Tuesday, July 19, 2016

சாலட்

தேவையானவை:

குடமிளகாய்  3
(பச்சை,சிவப்பு,மஞ்சள் ஒவ்வொன்றிலும் ஒன்று)
வேகவைத்த கார்ன் 1 கப்
நிலக்கடலை 1 கப் (வேகவைத்தது)
கார்ட் (பொடியாக நறுக்கியது) 1 கப்
கொத்துக்கடலை 1 கப் ( வேகவைத்தது)
வெள்ளரிக்காய் 2 (பொடியாக நறுக்கியது)
காராமணி 1 கப் (வேகவைத்தது)
அவகோடா   2
சாட் மசாலா 1 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது
எலுமிச்சம்பழம் 2
ஆலிவ் எண்ணெய்  1/2 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு

செய்முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்  பொடியாக நறுக்கிய குடமிளகாய்கள்,வேகவைத்த கார்ன்,நிலக்கடலை,கொத்துக்கடலை,காராமணி,பொடியாக நறுக்கிய காரட்,வெள்ளரிக்காய்,சாட் மசலா,உப்பு,எலுமிச்சம்பழ ஜுஸ்.ஆலிவ் எண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக  குலுக்கவும்.
கடைசியில் அவகோடாவை தோலுரித்து பெரிய துண்டுகளாக நறுக்கிப் போட்டு கொத்தமல்லித்தழையை தூவவும்.

 எடை குறைய ஆசைப்படுபவர்கள் இந்த  சாலட்டை ஒரு வேளை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

Monday, July 11, 2016

வரகு புலவ்

தேவையானவை:

வரகு 1 கப்
வெங்காயம்   2
பச்சைமிளகாய் 2
பட்டாணி 1/4 கப்
காரட் 2
பீன்ஸ்  10
உருளைக்கிழங்கு 2
காலிஃபிளவர் 10 பூக்கள்
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
மசாலா தூள் 1 மேசைக்கரண்டி
புதினா சிறிதளவு
உப்பு, எண்ணெய் தேவையானது
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
தாளிக்க:

பட்டை 1 துண்டு
லவங்கம் 4
சோம்பு 1 தேக்கரண்டி
ஏலக்காய்  2
-----------

செய்முறை:


வரகு அரிசியை 2 மணி நேரம்   2 கப் தண்ணீருடன் ஊறவைக்கவேண்டும்.

வெங்காயம்,காரட்,பீன்ஸ் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து வெண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன் முறுவலாக வதக்கவும்..பச்சைமிளகாயை குறுக்கே வெட்டி சேர்த்து பின்னர் எல்லா காய்கறிகளையும் அதனுடன் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது,மசாலா தூள் தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

குக்கரில் ஊறவைத்த வரகரிசியை (தண்ணீருடன்) வதக்கிய காய்கறி கலவையுடன் கலந்து புதினா,கொத்தமல்லித்தழை  சேர்த்து 4 விசில் வந்ததும்  அடுப்பை அணைக்கவும்.

வரகரிசியில் குறைவான மாவுச்சத்துதான்.பசைத்தன்மை அறவே இல்லாதது.கொழுப்பை அதிகமாக்காது.நல்ல கொழுப்பைக் கொண்டது.
அதனால் நீரிழிவும் இதயநோயும் வராமலிருக்க உதவும்..







Monday, July 4, 2016

மசாலா இட்லி

தேவையானவை:

இட்லி  4
வெங்காயம்  2
தக்காளி  2
பச்சைமிளகாய் 2
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
தனியா தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி
மசாலா தூள்  1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
----
தாளிக்க:
கிராம்பு 2
ஏலக்காய் 2
பட்டை 1 துண்டு
--------
செய்முறை:


இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து
அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி,பச்சைமிளகாய்மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.நன்றாக வதங்கியதும் தேவையான உப்புடன் தனியா தூள்,மிளகாய் தூள்,மசாலா தூள் சேர்த்து வதக்கி நறுக்கிய இட்லித்துண்டுகளைப் போடவும்.எல்லாம் சேர்ந்து ஒன்றாக கலந்ததும் கொத்தமல்லிதழையை தூவவும்.

இட்லி என்றால் முகத்தை சுளிக்கும் குழந்தைகள் இந்த மசாலா இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள்.



36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...