Monday, May 31, 2010

எண்ணைய் கத்திரிக்காய் கறி


தேவையானவை:

கத்திரிக்காய் 20 (சின்ன கத்திரிக்காய்)
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு 2 டேபிள்ஸ்பூன்
காரப்பொடி 2 டேபிள்ஸ்பூன்
எண்ணைய்,உப்பு தேவையானது

செய்முறை:

கடையில் சிறு சிறு கத்திரிக்காய்களாக பார்த்து வாங்கவும்.
ஒவ்வொரு கத்திரிக்காயையும் முழுதாக வெட்டாமல் குறுக்குவாட்டில் முக்கால் பாகம் வெட்டிக்கொள்ளவும்.
--
ஒரு பாத்திரத்தில் மஞ்சள்பொடி,உப்பு,பெருங்காயத்தூள்,காரப்பொடி,அரிசிமாவு ஆகியவற்றை கொஞ்சம் எண்ணைய் விட்டு
பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த கலவையை ஒவ்வொரு கத்திரிக்காயின் உள்ளும் கொஞ்சம் கொஞ்சமாக வைக்கவும்.பின்னர் வாணலியில்
சிறிது எண்ணைய் ஊற்றி கத்திரிக்காய் உடையாமல் வதக்கி எடுக்கவும்












Wednesday, May 12, 2010

கம்மங்கஞ்சி




தேவையானவை:

கம்பு (Bajra) மாவு 1 கப்
பயத்தம்பருப்பு 1/2 கப்
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
---
மிளகுத் தூள் 1 டீஸ்பூன்
உப்பு தேவையானது

அல்லது

பால் 1/4 கப்
சர்க்கரை 1 டீஸ்பூன்

செய்முறை:

பயத்தம்பருப்பை 2 கப் தண்ணீருடன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.(3 விசில்).

கம்பு மாவை (dept.store ல் கிடைக்கும்) இரண்டு கப் தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து கிளறவும்.

Microwave ல் வைப்பதானால் ஒரு நிமிடம் போதும்.
வெந்த பயத்தம்பருப்பு,வேகவைத்த கம்பு மாவு இரண்டையும் சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு நிமிடம் கிளறவேண்டும்.

பின்னர் எடுத்து மிளகுத் தூள்,உப்பு சேர்த்து சாப்பிடலாம். அல்லது பால்,சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம்.

கம்பு,கேழ்வரகு போன்ற தானியங்களை நாம் படிப்படியாக மறந்து கொண்டிருக்கிறோம்,ஆனால் அவை வெய்யிலுக்கு உடலுக்கு குளிர்ச்சயைத் தரும்.

Sunday, May 9, 2010

உருளைக்கிழங்கு,பட்டாணி பட்டர் மசாலா


தேவையானவை:

சின்ன உருளைக்கிழங்கு 15
பச்சை பட்டாணி 1 கப்
வெங்காயம் 2
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
-----
அரைக்க:
பாதாம் பருப்பு 5
முந்திரிபருப்பு 5
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
கசகசா 1 டீஸ்பூன்
பட்டை 1 துண்டு
----
செய்முறை:

சின்ன உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பாதாம்பருப்பு,முந்திரிபருப்பு,கசகசா மூன்றையும் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பட்டையையும் பொட்டுக்கடலையைம் வறுத்து ஊறவைத்த பருப்புகள்,கசகசா எல்லாவற்றையும் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணய் சேர்த்து உருகினவுடன் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் பட்டாணி,உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
அரைத்த விழுதை உப்புடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,தனியா தூள் சேர்க்கவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.

இது பூரி,சப்பாத்தி,தோசை மூன்றுக்கும் ஏற்ற side dish.

Tuesday, May 4, 2010

மேத்தி லட்டு


தேவையானவை:
மேத்தி (முளைகட்டிய வெந்தய) பவுடர் 1 1/2 கப்
கோதுமைமாவு 1 கப்
பொடித்த சர்க்கரை 3/4 கப்
நெய் 1/4 கப்
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
சுக்குத் தூள் 1/2 டீஸ்பூன்
கசகசா 1/2 டீஸ்பூன்
பாதாம்பருப்பு 10
பால் 1/4 கப்

செய்முறை:

1.மேத்தி பவுடரில் பாலை தெளித்து நன்கு பிசறி ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.பின்னர் வாணலியில் நெய் விட்டு மேத்தி பவுடரை நன்கு வறுக்கவேண்டும்.
2.கோதுமை மாவை நெய் விட்டு நன்கு வறுக்கவேண்டும்.
3.வறுத்த மேத்தி மாவு,கோதுமை மாவு இரண்டையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் கட்டியில்லாமல் வரும்.
4.கசகசா வை அரை மணி நேரம் 1/4 டீஸ்பூன்தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
5.சர்க்கரை,ஊறவைத்த கசகசா,ஏலக்காய் தூள்,ஜாதிக்காய் தூள்,சுக்குத் தூள் எல்லாவற்றையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் நைசாக இருக்கும்.
6.பாதாம் பருப்பை ஒன்று இரண்டாக உடைத்துக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தில் மேத்தி மாவு,கோதுமைமாவு கலவை.சர்க்கரை கலவை,உடைத்த பாதாம்பருப்பு எல்லாவற்றையும் போட்டு (வேண்டுமென்றால் மொத்த கலவையையும் மிக்ஸியில் ஒரு சுற்று
சுற்றினால் மாவு சீராக இருக்கும்) நன்கு கலந்து நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி உருண்டைகளாக உருட்டவும்

Sunday, May 2, 2010

மங்களூர் போண்டா


தேவையானவை:

மைதாமாவு 2 கப்
அரிசிமாவு 1/2 கப்
தயிர் 1 1/2 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 5
இஞ்சி 1 துண்டு
சமையல் சோடா ஒரு சிட்டிகை
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் தயிர்,நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,சீரகம்,ஆப்பசோடா,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.பிறகு மைதாமாவை போட்டு
கிளறவும்.மைதாமாவு சேர்த்த கலவை கெட்டியாக வரும் போது அரிசிமாவை சேர்க்கவேண்டும்.இப்பொழுது மாவு இன்னும் கெட்டியாக வரும்.பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து எண்ணைய் நன்கு காய்ந்ததும் ஸ்லிம்மில் வைத்து போண்டா உருண்டைகளைப் போட்டு பொன் வறுவலாக பொரித்து எடுக்கவும்.

இதற்கு side dish தக்காளி sauce,chilly sauce.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...