Friday, October 29, 2010

பாதாம் அல்வா- - தீபாவளி ஸ்பெஷல்-2.

தேவையானவை:

பாதாம் பருப்பு 1 கப் (அரைத்த விழுது)
சர்க்கரை 1 கப்
நெய் 1/4 கப்
குங்குமப்பூ சிறிது (optional)
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
Lemon yellow colour 1/2 டீஸ்பூன்

செய்முறை:




பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு அரைமணிநேரம் மூடிவைக்கவேண்டும்.பின்னர் அதனை எடுத்து தோலுரித்து சிறிது தண்ணீருடன் மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

அடுப்பில் சற்று அடி கனமான பாத்திரத்தை வைத்து பாதாம் விழுதுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.உருட்டுகிற பதம் வருகிறவரை கிளறவேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு பாதாம் பருப்பு விழுது,சர்க்கரை கலவையில் நெய் சேர்த்து கிளறவேண்டும்.(அடுப்பு எரியும்போதே நெய் ஊற்றி கிளறினால் அல்வாவின் நிறம் மாறிவிடும்)அல்வாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.

அல்வாவில் ஏலப்பொடி,குங்குமப்பூ,lemon colour சேர்க்கவண்டும்

Thursday, October 28, 2010

குலாப் ஜாமுன்- தீபாவளி ஸ்பெஷல்-1.

தேவையானவை:


கோவா (sugarless) 2 கப்
சர்க்கரை 5 கப்
மைதாமாவு 1/2 கப்
நெய் 1 1/2 கப்
சோடா உப்பு 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்
பச்சைகற்பூரம் 1/2 டீஸ்பூன்
தண்ணீர் 6 கப்

செய்முறை:

1.கோவாவை முதலில் ஒரு தட்டில் கொட்டி பிசையவும்.பின்னர் அதில்
மைதாமாவையும்,சோடா உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து மூடி வைக்கவும்.
அரை மணிநேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

2.ஒரு அகண்ட கனமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் கொதித்தவுடன்
சர்க்கரையை சேர்க்கவும்.பாகு பதம் (இரண்டு விரலால் பாகைத் தொட்டுப் பார்த்தால்
'பிசுக்' என்று ஒட்டிக்கொள்ளும்.) வந்தவுடன் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து
பாகை வடிகட்டவும்.
வடிகட்டிய பாகில் குங்குமப்பூவை ஒரு டீஸ்பூன் சூடான பாலில் கரைத்து சேர்க்கவும்.
.
3.வாண்லியில் நெய்யை விட்டு அடுப்பை slim ல் வைத்து நெய் காய்ந்தபின் உருட்டி வைத்துள்ள
குலாப் ஜாமுனை கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு,சற்று வெந்த பின் மெல்லிய குச்சியால்
ஒவ்வொன்றாகமெதுவாகத் திருப்பி விடவேண்டும்.
brown கலராக வந்தபின் இரண்டு நிமீடம் வைத்து நெய் வடிந்த பின் செய்து வைத்துள்ள பாகில் போடவும்.
அரை மணி கழித்து ஜீராவுடன் எடுத்து சாப்பிடலாம்.
(நெய் 1 1/2 கப் அதிகம் தான்.வாணலியின் அடியில் குலாப்ஜாமுன் படாமல்
இருப்பதற்காகவே நெய் சற்று கூடுதலாக வைக்கவேண்டும்)

Wednesday, October 27, 2010

புளியோதரை

தேவையானவை: 






பாசுமதி அரிசி 2 கப்



மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்



நல்லெண்ணைய் 4 டேபிள்ஸ்பூன்



முந்திரிபருப்பு 10



வேர்க்கடலை 10



கறிவேப்பிலை சிறிதளவு

நெய் 1 டீஸ்பூன்









-----



புளிக்காய்ச்சல் செய்ய தேவையானது:






புளி 2 எலுமிச்சை அளவு



மிளகாய்வற்றல் 6



வெந்தயம் 2 டீஸ்பூன்



கடுகு 1 டீஸ்பூன்



உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்



கடலைபருப்பு 1 டீஸ்பூன்



பெருங்காயம் 1 துண்டு







செய்முறை:



வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுத்து எண்ணைய் விட்டு மிளகாய்வற்றலை வறுத்து இரண்டையும் சிறிது உப்போடு நன்கு பொடி பண்ணிக்கொள்ளவும்.

