Friday, September 29, 2017

சுரைக்காய் பகாளாபாத்




தேவையானவை:

சுரைக்காய் துருவியது  1 கப்
தயிர் 1 1/2 கப்
பச்சை திராட்சை 1/2 கப்
மாதுளை முத்துகள் 1/2 கப்
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
------
உப்பு,எண்ணெய் தேவையானது

செய்முறை:


துருவிய சுரைக்காயை  அடுப்பில் வாணலியில் தண்ணீர்  சிறிது தெளித்து   வேகவைக்கவும்,.. ஐந்து நிமிடத்தில் வெந்துவிடும்..
ஒரு பாத்திரத்தில் தயிருடன் வேகவைத்த சுரைக்காய்,உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் கடுகு,பெருங்காயத்தூள்,பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை
தாளித்து ரெடியாக உள்ள   பகாளாபாத்தில் கலக்கவேண்டும்.
பச்சை திராட்சை,மாதுளை முத்துகள் சேர்க்கலாம்.

அரிசி சாதத்தை குறைக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள் இதனை தயிர் சாதத்துக்கு பதில் சாப்பிடலாம்.


Thursday, September 21, 2017

கருப்பு உளுந்து சுண்டல்



தேவையானவை:
கருப்பு உளுந்து  2 கப்
தேங்காய் துருவல்  1/2 கப்
இஞ்சி              1 துண்டு
பச்சைமிளகாய்      3
சீரகம்              1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு          1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு
------
செய்முறை:
 கருப்பு உளுந்தை இரவே ஊறவைத்து மறு நாள் குக்கரில்  தேவையான உப்புடன் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.
தேங்காய் துருவல்,இஞ்சி,பச்சைமிளகாய்,சீரகம் நான்கினையும் தண்ணீர் விடாமல் பொடி போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
--------
அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த கருப்பு உளுந்தை வடிகட்டி
சேர்க்கவேண்டும்.அதனுடன் அரைத்த பொடியையும் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
நவராத்திரிக்கு ஒரு நாள் இந்த சுண்டலை செய்யலாம்,

Sunday, September 17, 2017

தினை புட்டு



தேவையானவை:

தினை ரவை 1 கப்
வெல்லம் (பொடித்தது) 1 கப்
நெய் 1/4கப்
துவரம்பருப்பு 2 டீஸ்பூன்
தண்ணீர் 3/4 கப்
தேங்காய் துருவல்  2 டீஸ்பூன்
ஏலக்காய் 2
முந்திரிபருப்பு 5
உப்பு ஒரு சிட்டிகை

செய்முறை:

ஒருவாணலியை எடுத்துக்கொண்டு  தினை ரவையை எண்ணைய் விடாமல் சிவக்க வறுத்துக்கொள்ளவும்,வறுத்ததை மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.
துவரம்பருப்பை சிறிது நீரில் அரைமணிநேரம் ஊறவைக்கவும்.

முக்கால் கப் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பை கரைத்து அந்த தண்ணீரை ரவையில் விட்டு பிசிறிக்கொள்ளவும்.அதன் மீது ஊறவைத்த
துவரம்பருப்பையும் போட்டு குக்கரில் இட்லி தட்டில் பரப்பி 15 நிமிடம் வேகவைக்கவும்.(நடுவில் திறந்து பார்த்து வேகவில்லையென்றால் சிறிது தண்ணீர் தெளித்து வைக்கவும்)
நன்கு வெந்தவுடன் ஒரு பெரிய தட்டில் கொட்டி உதிர்த்துக்கொள்ளவும்.
வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணரில் கரைய விட்டு மண்ணில்லாமல் வடிகட்டவேண்டும்.
பிறகு வெல்லத்துடன் ஏலக்காய்,தேங்காய் துருவல் சேர்த்து நல்லகெட்டி பாகாய் (ஒரு தட்டில் ஒரு சொட்டு விட்டால் முத்தாக வரும்)வந்தவுடன் வெந்த ரவையைக்கொட்டி
நன்றாக கிளறி வறுத்த முந்திரி,நெய் இவற்றை விட்டு இறக்கவும்.அடுப்பிலிருந்து இறக்கினவுடன் சற்று இளகினாற்போலத்தான் இருக்கும்.அரைமணி கழித்து பாகு உள்ளே
இழுத்துக்கொண்டு நன்றாக உதிரியாக வந்துவிடும்.

நவராத்திரிக்கு சுண்டலுக்கு பதில் புட்டு ஒருநாள் செய்யும் வழக்கம் உண்டு

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...