Monday, September 29, 2014

கறுப்பு உளுந்து சுண்டல்




தேவையானவை:
கறுப்பு உளுந்து  2 கப்
தேங்காய் துருவல்  1/2 கப்
இஞ்சி              1 துண்டு
பச்சைமிளகாய்      3
சீரகம்              1 தேக்கரண்டி
உப்பு,எண்ணைய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு          1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு
------
செய்முறை:
 கறுப்பு உளுந்தை இரவே ஊறவைத்து மறு நாள் குக்கரில்  தேவையான உப்புடன் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.
தேங்காய் துருவல்,இஞ்சி,பச்சைமிளகாய்,சீரகம் நான்கினையும் தண்ணீர் விடாமல் பொடி போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
--------
அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த கறுப்பு உளுந்தை வடிகட்டி
சேர்க்கவேண்டும்.அதனுடன் அரைத்த பொடியையும் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

Friday, September 26, 2014

எள் பர்ஃபி



தேவையானவை:

எள் 1 கப்
வேர்க்கடலை 1 கப்
பொடித்த வெல்லம் 2 கப்
ஏலத்தூள் சிறிதளவு
------
செய்முறை:


எள்ளை நீர் விட்டு நன்றாக களைந்துவிட்டு வடிகட்டி வெறும் வாணலியில் போட்டு வெடிக்கும் வரை வறுக்கவேண்டும்.
வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுக்கவேண்டும்.
வறுத்த எள் ஒரு கப், வறுத்த வேர்க்கடலை ஒரு கப் இரண்டையும் 'நற நற' என்று பொடி பண்ண வேண்டும்.

வாணலியில் சிறிது தண்ணீர் வைத்து (ஒரு கப் பொடி பண்ணிய கலவைக்கு ஒரு கப் பொடித்த வெல்லம்) பொடித்த வெல்லம் ஏலத்தூள் சேர்த்து
கம்பிப்பாகு வந்ததும் பொடி பண்ணியதைப் போட்டு நன்கு கிளறி ஒரு தட்டில் நெய்யை பரவலாகத் தடவி கிளறியதைக் கொட்டி வில்லைகளாக போடலாம்.

Thursday, September 25, 2014

.ராகி புட்டு.



தேவையான பொருட்கள்:

கேழ்வரகு(ராகி) மாவு -  1 கப்
துருவிய தேங்காய் 1/4 கப்
தூள் வெல்லம் 1/2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
உப்பு  சிறிதளவு

செய் முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தில் வெள்ளைத் துணி போட்டு, அதன் மீது ராகி மாவை  பரப்பிவிட்டு இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடத்தில் எடுக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து மாவை நன்றாக உதிர்க்கவும்.பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சிறிது உப்பு சேர்த்து பிசிறவும்.
பிசிறிய மாவை மீண்டும்வெள்ளை துணியில் பரப்பி இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடம் கழித்து எடுக்கவும்,

குக்கரில் இருந்து எடுத்து தேங்காய் துருவல்,தூள் வெல்லம்,நெய்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பிசிறவும்.

காராமணி இனிப்பு சுண்டல்



தேவையானவை:
காராமணி 1 கப்
பொடித்த வெல்லம் 1/2 கப்
துருவிய தேங்காய் 1/4 கப்
ஏலக்காய் தூள்  சிறிதளவு
உப்பு ஒரு சிட்டிகை
------
செய்முறை:


காராமணியை லேசாக வறுத்து 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் ஒரு சிட்டிகை உப்புடன் வைத்து (மூன்று விசில்) எடுக்கவும்.
வெல்லத்தை சிறிது தண்ணீருடன் அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டிய காராமணி, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
எல்லாம் சேர்ந்து நன்றாக கிளறியவுடன்  தேங்காய் துருவல் சேர்க்கவும்.

Wednesday, September 24, 2014

பட்டாணி சுண்டல்


தேவையானவை:

பச்சப்பட்டாணி 2 கப்
பச்சமிளகாய் 4
துருவிய தேங்காய் 1/2 கப்
மாங்காய் 1
எண்ணைய்,உப்பு தேவையானது

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 4
துருவிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1.பச்சைப்பட்டாணியை 6 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும்
அடுப்பை அணைத்து வடிகட்டிவைக்கவும்.
2.பச்சைமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
3.மாங்காயை துருவிக்கொள்ளவும்.
------
4.ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து
வடிகட்டிய பட்டாணி,உப்பு,பச்சைமிளகாய்,துருவிய தேங்காய்,துருவிய மாங்காய்
ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.

Monday, September 22, 2014

மசால் வடை




தேவையானவை:

கடலைப்பருப்பு 1 கப்
சோம்பு 1 மேசைக்கரண்டி
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
ஏலக்காய் 2
இஞ்சி 1 துண்டு
பூண்டு 2 பல்
பச்சைமிளகாய் 2
வெங்காயம் 1
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------------------------
செய்முறை:


கடலைப்பருப்பை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.ஊறிய பின் வடிகட்டவேண்டும்.ஒரு தேக்கரண்டி கடலப்பருப்பை தனியே எடுத்துவைக்கவேண்டும்.

சோம்பை தனியாக ஊறவைக்கவேண்டும்.
ஊறிய சோம்பு,பச்சைமிளகாய்,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,இஞ்சி.பூண்டு எல்லாவற்றையும் முதலில் கரகரப்பாக அரைக்கவேண்டும்.
அதனுடன் வடிகட்டிய கடலைப்பருப்பு,தேவையான உப்பு சேர்த்து சற்றே கரகரப்பாக அரைக்கவேண்டும்.