புளியை இரண்டு கப் தண்ணீரில் கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.





வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,மீதமுள்ள 2 மிளகாய்,பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொண்டு தயாராக உள்ள புளித்தண்ணியை சிறிது உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.வெந்தயப் பொடியில் பாதியை இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.



20 நிமிடங்கள் நன்றாக கொதித்து கெட்டியானதும் இறக்கவேண்டும். இப்பொழுது புளிக்காய்ச்சல் ரெடி.







பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் வைத்து உதிரியாக குக்கரில் 3 விசில் வரும் வரை வைக்கவும்.(ele,cooker லும் வைக்கலாம்)



சாதம் ஆறினவுடன் ஒரு தட்டில் பரவலாக போட்டு மஞ்சள் தூள் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் சேர்த்து பிசறவேண்டும்.15 நிமிடம் ஊறவேண்டும்.



பின்னர் செய்து வைத்திருக்கும் புளிக்காய்ச்சலை சேர்க்கவும் மீதமுள்ள பொடியை சேர்க்கவும்..முந்திரிபருப்பு,வேர்க்கடலை,கறிவேப்பிலை மூன்றையும் சிறிது நெய்யில் வறுத்து நன்றாக கலந்து வைக்கவும்.

Sunday, October 24, 2010

ராஜ்மா மசாலா

தேவையானவை:


ராஜ்மா 1 கப்

வெங்காயம் 2

பூண்டு 4 பல்

இஞ்சி 1 துண்டு

தக்காளி 2

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

தனியா தூள் 1 டீஸ்பூன்

சீரகத்தூள் 1 டீஸ்பூன்

காரப்பொடி 1 டீஸ்பூன்

காஷ்மீரி சில்லி தூள் 1 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை சிறிது

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

வெந்தயம் 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

சோம்பு 1 டீஸ்பூன்

பட்டை 1 துண்டு



செய்முறை:

ராஜ்மாவை 8 மணி நேரம் ஊறவைத்து மஞ்சள்பொடி சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில் வரும் வரை வைத்து எடுக்கவேண்டும்.

ராஜ்மாவை குக்கரில் இருந்து எடுத்து வடிகட்டி சிறிது உப்பு,காரப்பொடி சேர்த்து பிசறி வாணலியில் எண்ணைய் வைத்து சிறிது வறுக்கவேண்டும்.

வெங்காயத்தையும் தக்காளியையும் துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி,பூண்டு சேர்த்து நான்கையும் எண்ணையில் வதக்கி விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணைய் ஒரு டேபிள்ஸ்பூன் விட்டு கடுகு,வெந்தயம்,சீரகம்,சோம்பு,பட்டை தாளிக்கவேண்டும்

அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை ஒரு கப் தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவும். .தனியாதூள்,சீரகக்தூள்.காஷ்மீரி சில்லி தூள்,உப்பு சேர்க்கவும்.

நன்றாக கொதித்ததும் வறுத்து வைத்துள்ள ராஜ்மாவை சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவேண்டும்.

கடைசியில் கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்

ராஜ்மா மசாலா சப்பாத்தி,பூரிக்கு ஏற்ற sidedish..

Sunday, October 17, 2010

ஆலூ பனீர்

தேவையானவை: 
பனீர் துண்டுகள் 2 கப்

வெங்காயம் 3

தக்காளி 3

உருளைக்கிழங்கு 4

தனியாதூள் 2 டீஸ்பூன்

காஷ்மீரி சில்லி தூள் 2 டீஸ்பூன்

மசாலா பொடி 1 டீஸ்பூன்

வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை 1 டீஸ்பூன்

வறுத்த முந்திரி 10



ஊறவைக்க:

தக்காளி கெட்சப் 2 டேபிள்ஸ்பூன்

வினிகர் 1 டேபிள்ஸ்பூன்

தனியாதூள் 2 டீஸ்பூன்

சீரகதூள் 1 டீஸ்பூன்

மிளகு தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது



செய்முறை:


வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை தோலுரித்து microwave 'h' ல் 2 நிமிடம் வைத்து நீட்டவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

பனீர் துண்டுகளையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு நன்கு கலந்து

உருளைக்கிழங்கு பனீர் துண்டுகளை அதில் சேர்த்து நன்கு கிளறி அரைமணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த பனீர்,உருளைத்துண்டுகளை வெண்ணையில் பொன்னிறமாக வதக்கி தனியே

எடுத்து வைக்கவேண்டும்.

