Tuesday, August 28, 2012

பால் பாயசம் (எளிய முறை)



தேவையானவை:

பால் 5 கப்
சர்க்கரை 1 கப்
அரிசி 2 தேக்கரண்டி
ஏலக்காய் பவுடர் 1 தேக்கரண்டி
ஜாதிக்காய் பவுடர் 1 தேக்கரண்டி
முந்திரிபருப்பு 5
நெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை:

குக்கருக்குள் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலையும் அரிசியையும் சேர்த்து வைக்கவும்.

' weight ' போடவும். சிறிது நேரத்தில் ' weight ' போடும் இடத்திலிருந்து சிறிது சிறிதாக தண்ணீர் வர ஆரம்பித்ததும் அடுப்பை ஸ்லிம்மில் வைத்துவிட்டு
சரியாக 20 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பத்து நிமிடம் கழித்து குக்கரை திறந்து சர்க்கரை சேர்க்கவும். (மீண்டும் கொதிக்க வைக்கவேண்டாம்)

ஏலக்காய்,ஜாதிக்காய் பவுடர் தூவி நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து போட சுவையான பால் பாயசம் ரெடி.

Saturday, August 25, 2012

தக்காளி சூப்




தேவையானவை:
பழுத்த தக்காளி 6
கேரட் 2
முட்டைகோஸ் 1/2 கப் துருவியது
பெரிய வெங்காயம் 1
பூண்டு 2 பல்
கார்ன் மாவு 1/4 கப்
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
துருவிய சீஸ் 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
தாளிக்க:
பிரிஞ்சி இலை 1
கிராம்பு 2
------
செய்முறை:

தக்காளி,வெங்காயம்,கேரட்,பூண்டு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பிரிஞ்சி இலை,கிராம்பு தாளித்து அதனுடன் நறுக்கிய தக்காளி,கேரட்,முட்டைகோஸ்,வெங்காயம்,பூண்டு
எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.கார்ன் மாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து அதனுடன் கலந்து கொதிக்கவைடவும்.
மேலும் இரண்டு கப் தண்ணீருடன் தேவையான உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு ஆறவிடவும்.
ஆறியதும் மிக்சியில் அரைத்து வடிகட்டினால்...சுவையான தக்காளி சூ[ப் ரெடி.
பரிமாறும் சமயம் அதன் மேலாக மிளகு தூள், வெண்ணெய்,,துருவிய சீஸ்,கொத்தமல்லித்தழை தூவி கொடுக்கலாம்.

Monday, August 20, 2012

பச்சை பட்டாணி புலவ்




தேவையானவை:
பாசுமதி அரிசி 1 கப்
பச்சை பட்டாணி 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
தேங்காய் பால் 1 1/2 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
ஏலக்காய் 2
கிராம்பு 2
நெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை:


வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி அரை கப் தண்ணீரில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியி;ல் சிறிது எண்ணெய் வைத்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து  தனியே எடுத்து வைக்கவும்.
பச்சை மிளகாயை குறுக்கே வெட்டிகொள்ளவும்.
------
வாணலியில் நெய் வைத்து பட்டை ஏலக்காய்,கிராம்பு தாளித்து அதில் பாசுமதி அரிசியை 5 நிமிடம் வறுக்க வேண்டும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் வைத்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.
அதனுடன் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி தக்காளி விழுதையும்,இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவேண்டும்..
பின்னர் பச்சை பட்டாணி,தேவையான உப்பு,தேங்காய் பால் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
இதனுடன் வறுத்த பாசுமதி அரிசியை கலந்து அப்படியே ele.cooker ல் வைக்கலாம்.
குக்கரில் இருந்து எடுத்து அதில் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி தூவவேண்டும்.

Thursday, August 9, 2012

கடப்பா




தேவையானவை:
பயத்தம்பருப்பு 1 கப்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 2
எலுமிச்சம்பழம் 1
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் 1/4 கப்
பூண்டு 4 பல்
கசகசா 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
-------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
ஏலக்காய் 2
------
செய்முறை:


பயத்தம்பருப்பை இரண்டு கப் தண்ணீருடன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். (நான்கு விசில்)
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை நீட்ட வாக்கில் நறுக்கிகொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வேகவைத்த பயத்தம்பருப்பு,தேவையான உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் மசித்த உருளைக்கிழங்கு,அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி மீண்டும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
அடுப்பிலிருந்து இறக்கிய பின் எலுமிச்சம்பழத்தை பிழியவேண்டும்.

இந்த ' கடப்பா ' தோசை,இட்லி,பூரி ஆகியவற்றிற்கு சிறந்த side dish.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...