Monday, March 28, 2016

சுண்டைக்காய் வத்தக்குழம்பு




தேவையானவை:

காய்ந்த சுண்டைக்காய் 1/2 கப்
பூண்டு 5 பல்
சின்ன வெங்காயம் 10
புளி எலுமிச்சை அளவு
நெய் 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் 1/4 கப்
உப்பு தேவையானது
--
 சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
சோம்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயம் 1 துண்டு

செய்முறை:


சுண்டைக்காயை நெய் விட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பூண்டு,சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
---
வாணலியில் கால் கப் நல்லெண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
உரித்த பூண்டு,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் புளிக்கரைசல்,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
மிளகாய்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள் சேர்க்கவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணைய் மேலே வந்ததும் இறக்கவும்.
கடைசியில் வறுத்த சுண்டைக்காயை போட்டுக்கலக்கவும்
——-
வெங்காயம் பூண்டு  இல்லாமலும் பண்ணலாம்..
சாம்பார் பொடிக்கு பதிலாக கீழே குறிப்பிட்ட பொடியை சேர்த்தும் பண்ணலாம்
மிளகாய்  வற்றல் 4,
தனியா 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலை-பருப்பு  1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மிளகு 1/2 டீஸ்பூன்
வெந்தய ம் 1 டீஸ்பூன்
எல்லாவற்றையும் வறுத்து பொடியாக்கி சேர்க்கலாம்.

Tuesday, March 22, 2016

சாமை குழிப்பணியாரம்



சாமை அரிசி 1 கப்
உளுந்து 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
வாழைப்பழம் 1
பொடித்த வெல்லம் 1/2 கப்
ஏலத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு ஒரு சிட்டிகை
--------
செய்முறை:
சாமை அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
சாமை அரிசியை வடிகட்டி நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
உளுந்து,தேங்காய் துருவல்,வாழைப்பழம்,பொடித்த வெல்லம் நான்கையும் நைசாக அரைக்கவேண்டும்.
அரைத்து வைத்துள்ள இரண்டு விழுதினையும் சேர்த்து சிட்டிகை உப்புடன் நன்கு கலக்கவேண்டும்.
ஏலத்தூள் சேர்க்கவேண்டும்.

குழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எல்லாக்குழிகளிலும் எண்ணைய் ஊற்றி மாவை சிறு கரண்டியால் ஊற்றவேண்டும்.மாவு வெந்ததும் திருப்பிப்போட்டு (குச்சியால் திருப்பவேண்டும்) மீண்டும் கொஞ்சம் எண்ணைய் ஊற்றி எடுக்கவேண்டும்.

Tuesday, March 15, 2016

புளி இஞ்சி


தேவையானவை:


இஞ்சி 1 கப் (நறுக்கியது)
புளி பெரிய எலுமிச்சை அளவு)
நல்லெண்ணைய் 1/4 கப்
பச்சைமிளகாய் 3
கடுகு 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
வெல்லம் சிறிதளவு

செய்முறை:


இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்.
பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் வெட்டிக்கொள்ளவேண்டும்.---
வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயத்தூள் தாளித்து
பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவேண்டும்.
நன்கு வதங்கிய பின் உப்பு,மஞ்சள்தூள்,புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
புளியும் இஞ்சியும் சேர்ந்து கெட்டியானவுடன் வெல்லம் சேர்த்து இறக்கவேண்டும்.

புளி இஞ்சியை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.பொங்கலுக்கு ஏற்ற side dish.
ஜீரணத்திற்கு நல்லது.

Thursday, March 10, 2016

வெல்ல அடை:.... உப்பு அடை ( காரடையான் நோன்பு )



14.3.2016  அன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.அன்று வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.
----
முதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை வரும்வரை வறுக்கவும்.   (அல்லது பதப்படுத்திய அரிசி மாவு கடைகளில் கிடைக்கிறது. அதை நன்றாக வறுத்து உபயோகப்படுத்தலாம்.)

-
வெல்ல அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
தண்ணீர் 2 கப்

செய்முறை:


காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.
வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.
வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி
இட்லி பாத்திரத்தில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

உப்பு அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் துண்டுகள் 1/2 கப்
தண்ணீர் 2 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை
தூவிக்கொண்டே கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...