக்கவேண்டும்.
----------------------------
செவ்வாய் கிழமை: துவரம்பருப்பு:

துவரம்பருப்பு குணுக்கு:

துவரம்பருப்பு 1 கப்,கடலைபருப்பு 1/4 கப்,உளுத்தம்பருப்பு 1/4 கப்,புழுங்கலரிசி 1 மேசைக்கரண்டி .மிளகாய் வற்றல் 4, இவற்றை 2 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
இதனுடன் தேவையான உப்பு,சிறிது பெருங்காயம் சேர்த்து அரைக்கவேண்டும்.அரைத்த மாவில் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி கலந்து கறிவேப்பிலை சேர்த்து
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவேண்டும்.
-----------------------

புதன் கிழமை: காராமணி

காராமணி சுண்டல்

ஒரு கப் காராமணியை மூன்று மணி நேரம் ஊறவைத்து ஒரு தேக்கரண்டி சர்க்கரை,சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவேண்டும்.
பின்னர் வடிகட்டி வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள் தாளித்து வடிகட்டிய காராமணியை சேர்த்து வதக்கவேண்டும்.
சீரகம்,மிளகு,தனியா ஒவ்வொன்றும் ஒரு தேக்கரண்டி எடுத்து வறுத்து பொடி பண்ணி சேர்க்கவேண்டும்.
கடைசியில் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
-------------------------
வியாழக்கிழமை: கொண்டக்கடலை :

கொண்டக்கடலை சுண்டல்:

ஒரு கப் கொண்டக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவேண்டும்.
மறு நாள் குக்கரில் உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வைக்கவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்,இரண்டு வற்றல் மிளகாய் தாளித்து வடிகட்டிய கொண்டக்கடலையை சேர்த்து வதக்கவும்.
தேங்காயை சிறு சிறு துண்டங்களாக நறுக்கி சேர்க்கலாம்.
வேண்டுமென்றால் இஞ்சியைத் துருவி போடலாம்.
-------------------------
வெள்ளிக்கிழமை: புட்டு:

பச்சரிசியை மிஷினில் நைசாக மாவாக அரைத்துக்கொள்ளவேண்டும்.வாணலியில் இந்த மாவை எண்ணைய் விடாமல் சிவப்பாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
ஆறிய பின் மாவை சலித்து ஒரு பெரிய தட்டில் கொட்டி மிதமான வென்னீர் விட்டு பிசையவேண்டும். (உதிர்த்தால் உதிராக இருக்கும்படி பிசையவேண்டும்)
இந்த மாவை இட்லி தட்டில் ஆவியில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் சிறிது விட்டு (ஒரு கப் மாவிற்கு ஒரு கப் பொடித்த வெல்லம்) துருவிய வெல்லம் சேர்த்து உருண்டைப்பாகு வந்தவுடன்
ஆவியில் வைத்த மாவை சேர்த்து கிளறவும்.
வாணலியில் 1/4 கப் நெய் வைத்து காய்ந்ததும் புட்டு மாவுடன் ஏலப்பொடி சேர்த்து ஒரு கிளறு கிளற வேண்டும்.
தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போடவும்.
முந்திரிபருப்பை வறுத்துப் போடவும்.
---------------------
சனிக்கிழமை: எள்

எள் பர்ஃபி:

எள்ளை நீர் விட்டு நன்றாக களைந்துவிட்டு வடிகட்டி வெறும் வாணலியில் போட்டு வெடிக்கும் வரை வறுக்கவேண்டும்.
வறுத்த எள் ஒரு கப், வறுத்த வேர்க்கடலை ஒரு கப் இரண்டையும் 'நற நற' என்று பொடி பண்ண வேண்டும்.
வாணலியில் சிறிது தண்ணீர் வைத்து (ஒரு கப் பொடி பண்ணிய கலவைக்கு ஒரு கப் பொடித்த வெல்லம்) பொடித்த வெல்லம் ஏலத்தூள் சேர்த்து
கம்பிப்பாகு வந்ததும் பொடி பண்ணியதைப் போட்டு நன்கு கிளறி ஒரு தட்டில் நெய்யை பரவலாகத் தடவி கிளறியதைக் கொட்டி வில்லைகளாக போடலாம்.

Monday, October 8, 2012

காலிஃப்ளவர் மசாலா




தேவையானவை:

காலிஃப்ளவர் 1
வெங்காயம் 2
தக்காளி 2
பச்சை மிளகாய் 2
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
மசாலா தூள் 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு எண்ணெய் தேவையானது
--------
தாளிக்க:
கடுக் 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
---------
செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் காலிஃப்ளவரை வைத்து அதன் மேல் வென்னீர் இரண்டு கப் காலிஃப்ளவர் மூழ்கும் வரை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து
பத்து நிமிடம் மூடி வைக்கவேண்டும். பின்னர் தனித்தனி பூக்களாக எடுத்து வைக்கவேண்டும்.
வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

அடுப்பில் கடாயை வைத்து தாளிக்க வேண்டியவைகளை எண்ணெயில் தாளிக்கவேண்டும்.
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி அதனுடன்  தக்காளியையும் பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவேண்டும்.
அதனுடன் காலிஃப்ளவரை மஞ்சள் தூளுடன் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
காலிஃப்ளவர் வெந்ததும் உப்பு சேர்த்து  இஞ்சி பூண்டு விழுது,மசாலா தூள்,சாம்பார் பொடி சேர்த்து வதக்கவேண்டும்.
அடுப்பிலிருந்து இறக்கியபின் பொடியாக நறுக்கிய  கொத்தமல்லித்தழையை தூவவேண்டும்.

Thursday, October 4, 2012

காரட்..புதினா சூப்




தேவையானவை:

காரட் 5
பால் 1 கப்
புதினா 10 இலைகள்
மிளகு தூள் 1 தேக்கரண்டி
சர்க்கரை 1 தேக்கரண்டி
உப்பு சிறிதளவு
--------
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து காரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு கொதிக்கவிடவும்.

பாலை ஒரு பாத்திரதில் வைத்து பொங்கும் நிலை வருவதற்கு முன்பு அதில் புதினா இலைகளை சேர்த்து மூடி வைக்கவும்.
15 நிமிடம் கழித்து புதினா இலைகளை ஒரு கரண்டியால் எடுத்து விடவும்.

வேகவைத்த காரட்டை தண்ணீருடன்,புதினா சேர்த்த பால்,சிறிது உப்பு எல்லாவற்றையும் ஒரு blender ல் போட்டு அரைக்கவும்.
வேண்டுமென்றால் சிறிது பால் சேர்த்துக்கொள்ளலாம்.

Blender ல் இருந்து எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து மேலே மிளகு தூள் தூவவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...