Thursday, March 31, 2011

வாழைத்தண்டு தயிர் கூட்டு



தேவையானவை:        
வாழைத்தண்டு 1

தயிர் 1 கப்

உப்பு,எண்ணைய் தேவையானது
-------
அரைக்க:

தேங்காய் துருவல் 1/2 கப்

இஞ்சி 1 துண்டு

பச்சைமிளகாய் 3

சீரகம் 1/2 டீஸ்பூன்
---
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை 1 கொத்து
------
செய்முறை:

வாழைத்தண்டின் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் போடவும்.

அரைக்க கொடுத்துள்ளவைகள சிறிது தயிர் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிது தண்ணீர் விட்டு வாழைத்தண்டு துண்டுகளை வேகவைக்கவும்.

சிறிது வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.(வாழைத்தண்டிற்கு அதிக உப்பு தேவைப்படாது)

பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதையும் மீதமுள்ள தயிரையும் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.

நன்கு கொதித்தபின் கடுகு,உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
---
வாழைத்தண்டு சிறுநீரக கற்களை கரைக்கும் சக்தி உடையது.

Tuesday, March 29, 2011

பலாக்காய் கறி



தேவையானவை:          பலாக்காய்

பலாக்காய் 1

வெங்காயம் 2

இஞ்சிபூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

புளி 1 எலுமிச்சை அளவு

சர்க்கரை 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

-------

அரைக்க:

வெங்காயம் 1 டேபிள்ஸ்பூன்(பொடியாக நறுக்கியது)

தேங்காய் துருவல் 1/4 கப்

தனியா 1 டேபிள்ஸ்பூன்

கிராம்பு 2

சீரகம் 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 2

-------

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

-----

செய்முறை:

பலாக்காயை தோலை எடுத்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.நறுக்கிய துண்டுகளை தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைக்கவேண்டும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை அப்படியே மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.

------
ஒரு கடாயை அடுப்பில் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அதனுடன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும். இதனுடன் ஊறின பலாக்காயை வடித்து மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.
பலாக்காய் வெந்தவுடன் உப்பு,புளித்தண்ணீர், அரைத்த விழுதுசேர்த்து நன்கு கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்தபின் சர்க்கரை சேர்த்து அடுப்பை அணைக்கவேண்டும்..

Thursday, March 24, 2011

தென்மாவட்ட கொத்சு



இந்த கொத்சு தஞ்சாவூர் மாவட்டத்தின் சிறப்பு.

தேவையானவை:

கத்திரிக்காய் 6

சின்ன வெங்காயம் 10

புளி ஒரு எலுமிச்சை அளவு

பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

நெய் 2 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை 1 கொத்து

உப்பு,நல்லெண்ணைய் தேவையானது
---------
பொடி செய்ய:

கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

மிளகாய் வற்றல் 6

தனியா 1 டேபிள்ஸ்பூன்
-----
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
----
செய்முறை:

கத்திரிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து ஆறியபின் விழுதுபோல அரைத்துக்கொள்ளவேண்டும்.

அதே நெய்யில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.
----
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணைய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து புளியை
ஒரு கப் தண்ணீரில் கரைத்து தேவையான உப்புடன் கொதிக்கவைக்கவேண்டும்.
பின்னர் அதனுடன் அரைத்த கத்திரி விழுது,பொன்னிறமாக வதக்கிய வெங்காயம்,அரைத்த பொடி மூன்றையும்
சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தபின் நல்லெண்ணையில் பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை பொறித்து சேர்க்கவேண்டும்.

Tuesday, March 22, 2011

நார்த்தங்காய் பச்சடி



தேவையானவை:

நார்த்தங்காய் 2

பச்சைமிளகாய் 8

புளி ஒரு எலுமிச்சை அளவு

மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்

பொடித்த வெல்லம் 1/2 கப்

உப்பு,எண்னைய் தேவையானது

-------

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

----

செய்முறை:

நார்த்தங்காய்,பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
---
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய நார்த்தங்காய்

,பச்சைமிளகாய் இரண்டையும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

நார்த்தங்காய் நன்றாக வெந்ததும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

பின்னர் பொடித்த வெல்லத்தை சேர்க்கவும்.

வெல்லம் கரைந்து கெட்டியாக ஜாம் பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.

வெய்யிலுக்கு ஊறுகாய்க்கு பதிலாக இந்த பச்சடியை உபயோகிக்கலாம்

Sunday, March 20, 2011

மசாலா லஸ்ஸி


தேவையானவை:

தயிர் 2 கப்

நெல்லிக்காய் 2

மாங்காய் துண்டு 2

பச்சைமிளகாய் 2

கொத்தமல்லித்தழை சிறிதளவு

புதினா சிறிதளவு

இஞ்சி 1 துண்டு

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

உப்பு தேவையானது

செய்முறை:

தயிரை நன்கு கடைந்துகொள்ளவும்.

