Thursday, May 31, 2012

ஆப்பம்




தேங்காய் பால் ஆப்பம்

தேவையானவை:
பச்சரிசி 1 கப்
புழுங்கலரிசி 1/2 கப்
உளுந்து 1 தேக்கரண்டி
தேங்காய் பால் 1/2 கப்
சர்க்கரை 1 தேக்கரண்டி
ஆப்பசோடா 1/2 தேக்கரண்டி
உப்பு தேவையானது
-------
செய்முறை:


பச்சரிசி,புழுங்கலரிசி,உளுந்து மூன்றையும் மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.
வெதுவெதுப்பான வெந்நீரில் சர்க்கரை,ஆப்பசோடா,உப்பு மூன்றையும் கலந்து அரைத்து வைத்த மாவில் கலக்கவும்.
எட்டு மணி நேரம் வைக்கவும்.

ஆப்பம் செய்வதற்கு அரை மணி முன்பு தேங்காய் பாலை சேர்க்கவும்.
ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து மாவை கரண்டியால் நடுவில் ஊற்றி சட்டியை இருபுறமும் பிடித்து சுற்றி விடவேண்டும்
(பார்க்க படம்) மூடியால் மூடி அடுப்பை ஸ்லிம்மில் வைத்து எடுக்கவேண்டும்.திருப்பி போடக்கூடாது.
இதற்கு எண்ணெய் சேர்ப்பதில்லை.
வெஜிடபிள் குருமாவுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
----------------------------------------------
இளநீர் ஆப்பம்

தேவையானவை:
இட்லி புழுங்கலரிசி 1 கப்
இளநீர் 1 கப்
உப்ப் தேவையானது
தேங்காய் பால் 1/2 கப்
சர்க்கரை 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
----
செய்முறை:
அரிசியை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நைசாக அரைத்து உப்பு சேர்த்து வைக்க வேண்டும்.
அரைத்த மாவில் இளநீர் ஊற்றி கரைத்து வைக்க வேண்டும்.
எட்டு மணி நேரம் கழித்து ஆப்ப மாவு மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும்.
மேலே கூறியபடி ஆப்பம் செய்யவேண்டும்.
தேங்காய் பால்,சர்க்கரை ஏலத்தூள் சேர்த்து ஆப்பத்தில் ஊற்றி சாப்பிடலாம்.

Sunday, May 27, 2012

உருளைக்கிழங்கு பொடிமாஸ்



தேவையானவை:

உருளைக்கிழங்கு 4
மஞ்சள்தூள் 1தேக்கரண்டி
துருவிய இஞ்சி 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
பொடிப்பதற்கு தேவையானது:
மிளகாய் வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கடலைபருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
--------
செய்முறை:

 உருளைக்கிழங்கு ஒவ்வொன்றையும் நான்காக வெட்டி குக்கரில் வைத்து (மூன்று விசில்) வேகவைத்துக்கொள்ளவேண்டும்.
குக்கரில் இருந்து எடுத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவேண்டும்.

பொடிப்பதற்கு கொடுத்துள்ள மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம் மூன்றையும் சிறிது எண்ணெயில் வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்க வேண்டியவைகளை எண்ணெயில் தாளித்து மசித்த உருளைக்கிழங்கை சிறிது மஞ்சள்தூள் உப்புடன் சேர்த்து பிரட்ட வேண்டும்.
துருவிய இஞ்சி,பொடித்து வைத்துள்ள பொடி இரண்டையும் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலந்தபின் அடுப்பை அணைக்கவேண்டும்.
கடைசியில் எலுமிச்சம்பழத்தை பிழியவேண்டும்.

உருளைக்கிழங்கு பொடிமாஸை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்..பொரியலாகவும் பயன்படுத்தலாம்.

Friday, May 25, 2012

மாம்பழ பாயசம்




தேவையானவை:

மாம்பழம் 1
தேங்காய் பால் 1 கப்
பொடித்த வெல்லம் 1 கப்
தேங்காய் துண்டுகள் 1 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு 5
நெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை:

மாம்பழத்தின் தோலை சீவிவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
மிக்சியில் ஒரு கப் தண்ணீருடன் மாம்பழத்துண்டுகளை சேர்த்து ஒரு சுற்று சுற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவேண்டும்.

வெல்லத்தை சிறிது தண்ணீருடன் அடுப்பில் வைத்து கரையவிட வேண்டும்.
மாம்பழக் கலவையை இதில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
பின்னர் தேங்காய் பால் சேர்க்கவும்..

மாம்பழக்கலவை,தேங்காய் பால், வெல்லம் மூன்றும் சேர்ந்து கொதித்தவுடன் நெய்யில் தேங்காய் துண்டுகள்
முந்திரிபருப்பு இரண்டையும் வறுத்து சேர்க்கவும்.
சுவையான மாம்பழ பாயசம் ரெடி.

Tuesday, May 22, 2012

ரவா வடை




தேவையானவை:
ரவா      1 கப்
துருவிய தேங்காய் 1/2 கப்
சீரகம் 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 2
வற்றல் மிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
தயிர் 2 மேசைக்கரண்டி
வெங்காயம் 1
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
----------
செய்முறை:

ரவாவில் சன்னரக ரவாவில் வடை செய்தால் ருசியாக இருக்கும்.

ஒரு அகண்ட பாத்திரத்தில் ரவாவுடன் தயிர்,உப்பு,சீரகம்,தேங்காய் துருவல் எல்லாவற்றையும் சேர்த்து பிசறிக்கொள்ளவேண்டும்.
தண்ணீர் வேண்டுமென்றால் தெளித்துக்கொள்ளவும்.
இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வற்றல் மிளகாயை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி
கறிவேப்பிலையையும் சேர்த்து எல்லாவற்றையும் கலந்து கையில் அள்ளித் தட்டும் பதத்துக்கு பிசைந்து கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் வடைகளை தட்டிப்போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

பிசைந்த மாவை நெடு நேரம் வைத்திருந்தால் மாவு புளித்து விடும். அதனால் பிசைந்த உடனே வடைகளை தட்டவேண்டும்.