அரைத்ததை ஒரு பாத்திரத்தில் வைத்து அதனுடன் தனியாக எடுத்து வைத்த தேக்கரண்டி கடலைப்பருப்பு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,பொடியாக அரிந்த கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.

கடாயில் எண்ணெய் வைத்து நன்கு காய்ந்ததும் கலந்த மாவை உள்ளங்கையில் வடை போல தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவேண்டும்.

Tuesday, September 16, 2014

பருப்பு உருண்டைக் குழம்பு




தேவையானவை:
பருப்பு உருண்டைக்கு தேவையானவை

துவரம்பருப்பு  1 கப்
கடலைபருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல்  3
சோம்பு 1 டீஸ்பூன்
வெங்காய 1
மஞ்சள். தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை  சிறிதளவு
உப்பு 1/2 டீஸ்பூன்
அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன்
———-
குழம்புக்கு தேவையானவை:
புளி ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய்3 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணைய்  1டேபிள்ஸ்பூன்
 கடுகு  1டீஸ்பூன்
வெந்தய.   1டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 1
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

துவரபருப்பையும் கடலபருப்பையும் 3 மணிநேர தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி அதனுடன் மிளகாய் வற்றல்,சோம்பு,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து சற்றே கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,மஞ்சள்தூள்,அரிசி மாவு சேர்த்து  நன்றாக பிசைந்து  சிறு சிறு உருண்டைகளாக்கி இட்லி தட்டில் வைத்து ஆவியில் 7 நிமிட வைத்து எடுக்கவும். பருப்பு உருண்டை ரெடி
புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி எடுக்கவும்.


அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில்     கடுகு,வெந்தய பெருங்காயத்தூள்,மிளகாய் வற்றல்
கறிவேப்பிலை தாளித்து புளிக்கரைசலை ஊற்றி அதனுடன் சாம்பார் பொடி  தேவையான் உப்பு சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.நன்றாக கொதித்தபின் ரெடியாக உள்ள பருப்பு உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு சிறிது கொதித்த பின் அடுப்பை அணைக்கலாம்.

Monday, September 8, 2014

தினை...Black Bean சாலட்



தேவையானவை:

தினை 1 கப்
தண்ணீர் 2 கப்
Black Bean 1 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
Jalapeno 4
எலுமிச்சை ஜூஸ் 1/4 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
-------
செய்முறை:


தினையை ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் குக்கரில் வைத்து ( மூன்று விசில்) எடுக்கவும்.
Black bean ஐ நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் வைத்து (மூன்று விசில்) எடுக்கவும்.
வெங்காயம்,தக்காளி,Jalapeno மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
-------
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை எலுமிச்சை ஜூஸில் ஊறவைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வேகவைத்த தினை,வேகவைத்த Black Bean,பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,Jalapeno, எலுமிச்சை ஜூஸில் ஊறவைத்த வெங்காயம்கொத்தமல்லித்தழை,தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக குலுக்கவும்.

இந்த சாலடை diet  ல்இருப்பவர்கள் டின்னராகவும் உபயோகிக்கலாம்.
(Jalapeno பெரிய காய்கறிகடைகளில் கிடைக்கும். இதனை சாலட்டில் சேர்ப்பதால் ஒரு தனி சுவை கிடைக்கும்.)

Thursday, September 4, 2014

சிறுதானியங்கள் தோசை



தினை 1 கப்
குதிரைவாலி 1 கப்
சாமை 1 கப்
வரகு 1 கப்
உளுத்தம்பருப்பு 1 கப்
அவல் 2 மேசைக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
=====
செய்முறை:


மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு தானியத்தையும் தனித்தனியாக 5,6 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
(மாவாக தோசைக்கு கரைப்பதை விட தானியத்தை ஊறவைத்து அரைப்பது கூடுதல் ருசியைக் கொடுக்கும்)
உளுத்தம்பருப்பு,வெந்தயம் இரண்டையும்  தனியே 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
அவலை தண்ணீரில் நனைத்து அரைக்கும் போது போடலாம்.
-----
முதலில் நான்கு தானியங்ககளையும் சேர்த்து கிரைண்டரில் அரைமணி நேரம் அரைக்கவேண்டும்.
பின்னர் உளுந்து,வெந்தயம் அவல்மூன்றையும் சேர்த்து அரை மணி நேரம் அரைக்கவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த இரண்டு மாவையும் தேவையான உப்பையும் சேர்த்து நன்கு கலந்து வைக்கவேண்டும்.
மாவு 7,8 மணி நேரம் புளிக்கவேண்டும்.
சாதாரணமாக தோசை வார்ப்பது போல் வார்க்கலாம்.
சிறுதானியங்கள் தோசை மிகவும் ருசியாக இருக்கும்.

Monday, September 1, 2014

Asparagus சாலட்



தேவையானவை:                      Asparagus

asparagus  1 கப் (பொடியாக நறுக்கியது)
காராமணி 1 கப்
சீரகம் 1 மேசைக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்
மிளகுத்தூள் 1 மேசைக்கரண்டி
எலுமிச்சம் பழம் 1
உப்பு தேவையானது
-------
செய்முறை:


asparagus ஐ பொடியாக நறுக்கி சிறிது  உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
காராமணி ஐ இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வேகவைத்த asparagus,வேகவைத்த காராமணி,சீரகம்,பொடியாக நறுக்கிய
இஞ்சி,பூண்டு,மிளகுத்தூள் சிறிது உப்பு எல்லாம் சேர்த்து கலக்கவும்.
கடைசியில் கொத்தமல்லிதழையை தூவவும்

asparagus ல் வைட்டமின் A,C,K உள்ளது.
இதனை தமிழில் "தண்ணீர் விட்டான் கிழங்கு" என்பார்கள்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...