Wednesday, April 27, 2011

குழிப்பணியாரம்


தேவையானவை:


புழுங்கலரிசி 1 கப்

பச்சரிசி 1/2 கப்

உளுத்தம்பருப்பு 1/2 கப்

வெந்தயம் 1 டேபிள்ஸ்பூன்
------
வெங்காயம் 2

பச்சைமிளகாய் 4

இஞ்சி 1 துண்டு

உப்பு,எண்ணைய் தேவையானது
---------
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை 1 கொத்து

செய்முறை:



புழுங்கலரிசி,பச்சரிசி,உளுத்தம்பருப்பு,வெந்தயம் நான்கையும் ஊறவைத்து நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

தேவையான உப்பை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.நான்கு மணிநேரம் கழித்து

அதில் வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கி போடவேண்டும்.பின்னர் கடுகு,உளுத்தம்பருப்பு,மஞ்சள்தூள்,கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.

----

குழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எல்லாக்குழிகளிலும் எண்ணைய் ஊற்றி மாவை சிறு கரண்டியால் ஊற்றவேண்டும்.மாவு வெந்ததும் திருப்பிப்போட்டு (குச்சியால் திருப்பவேண்டும்) மீண்டும் கொஞ்சம் எண்ணைய் ஊற்றி எடுக்கவேண்டும்.

வெங்காய்ம்,தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Wednesday, April 20, 2011

சப்போட்டா ....பேரிச்சம்...டிலைட்...



தேவையானவை:

சப்போட்டா பழம் 3

பேரிச்சம்பழம் 4

பால் 1/2 கப்

ஏலக்காய் 2

பனங்கல்கண்டு பொடி 1/2 டீஸ்பூன்

தேன் 1 டீஸ்பூன்

-------

செய்முறை:

பேரிச்சம்பழத்தை உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்துவிட்டு கால் கப் தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

சப்போட்டா பழத்தின் தோலை நீக்கி உள்ளே இருக்கும் விதையை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

-------

ஊறவைத்த பேரிச்சம்பழம் (தண்ணீருடன்) பொடியாக நறுக்கிய சப்போட்டா பழம்,ஏலக்காய்,பனங்கல்கண்டு பொடி எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவேண்டும்.

பின்னர் பாலை சேர்த்து மீண்டும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவேண்டும்.

மிக்சியிலிருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து தேனைக் கலந்து fridge ல் ஒரு மணிநேரம் வைத்து எடுத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Sunday, April 17, 2011

மாங்காய் சாதம்



தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்

துருவிய மாங்காய் 1 கப்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

நெய் 1 டேபிள்ஸ்பூன்

சோம்பு 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது
-------
மசாலா பவுடர் செய்ய தேவையானது:

துருவிய தேங்காய் 1 கப்

தனியா 1 டேபிள்ஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் 4

கிராம்பு 2

ஏலக்காய் 2

ஜாதிக்காய் பவுடர் 1/2 டீஸ்பூன்
------
அலங்கரிக்க:

முந்திரிபருப்பு 5

பாதாம் பருப்பு 5

நிலக்கடலை 5
--------
செய்முறை:

மசாலா பவுடர் செய்ய கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.

பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் வீதம் தண்ணீர் வைத்து அரைமணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

மாங்காய் துருவலுடன் அரைத்த பொடி பாதி அளவு,மஞ்சள்தூள்,தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசறி

பத்து நிமிடம் ஊறவைக்கவேண்டும்.

கடாயில் நெய் சேர்த்து சோம்பை தாளித்து மாங்காய் கலவையை சேர்த்து சிறிது வதக்கிக்கொள்ளவும்.

Ele.cooker ஐ எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த பாசுமதி அரிசி (தண்ணீருடன்),மாங்காய் கலவை,மீதமுள்ள மசாலா பொடி எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து வைக்கவேண்டும்.

மாங்காய் சாதம் தயாரானவுடன் வறுத்த முந்திரிபருப்பு,பாதம்,நிலக்கடலையால் அலங்கரிக்கவும்.

Thursday, April 14, 2011

ஸ்வீட் பொடேடோ போளி

பூரணத்திற்கு தேவையானவை:

 ஸ்வீட் பொடேடோ
(சர்க்கரை வள்ளிக்கிழங்கு) 2
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ரவை 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
-------
மேல்மாவு தயாரிக்க தேவையானவை:
மைதா மாவு 1 கப்
நெய் 1/4 கப்
கேசரி பவுடர் 1/2 டீஸ்பூன்
உப்பு ஒரு சிட்டிகை
------
செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மைதாமாவு,ஒரு டேபிள்ஸ்பூன் நெய்,உப்பு,கேசரி பவுடர் எல்லாவற்றையும் சேர்த்து கைகளால் நன்கு பிசறி தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவேண்டும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவேண்டும்.
அதனுடன் பொடித்த வெல்லம்,ரவை,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவேண்டும்.

