Saturday, January 6, 2018

cheese குழிப்பணியாரம்

தேவையானவை:

இட்லி மாவு 2 கப்
துருவிய சீஸ்  1 கப்
எண்ணெய்,உப்பு தேவையானது
--------
செய்முறை:


அடுப்பில் குழிப்பணியாரக்கல்லை வைத்து ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றவேண்டும்.
முதலில் ஒவ்வொரு குழியிலும் ஒர் மேசைக்கரண்டி மாவை ஊற்றி அதன் மேல் துருவிய சீஸ் ஒரு தேக்கரண்டி பரவலாக  தூவி மீண்டும் அதன் மேல் ஒரு மேசைக்கரண்டி மாவை ஊற்றவேண்டும்.
சற்று வெந்ததும் குழிப்பணியாரக்  குச்சியால் இரண்டு பக்கமும் திருப்பி பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

சீஸ் போடுவதால் சாதாரண்க் குழிப்பணியாரத்தை விட சற்று ருசி அதிகமாக இருக்கும்.குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Wednesday, January 3, 2018

Afghan ரெய்தா

தேவையானவை;

புதினா    இ கப்
பச்சைமிளகாய் 3
தயிர் 3 கப்
வெள்ளரிக்காய் 3
உப்பு தேவையானது

செய்முறை:

புதினா,பச்சைமிளகாய்,1/2 கப் தயிர் சிறிது உப்பு சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மீதமுள்ள தயிர் அரைத்த விழுது சேர்க்கவும்.
வெள்ளரிக்காயை தோலை சீவி விட்டு பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக கலக்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...