Sunday, January 31, 2010

பயறு இட்லி உப்புமா


தேவையானவை:

பச்சபயறு 1 கப்
புழுங்கலரிசி 1/4 கப்
உளுத்தம்பருப்பு 1/4 கப்
பச்சைமிளகாய் 3
------
பச்சபட்டாணி 1/4 கப் (உரித்தது)
உருளைக்கிழங்கு 1
வெங்காயம் 1
காரட் 2
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்
---




தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு


செய்முறை:

முதலில் செய்து கொள்ளவேண்டியது:

1.பச்சப்பயறு,புழுங்கலரிசி,உளுத்தம்பருப்பு மூன்றையும் மூன்றுமணினேரம் ஊறவைத்து ஒரு பச்சமிளகாய் சிறிது உப்பு
சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவை இட்லிதட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
ஆறினவுடன் சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணவும்.
2.உருளைக்கிழங்கை தோலை நீக்கிவிட்டு grater ல் துருவிக்கொள்ளவும்.
3.வெங்காயம், காரட் இரண்டையும் துருவிக்கொள்ளவும்,
4.மீதமுள்ள இரண்டு பச்சமிளகாய்,இஞ்சி,பூண்டு மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
---

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பயறு இட்லி துண்டுகளை வதக்கவும்.
பொன்னிறமாக வந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணைய் விட்டு துருவிய வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி,பூண்டு எல்லாவற்றையும்
நன்கு வதக்கவேண்டும்.வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் பச்சபட்டாணி,துருவிய உருளைக்கிழங்கு,காரட்
மூன்றுடன் சிறிது உப்பும் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்றாக வதங்கியவுடன் ரெடியாக வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்

Wednesday, January 27, 2010

அசோகா அல்வா (Thanjavur Halwa)


தேவையானவை:

பயத்தம்பருப்பு 1 கப்
கோதுமைமாவு 1 கப்
நெய் 1 1/2 கப்
சர்க்கரை 2 கப்
தண்ணீர் 2 1/2 கப்
கேசரிப்பவுடர் 1 டீஸ்பூன்
ஏலப்பொடி 1 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 10

செய்முறை:


ஒரு பாத்திரத்தில் 2 1/2 கப் தண்ணீருடன் பயத்தம்பருப்பை போட்டு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும்.
குக்கரில் வெந்த பருப்பை எடுத்து ஒரு வாணலியில் வைத்து அதனுடன் சர்க்கரையை சேர்த்து ..அது கரையும் வரை கிளறவேண்டும்.
இதை அப்படியே தனியாக எடுத்து வைக்கவேண்டும்.

வாணலியில் 1 1/2 கப் நெய் விட்டு,நெய் உருகியவுடன் கோதுமைமாவை தூவவேண்டும்.கூடவே முந்திரிபருப்பை போட்டு
நன்றாக கிளற வேண்டும்.முந்திரிகள் சிவப்பு நிறம் வரும்போது சிறிது தண்ணீர் தெளித்தால் "சொய் "என்று சத்தம் கேட்கும்.
இது தான் பதம்.இறக்கிவைக்கவேண்டும்.

இந்த கலவையோடு பயத்தம்பருப்பு,சர்க்கரை கலவையை சேர்த்து நன்றாக அல்வா பதம்வரை கிளற வேண்டும்.
கடைசியில் கேசரிப்பவுடர்,ஏலப்பொடி,ஜாதிக்காய் பொடி,சேர்க்கவேண்டும்.
(கேசரிப்பவுடரை பாலில் கலந்து விடவும்)

Sunday, January 24, 2010

வளரும் குழந்தைகளுக்கு.... சத்துள்ள கஞ்சி

1.ஓமக்கஞ்சி

தேவையானவை:

புழுங்கலரிசி நொய் 1/2 கப்
மோர் 1 கப்
ஓமம் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது

செய்முறை:

புழுங்கலரிசி நொய்யை சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
ஓமத்தை பொடி பண்ணி தனியாக சிறிது தண்ணீரில் கொதிக்கவைக்கவும்.
வடிகட்டி தனியே எடுத்துவைக்கவும்.
வடிகட்டிய ஓமத்தண்ணீரை வெந்த புழுங்கலரிசி நொய்யில் கலக்கவும்.
சிறிது ஆறினவுடன் உப்பு,மோர் கலந்து குடிக்கலாம்.
--
வயிறு உப்புசம் போகும்.
----------------------
2.நவதானிய கஞ்சி

தேவையானவை:

புழுங்கலரிசி 2 கப்

சோளம்,கோதுமை,கடலைபருப்பு,பச்சைபயறு,கறுப்பு உளுந்து,கேழ்வரகு,
பொட்டுக்கடலை,வேர்கடலை ஒவ்வொன்றும் ஒரு டேபிள்ஸ்பூன்.
-----
முந்திரிபருப்பு 4
பாதாம் பருப்பு 4
பிஸ்தா பருப்பு 4
சாரப்பருப்பு 4
ஏலக்காய் 2
சுக்கு ஒரு சிறிய துண்டு
செய்முறை:

மேலே கூறிய எல்லாப்பொருட்களையும் வெய்யிலில் நல்ல காயவைத்து மாவாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கப் தண்ணீரில் ஒரு டேபிள்ஸ்பூன் கஞ்சி மாவை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி
பால் சிறிது விட்டு குழந்தைகளுக்குக்கொடுக்கலாம்.
சுவையாக இருக்கும்..

Wednesday, January 20, 2010

சோயாபீன்ஸ் மசாலா

தேவையானவை:

சோயாபீன்ஸ் 1 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
கொத்தமல்லித்தழை 1/2 கப் (ஆய்ந்தது)
பச்சைமிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
--
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:
ஏலக்காய் 2
கிராம்பு 2
பட்டை ஒரு துண்டு

செய்முறை:

முதலில் செய்து கொள்ள வேண்டியது:

1.சோயா பீன்ஸை நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
2.ஒரு வெங்காயத்தை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
3.தக்காளியை எண்ணையில் வதக்கி விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
4.கொத்தமல்லித்தழையை வென்னீரில் போட்டு எடுத்து பச்சைமிளகாயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
5.கசகசாவையும் பொட்டுக்கடலையையும் வறுத்து பொடிபண்ணிக் கொள்ளவும்.
----
வாணலியில் எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து மீதமுள்ள ஒரு வெங்காயத்தை
பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவும்.
ஊறவைத்து வடிகட்டிய சோயாபீன்ஸை சேர்க்கவும்.
மஞ்சள்தூள்,தனியாதூள்,மிளகாய்தூளுடன் வெங்காயவிழுது,தக்காளிவிழுது,கொத்தமல்லித்தழை விழுது,
இஞ்சிபூண்டு விழுது சிறிது தண்ணீர் (ஒரு கப்)உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்தவுடன் இறக்கியபின் கசகசா பொட்டுக்கடலை பொடியை தூவவும்.
கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.

பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளலாம்.
சாதத்தோடும் பிசைந்து சாப்பிடலாம்.
இதில் புரோட்டின் சத்து அதிகமாக உள்ளது.
காரம் குறைவாகப் போட்டால் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்,

Monday, January 18, 2010

பிரண்டை குழம்பு

தேவையானவை:

பிரண்டை துண்டுகள் 10
தேங்காய்துருவல் 1/4 கப்
மிளகாய்வற்றல் 8
தனியா 1 டேபிள்ஸ்பூன்
புளி எலுமிச்சைஅளவு
எள் 1 டீஸ்பூன்
வெல்லம் சிறிதளவு
உப்பு, நல்லெண்ணய் தேவையானது
--
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
கடலைபருப்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை:

தேங்காய் துருவல்,மிளகாய்வற்றல்,தனியா மூன்றையும் எண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
பிரண்டையை தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
------
வாணலியில் நல்லெண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து பிரண்டையை வதக்கவும்,
புளியை கரைத்து உப்புடன் சேர்த்து வதக்கிய பிரண்டையில் கலந்து கொதிக்கவிடவும்.
அரைத்த விழுதை சேர்க்கவும்.
நன்கு கொதி வந்ததும் எள்ளை பொடி செய்து வெல்லத்துடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
--
இது வயிற்றுப்புண்ணை ஆற்றும்.