பிசைந்த மைதா மாவை ஒரு உருண்டை எடுத்து சப்பாத்தி மாதிரி இட்டு அதன் மேல் தயாராக உள்ள பூரணத்தை சிறிதளவு வைத்து நான்கு புறமும் மூடி மறுபடியும் சப்பாத்தி மாதிரி இடவேண்டும்.(பிசைந்த மாவை ஒரு உருண்டை plastic sheet ல் எண்ணைய் தடவி அதன் மேல் வைத்து உள்ளே பூரணத்தை வைத்து கையால் சிறிது தட்டிமேலே இன்னொரு plastic sheet ஆல் மூடி சப்பாத்தி தேய்க்கும் கட்டையிலும் எண்ணைய் தடவி இடலாம்)

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் இட்ட போளியை போட்டு சிறிது நெய் ஊற்றி இருபுறமும் சிவந்தவுடன் எடுக்கவேண்டும்

Sunday, April 10, 2011

வடு மாங்காய்

தேவையானவை:
மாவடு 1 கிலோ
உப்பு 1 கப்
மிளகாய் பொடி 1 கப்
கடுகு 1/4 கப்
மஞ்சள் துண்டு 3
விளக்கெண்ணைய் 1/4 கப்
தண்ணீர் 1 கப்
-----
செய்முறை:



மாவடு வாங்கும்பொழுது காம்புகள் உள்ள மாவடுவாக பார்த்து வாங்கவேண்டும்.
மாவடுவை நன்றாக அலசி தண்ணீரை வடிய வைத்து ஒரு டவலால் தண்ணீர் போக துடைக்கவேண்டும்.
ஒரு கப் தண்ணீரில் ஒரு கப் உப்பு சேர்த்து தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்கவைக்கவேண்டும்.
கடுகையும் மஞ்சள் துண்டையும் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
-----
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மாவடுவை போட்டு விளக்கெண்ணையை பரவலாக தடவவேண்டும்..அதனுடன் கடுகு மஞ்சள் விழுதை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
ஊறுகாய் போடும் ஜாடியை நன்றாக துடைத்து முதலில் சிறிது உப்பு தண்ணீர் அடியில் ஊற்றவும்.
அதன் மேல் கொஞ்சம் கலந்த மாவடுவை சிறிது போட்டு அதன் மேல் சிறிது உப்பு தண்ணீரும் மிளகாய் பொடியும் போடவும்.
இதே மாதிரி மாவடுவும்,உப்பும்,மிளகாய் பொடியுமாக கடைசிவரை போட வேண்டும்.
இரண்டு நாள் கழித்து ஜாடியை ஒரு குலுக்கு குலுக்கி நன்கு மூடி வைக்கவேண்டும்.

Tuesday, April 5, 2011

நெல்லி மோர்



தேவையானவை:

மோர் 1 கப்

நெல்லிக்காய் 2

கறிவேப்பிலை சிறிதளவு

பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

உப்பு தேவையானது

-----

செய்முறை:

நெல்லிக்காயை microwave bowl ல் சிறிது தண்ணீர் வைத்து "H" ல் ஒரு நிமிடம் வைத்து எடுத்தால் நன்கு வெந்திருக்கும்.

மிக்சியில் அரை கப் மோர்,வேகவைத்த நெல்லிக்காய்,உப்பு,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.

பின்னர் மீதமுள்ள அரை கப் மோரை சேர்த்து இரண்டு சுற்று சுற்ற வேண்டும்.

நெல்லி மோர் வெய்யிலுக்கு ஏற்றது.

நெல்லிக்காய் ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.


Saturday, April 2, 2011

பார்லி சாலட்

தேவையானவை:

பார்லி 1 கப்

பொடியாக நறுக்கிய

வெள்ளரிக்காய் 1 கப்

தக்காளி 1 கப்

மாங்காய் 1 கப்

காரட் 1 கப்

பச்சைமிளகாய் 2

ஆலிவ் ஆயில் 1 டேபிள்ஸ்பூன்

------

மிளகு தூள் 1 டீஸ்பூன்

எலுமிச்சை ஜூஸ் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு தேவையானது

----

செய்முறை:

பார்லியை நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.

பின்னர் குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைத்து எடுக்கவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் குக்கரில் இருந்து எடுத்த பார்லியுடன் பொடியாக நறுக்கிய

வெள்ளரிக்காய்,தக்காளி,மாங்காய்,பச்சைமிளகாய் நான்கையும் ஆலிவ் ஆயிலுடன் கலக்கவேண்டும்.

கடைசியில் தேவையான உப்பும் மிளகு தூளும் சேர்த்து கலக்கவேண்டும்.

சாப்பிடுவதற்கு முன்பு எலுமிச்சை சாற்றை சிறிது கலந்து சாப்பிடவேண்டும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...