Saturday, May 19, 2012

வாழைத்தண்டு சூப்




தேவையானவை:
வாழைத்தண்டு 1 துண்டு
வெங்காயம் 1
இஞ்சி 1 துண்டு
பூண்டு 5 பல்
கார்ன் flour 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
உப்பு.எண்ணெய் தேவையானது
------
Corn flakes cereal 1/4 cup
----
செய்முறை:

வாழைத்தண்டை நார் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயம்,பூண்டு,இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கவும்.
-------
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெயில் சீரகத்தை பொரிக்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பூண்டு மூன்றையும் சேர்த்து வதக்கவும்.
வாழைத்தண்டு துண்டுகளை இரண்டு கப் தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்டு நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்த்து மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கார்ன் மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட சூப்க்கான பதத்திற்கு வரும்.
மிளகு தூளை தூவி இறக்கவேண்டும்.
------
சூப் bowl ல் சூப்பை ஊற்றி அதன் மேல் cereal ஐ தூவி சாப்பிடலாம்.

Wednesday, May 16, 2012

டயட் கஞ்சி




தேவையானவை:

கேழ்வரகு மாவு 1 கப்
சோயாபீன்ஸ் மாவு 1/2 கப்
உடைத்தகடலை மாவு 1/2 கப்
பார்லி மாவு 1/4 கப்
------
பால்  1 கப்
-----
செய்முறை:

ஒவ்வொரு மாவையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக்கொண்டு ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து
ஒரு டப்பாவில் போட்டுவைத்துக்கொள்ளலாம். இது பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

கஞ்சி தயாரிக்கும் போது ஒருகப் தண்ணீரில் இரண்டு மேசைக்கரண்டி மாவை சேர்த்து நன்கு கட்டிதட்டாமல் கரைத்து அடுப்பில் வைத்து
நன்கு கிளறி கஞ்சி பதம் வந்ததும் இறக்கவேண்டும்.

பின்னர் காய்ச்சிய பாலை அதில் கலந்து குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.

Monday, May 14, 2012

அவல் பகாளாபாத்




தேவையானவை:

அவல் 1 கப்
தயிர் 1 1/2 கப்
பச்சை திராட்சை 1/2 கப்
மாதுளை முத்துகள் 1/2 கப்
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
------
உப்பு,எண்ணெய் தேவையானது

செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு கப் அவலை தண்ணீர் தெளித்து நன்கு பிசறி பத்து நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
அதில் 1 1/2 கப் தயிர் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
அதனுடன் பச்சை திராட்சை,மாதுளமுத்துகள் சேர்க்கவேண்டும்.
------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் கடுகு,பெருங்காயத்தூள்,பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை
தாளித்து ரெடியாக உள்ள அவல் பகாளாபாத்தில் கலக்கவேண்டும்.
--------
இதேபோல் ஓட்ஸ் லும் செய்யலாம்.
ஓட்ஸை microwave ல் இரண்டு நிமிடம் வேகவைத்து பின்னர் தயிர் சேர்த்து இதே முறையில் செய்ய வேண்டும்.

Sunday, May 6, 2012

வெய்யிலுக்கு....மில்க் ஷேக்....


..
1.ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

தேவையானவை
ஸ்ட்ராபெர்ரி 1 கப் (பொடியாக நறுக்கியது)
பைன்-ஆப்பிள் துண்டுகள் 1/2 கப்
மலை வாழைப்பழம் 2
பால் 1 கப்
தூளாக்கிய ஐஸ்கட்டி சிறிதளவு
சர்க்கரை தேவையானது


செய்முறை:
மேற்கூறிய எல்லாப் பொருட்களையும்  மிக்சியில் நைசாக அரைக்கவும்.
-----------------
2.வாழைப்பழ மில்க் ஷேக்

தேவையானது:
வாழைப்பழம் 2
பால் 1 கப்
தயிர் 1/4 கப்
தேன் 1 மேசைக்கரண்டி
வெனிலா எஸன்ஸ் சில துளிகள்

செய்முறை:
மேற்கூறிய எல்லா வற்றையும் மிக்சியில் அடிக்கவேண்டும்.
------------
3.மாம்பழ லஸ்ஸி
தேவையானவை:
மாம்பழ துண்டுகள் 2 கப்
பால் 1 கப்
சர்க்கரை தேவையானது
புதினா இலை சிறிதளவு
எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
உப்பு 1 சிட்டிகை

செய்முறை:
மேற்கூறிய எல்லாவற்றையும் மிக்சியில் அடிக்கவேண்டும்.
இந்த மில்க் ஷேக் இனிப்பும் துவர்ப்பும் கலந்த சுவையாக இருக்கும்.
----------
 4.வெள்ளரிப் பிஞ்சு மில்க் ஷேக்

தேவையானது:
வெள்ளரிப் பிஞ்சு 4
பால் 1 கப்
தண்ணீர் 1/2 கப்
தேன் அல்லது சர்க்கரை தேவையானது
உப்பு 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் வெள்ளரிப் பிஞ்சுகளை பொடியாக நறுக்கிக்கொண்டு நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்..
அதனுடன் பால்,தண்ணீர்,சர்க்கரை,உப்பு சேர்த்து மிக்சியில் அடிக்கவேண்டும்.
இந்த மில்க் ஷேக் வெய்யிலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...