Monday, January 11, 2010

நெல்லி மசாலா தொக்கு

தேவையானவை:

நெல்லிக்காய் 10
வெங்காயம் 1
தக்காளி 1
மிளகு தூள் 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது

அரைக்க:

மிளகாய் வற்றல் 2
தனியா 1 டீஸ்பூன்
கசகசா 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 4

செய்முறை:
1.நெல்லிக்காயை வேகவைத்து கொட்டையை எடுத்துவிட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
2.வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வதக்கி விழுதாக அரைக்கவும்.
3.அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் மிளகாய் வற்றல்.தனியா,தேங்காய் துருவல்,முந்திரிபருப்பு
நான்கையும் எண்ணையில் வறுத்து கசகசாவை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து
எல்லாவற்றையும் சேர்த்து விழுது போல அரைக்கவும். 
-----
வாணலியில் நல்லெண்ணைய் விட்டு அரைத்த நெல்லி விழுதை நன்றாக வதக்கவேண்டும்.
பின்னர் வெங்காயம்,தக்காளி விழுதை அதனுடன் சேர்த்து வதக்கவேண்டும்.
இந்த கலவையில் அரைத்த விழுதுடன் உப்பு,மிளகு தூள்,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
தொக்கு போல் வந்தவுடன் அடுப்பை அணைக்கவேண்டும்

Friday, January 8, 2010

நியூட்ரி பால்ஸ்


தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
பாதாம் பருப்பு 10
வால்நட் 10
முந்திரிபருப்பு 10
பிஸ்தா பருப்பு 10
கறுப்பு எள் 1 டேபிள்ஸ்பூன்
உலர்ந்த திராட்சை 10
தேன் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
வெல்லம் 1 கப் (பொடித்தது)

செய்முறை:

ஓட்ஸை நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
பாதாம் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் வால்நட்,முந்திரிபருப்பு,பிஸ்தா
நான்கையும் சேர்த்து ரவை போல உடைத்துக்கொள்ளவும்.
கறுப்பு எள்ளை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.
உலர்ந்த திரட்சையை நெய்யில் பொறித்துக்கொள்ளவும்.
---
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீருடன் வெல்லத்தை
சேர்த்து கொதிக்கவிடவும்.கம்பி பாகுவந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
----
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்
பொடி பண்ணிய ஓட்ஸ்
ரவை போல் உடைத்த நட்ஸ் கலவை
வறுத்த எள்
பொறித்த திராட்சை
தேன்,நெய்
சேர்த்து
அதனுடன் கம்பிபாகு வெல்லத்தை ஊற்றி
நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.
இது சத்து நிறைந்த குழந்தைகள் விரும்பி உண்ணும் மாலை நேர சிற்றுண்டி ஆகும்.

Tuesday, January 5, 2010

சுண்டைக்காய் வத்தக்குழம்பு


தேவையானவை:

காய்ந்த சுண்டைக்காய் 1/2 கப்
பூண்டு 5 பல்
சின்ன வெங்காயம் 10
புளி எலுமிச்சை அளவு
நெய் 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் 1/4 கப்
உப்பு தேவையானது
--
மிள்காய் தூள் 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
சோம்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயம் 1 துண்டு

செய்முறை:

சுண்டைக்காயை நெய் விட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பூண்டு,சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
---
வாணலியில் கால் கப் நல்லெண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
உரித்த பூண்டு,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் புளிக்கரைசல்,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
மிளகாய்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள் சேர்க்கவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணைய் மேலே வந்ததும் இறக்கவும்.
கடைசியில் வறுத்த சுண்டைக்காயை போட்டுக்கலக்கவும்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...