நெல்லிக்காயை ஒரு microwave cupல் சிறிது தண்ணீருடன் 2 நிமிடம் வைத்தால் சிறிது வெந்திருக்கும்.

உள்ளே இருக்கும் கொட்டையை சுலபமாக எடுத்துவிடலாம்.

மாங்காய் துண்டுகளின் தோலை சீவிவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கொத்தமல்லித்தழை,புதினா இரண்டையும் நன்கு ஆய்ந்து கொள்ளவும்.

இஞ்சியின் தோலை சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

--------
நெல்லிக்காய்,மாங்காய் துண்டுகள்,பச்சைமிளகாய்,கொத்தமல்லி,புதினா,இஞ்சி,பெருங்காயத்தூள்,
தேவையான உப்பு எல்லாவற்றையும் ஒரு கப் தயிரில் மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

பின்னர் மீதமுள்ள ஒரு கப் தயிரையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.

மசாலா லஸ்ஸி வெய்யிலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

Tuesday, March 15, 2011

ஓலன்



தேவையானவை:

பூசணி கீற்று 2

காராமணி 1 கப்

பச்சைமிளகாய் 4

தேங்காய் பால் 1 கப்

தேங்காய் எண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

செய்முறை:


பூசணி கீற்றுகளை தோலெடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

காராமணியை லேசாக எண்ணையில்லாமல் வறுத்து ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும்

பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் கீறிக்கொள்ளவும்.

------

அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய பூசணித்துண்டுகள்,வேகவைத்த காராமணி,

பச்சைமிளகாய், ஒரு கப் தண்ணீர்,சேர்த்து வேகவைக்கவும்.

பூசணித்துண்டுகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.

பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

கடைசியில் தேங்காய் எண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.

------

ஓலனை சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம்.

சப்பாத்தி,பூரிக்கும் சிறந்த side dish ஆகும். 

Sunday, March 13, 2011

ஓட்ஸ் இட்லி


தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
ரவை 1 கப்
தயிர் 1 1/2 கப்
காரட் 2
உருளைக்கிழங்கு 1
பீன்ஸ் 10
பட்டாணி 1/2 கப்
இஞ்சி 1 துண்டு
முந்திரிபருப்பு 10
நெய் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:



ஓட்ஸையும் ரவையயும் தனித்தனியாக எண்ணையில்லாமல் வறுக்கவும்.

பின்னர் தனித்தனியாக தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோலுரித்து துருவிக்கொள்ளவும்.
இஞ்சியை தோலுரித்து துருவிக்கொள்ளவும்.
பீன்ஸை பொடியாக நறுக்கிகொண்டு பட்டாணியுடன் microwave ல் சிறிது உப்பு சேர்த்து 3 நிமிடம் வைக்கவும்.

முந்திரிபருப்பை சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 1 1/2 கப் தயிர் விட்டு
அதனுடன் தண்ணீரில் ஊறவைத்த ஓட்ஸையும் ரவையையும் சிறிது உப்புடன் சேர்த்து மீண்டும் 15 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
15 நிமிடம் கழித்து தயிரில் துருவிய காரட்.உருளைக்கிழங்கு,இஞ்சி,வேகவைத்த பட்டாணி,பீன்ஸ்,வறுத்த முந்திரி எல்லாவற்றையும் சிறிது உப்புடன் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
இட்லி தட்டில் எண்ணைய் தடவி ஓட்ஸ் இட்லி மாவை ஊற்றி ஆவியில் 12 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
இதற்கு side dish வெங்காய காரச்சட்னி . 

Wednesday, March 9, 2011

தாளிச்ச சாதம்


தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்

நல்லெண்ணைய் 2 டேபிள்சபூன்

கடலைபருப்பு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

புளி சிறிதளவு

மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 4

கறிவேப்பிலை 1 கொத்து

கடுகு 1 டீஸ்பூன்
உப்பு    தேவையானது

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

முந்திரிபருப்பு 10

பாதாம் பருப்பு 5

செய்முறை:

பாசுமதி அரிசியை 1 1/2 கப் தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைத்து அப்படியே ele.cooker ல் வைக்கவும்.

----------

தேவையானவற்றில் குறிப்பிட்டுள்ளவைகளை ரெடியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவேண்டும்.

அடுப்பில் ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் விட்டு முதலில்

கடலைபருப்பு,உளுத்தம்பருப்பு தாளிக்கவேண்டும்.

