Sunday, April 27, 2014

குடமிளகாய் பச்சடி



தேவையானவை:

குடமிளகாய் 1
தயிர் 1 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
------
அரைக்க:

தேங்காய் 1/4 கப்
இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் 2
----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 1
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
----
செய்முறை:


குடமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு Microwave bowl ஐ எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய குடமிளகாய் துண்டுகளை சிறிது தண்ணீர் தெளித்து microwave ல் ஒரு நிமிடம் வைத்தால் குடமிளகாய் வெந்துவிடும்.

தேங்காய்,இஞ்சித்துண்டு,பச்சைமிளகாய் மூன்றையும் சிறிது தயிருடன் விழுது போல அரைத்து குடமிளகாயுடன் சேர்க்கவும்.
தேவையான உப்பும்,மீதமுள்ள தயிரையும் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து நன்கு கலக்கவும்.

Tuesday, April 22, 2014

மாதுளை ஜூஸ்


தேவையானவை:

மாதுளை 1
சர்க்கரை 1 டேபிள்ஸ்பூன்
பால் 1/4 கப்
கிரீம் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

மாதுளைப்பழத்தை இரண்டாக வெட்டி உள்ளே உள்ள முத்துக்களை எடுத்துவைக்கவேண்டும்.
அதனுடன் பால்,சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவேண்டும்.
நன்றாக அரைத்தால் வடிகட்டவேண்டிய அவசியமில்லை.
Fridge ல் வைத்து குழந்தகளுக்கு கொடுக்கலாம்.
முத்துக்களை சாப்பிடுவதை விட இப்படி ஜூஸ் ஆக சாப்பிடுவதை விரும்புவார்கள்
கொடுக்கும்பொழுது மேலே கிரீம் போட்டு கொடுக்கவேண்டும்.

Friday, April 18, 2014

நெல்லி மோர்



தேவையானவை:

மோர் 1 கப்

நெல்லிக்காய் 2

கறிவேப்பிலை சிறிதளவு

பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

உப்பு தேவையானது

-----

செய்முறை:

நெல்லிக்காயை microwave bowl ல் சிறிது தண்ணீர் வைத்து "H" ல் ஒரு நிமிடம் வைத்து எடுத்தால் நன்கு வெந்திருக்கும்.

மிக்சியில் அரை கப் மோர்,வேகவைத்த நெல்லிக்காய்,உப்பு,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.

பின்னர் மீதமுள்ள அரை கப் மோரை சேர்த்து இரண்டு சுற்று சுற்ற வேண்டும்.

நெல்லி மோர் வெய்யிலுக்கு ஏற்றது.

நெல்லிக்காய் ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.

Sunday, April 13, 2014

மாங்காய்-வேப்பம் பூ பச்சடி

 

மாங்காய் பச்சடி:

தேவையானது:

மாங்காய் 1
வெல்லம் 1/2 கப் (பொடித்தது)
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
அரிசிமாவு 1 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
உப்பு தேவையானது

செய்முறை:


மாங்காயை தோலைச் சீவி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்சிறிது தண்ணீர் விட்டு மாங்காய் துண்டுகள்,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.மாங்காய் வெந்ததும் பொடித்த வெல்லத்தைப் போட்டு வெல்லம் கரைந்து சேர்ந்த பின் அரிசிமாவு கரைத்து விட்டு கொதிக்கவிடவும் .அடுப்பை அணைத்து கடுகு பச்சைமிளகாய் தாளித்து கொட்டவும்.


வேப்பம் பூ பச்சடி


தேவையானவை:
வேப்பம் பூ 2 டேபிள்ஸ்பூன்
புளி எலுமிச்சைஅளவு
வெல்லம் 1 டேபிள்ஸ்பூன் (பொடித்தது)
அரிசி மாவு 1 டீஸ்பூன்
--
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
மிளகாய் வற்றல் 3
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:


வேப்பம் பூ சிறிது எண்ணைய் விட்டு நல்ல கறும் சிவப்பாக வறுக்கவும்.
வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு,கிள்ளிய மிளகாய்வற்றல்.பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை தாளிக்கவும்.
புளியை அரைகப் தண்ணீரில் கரைத்துவிடவும்.உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.பொடித்த வெல்லத்தைப் போட்டு நன்றாக கொதித்தபின் அரிசிமாவை கரைத்துவிடவும்.
இறக்கும் பொழுது வறுத்த வேப்பம் பூவை போடவேண்டும்.
(இரண்டும் சேர்த்து ஒரே பச்சடியாக செய்வோரும் உண்டு

Wednesday, April 9, 2014

பார்லி சாலட்

தேவையானவை:

பார்லி 1 கப்

பொடியாக நறுக்கிய

வெள்ளரிக்காய் 1 கப்

தக்காளி 1 கப்

மாங்காய் 1 கப்

காரட் 1 கப்

பச்சைமிளகாய் 2

ஆலிவ் ஆயில் 1 டேபிள்ஸ்பூன்

------

மிளகு தூள் 1 டீஸ்பூன்

எலுமிச்சை ஜூஸ் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு தேவையானது

----

செய்முறை:

பார்லியை நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.

பின்னர் குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைத்து எடுக்கவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் குக்கரில் இருந்து எடுத்த பார்லியுடன் பொடியாக நறுக்கிய

வெள்ளரிக்காய்,தக்காளி,மாங்காய்,பச்சைமிளகாய் நான்கையும் ஆலிவ் ஆயிலுடன் கலக்கவேண்டும்.

கடைசியில் தேவையான உப்பும் மிளகு தூளும் சேர்த்து கலக்கவேண்டும்.

சாப்பிடுவதற்கு முன்பு எலுமிச்சை சாற்றை சிறிது கலந்து சாப்பிடவேண்டும்.

Tuesday, April 1, 2014

இஞ்சி மோர்




தேவையானவை:
மோர் 2 கப்
இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை 1/2 கப்
எலுமிச்சம்பழம் 1
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது

செய்முறை:

பச்சைமிளகாய்,இஞ்சி,கொத்தமல்லித்தழை மூன்றையும் சிறிது தண்ணீர் தெளித்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
இரண்டு கப் மோரை மிக்சியில் போட்டு நன்றாக விப்பரில் அடித்துக்கொள்ளவேண்டும்.

கடைந்த மோரில் அரைத்த விழுது தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
பெருங்காய்த்தூள்,சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கடைசியில் எலுமிச்சம்பழத்தை பிழிந்து குடித்தால் தாகம் அடங்கும்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...