அடுத்து புளியை நாரில்லாமல் எடுத்து எண்ணையில் போட்டு பொறிக்கவேண்டும்.

அதன்பின் மஞ்சள்தூள்,மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்க்கவேண்டும்.

பின்னர் கடுகை போட்டு வெடிக்க விடவேண்டும்.உப்பு சேர்க்கவேண்டும்..


கடுகு வெடித்தவுடன் முந்திரிபருப்பு துண்டுகள்,பொடித்த பாதாம்பருப்பு சேர்க்கவேண்டும்..

கடைசியாக உதிரியாக வடித்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

----

இந்த தாளிச்ச சாதத்துக்கு அறுசுவையும் உண்டு.

பொறித்த அப்பளத்துடன் சாப்பிடலாம்.

Monday, March 7, 2011

இன்று சர்வதேச மகளிர் தினம்





இன்று மகளிர்தின 100ஆவது ஆண்டு கொண்டாட்டம்.

1910ஆம் ஆண்டு டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உழைக்கும் மகளிர் சர்வதேச மகாநாடு நடந்தது.இந்த மாநாட்டில் பங்கேற்ற பெண்கள், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த சர்வதேச மகளிர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை பிரதிபலித்தனர்.

இதை அடுத்து 1911ஆம் ஆண்டு ஆஸ்திரியா,டென்மார்க்,ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்தில் சர்வதேச மகளிர்தினம் கொண்டாடப்பட்டது.அன்றுமுதல் ஒவ்வொரு ஆண்டும் மர்ச் 8ஆம் நாள் உலகம் முழுதும் மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது.இன்று 100ஆவது ஆண்டு மகளிர்தினம்.

இந்த ஆண்டு ,மகளிர் கவுரவமான வேலையில் சேர்வதற்கான பாதையை உருவாக்கும் வகையில் கல்வி,பயிற்சி,தொழில்நுட்பம் ஆகியவற்றில் மகளிர்க்கு சமவாய்ப்புத் தரவேண்டும் என்பதே குறிக்கோளாக உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, மகளிர் ஈடுபடாதத் துறையில்லை எனலாம்.

நம் நாட்டின் முதல் குடிமகன்(ள்) ஒரு பெண்

நம்நாட்டை ஆளும் கட்சியின் தலைவர் ஒரு பெண்

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பெண்

பாராளுமன்ற சபாநாயகர் ஒரு பெண்

ரயில்வேயின் மத்திய அமைச்சர் ஒரு பெண்

உத்தரபிரதேச முதல்வர் ஒரு பெண்

தில்லியின் முதல்வர் ஒரு பெண்

தமிழத்தில் ஆளும் கட்சியாய் இருந்து இன்று எதிர்க்கட்சியாய் உள்ள கட்சியின் தலைவர் ஒரு பெண்

என எங்கெங்கு நோக்கினும் நம்மால் முடியும் என நிரூபித்து வருபவர்கள் பெண்கள்.

ஒருநாட்டில் பெண்கள் முன்னேறினால் அவரது குடும்பம் மட்டுமல்ல சமுதாயமே முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை.

அனைவருக்கும் மகளிர்தின வாழ்த்துகள்.

Thursday, March 3, 2011

முருங்கைக்காய் சூப்



தேவையானவை:

முருங்கைக்காய் 3

பயத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்

வெங்காயம் 1

தக்காளி 2

பூண்டு 2 பல்

இஞ்சி 1 துண்டு

மிளகு 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

பால் 1/2 கப்

சர்க்கரை 1 டீஸ்பூன்



செய்முறை:

முருங்கைக்காயை வேகவைத்து உள்ளிருக்கும் விதைகளை தனியே எடுத்து வைக்கவேண்டும்.

வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

இதனுடன் பயத்தம்பருப்பு,இஞ்சி,பூண்டு சேர்த்து குக்கரில் ஒரு கப் தண்ணீருடன் வேகவைக்கவேண்டும்.

மிளகு,சீரகம் இரண்டையும் வறுத்து பொடி பண்ணிக் கொள்ளவேண்டும்.

முருங்கைக்காய் விதைகள்,குக்கரில் வைத்த பயத்தம்பருப்பு கலவை இரண்டையும் சிறிது தண்ணீருடன் மிக்சியில்

அரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்.

பாலில் சோள மாவை கரைத்து இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

தேவையான உப்பும்,சிறிது சர்க்கரையையும் சேர்க்கவேண்டும்.

சூப்பை அருந்துவதற்கு முன்பு மிளகு சீரகப் பொடி சேர்க்கவேண்டும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...