கடாயில் வெங்காயத்தை எண்ணையில் பொன்னிறமாக வதக்கவேண்டும்.அதனுடன் தனியாதூள்,காஷ்மீரி சில்லி தூள்,மசாலா பொடி சேர்த்து வதக்கவேண்டும்.

தக்காளித் துண்டுகள் சேர்த்து எல்லாம் ஒன்றாக சேர்ந்ததும் உப்பும்,சர்க்கரை ஒரு டீஸ்பூனும் தேவையானால் சிறிது தண்ணீரும் சேர்த்து கிளறவேண்டும்.

கடைசியில் வறுத்த உருளைக்கிழங்கு,பனீர் துண்டுகளை அதனுடன் கலந்து சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கவேண்டும்.

வறுத்த முந்திரியால் அலங்கரிக்கவும்.

Friday, October 15, 2010

தேன்குழல்

தேவையானவை: அரிசிமாவு 4 கப்
பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
உளுத்தமாவு 1 கப்
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசிமாவு,பொட்டுக்கடலை மாவு,உளுத்தமாவு,சீரகம்,நெய்,தேவையான உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணைய் காய வைத்து விட்டு ஒவ்வொரு குழலுக்கும் வேண்டிய மாவை அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து குழலில் போட்டு எண்ணையில் பிழிந்து வெந்தவுடன் எடுக்கவேண்டும்.
முதலில் போட்டது வெந்து கொண்டிருக்கும்போதே இரண்டாவது குழலுக்கு மாவு பிசையவும்.




எல்லா மாவையும் முதலிலே பிசைந்தால் எண்ணையில் போடும் போது மிகவும் சிவந்து விடும்.

Tuesday, October 12, 2010

செட் தோசை

தேவையானவை:


புழுங்கலரிசி 1 கப்

பச்சரிசி 1 கப்

உளுத்தம்பருப்பு 1/2 கப்

உப்பு,எண்ணைய் தேவையானது


செய்முறை:



புழுங்கலரிசி,பச்சரிசி,உளுந்து மூன்றையும் நான்கு மணிநேரம் ஊறவைத்து பின்னர் கிரைண்டரில்

நைசாக அரைக்கவேண்டும்.தேவையான உப்பு போட்டு கரைத்து 15 மணி நேரம் கழித்து தோசை வார்க்கவேண்டும்.

வார்க்கும்போது இருபுறமும் எண்ணைய் விட்டு வார்க்கவேண்டும்.

இதற்கு side dish இட்லி மிளாகாய் பொடி,தேங்காய் சட்னி.

Sunday, October 10, 2010

கொத்தமல்லி பாத்

தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்

கொத்தமல்லி 1 கட்டு

மிளகாய் வற்றல் 4

உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் சிறிது

உப்பு,எண்ணைய் தேவையானது

----

வெங்காயம் 1

முந்திரிபருப்பு 10

நிலக்கடலை 1/4 கப்

பாதாம் (sliced) 1/4 கப்

நெய் 1 டீஸ்பூன்

செய்முறை:

பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் வைத்து அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

கொத்தமல்லித் தழையை நன்றாக தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம் மூன்றையும் எண்ணையில் வறுத்து வதக்கிய கொத்தமல்லித் தழையுடன்

உப்பு சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

ஊறவைத்துள்ள பாசுமதி அரிசியுடன் அரைத்த விழுதை நன்றாகக் கலந்து அப்படியே electric coooker ல் வைக்கவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவும்.

முந்திரிபருப்பு,நிலக்கடலை,பாதாம் மூன்றையும் நெய்யில் வறுக்கவும்.

electric cooker ல் இருந்து கொத்தமல்லி பாத்தை எடுத்து வதக்கிய வெங்காய்ம்,வறுத்த பருப்புகள் சேர்த்து கிளறவும்.

Sunday, October 3, 2010

கத்தரி..உருளை பொறியல்

தேவையானவை:

உருளைக்கிழங்கு 4

கத்தரிக்காய் 4

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

கறிப்பொடி 2 டேபிள்ஸ்பூன்

உப்பு ,எண்ணைய் தேவையானது



செய்முறை:








உருளைக்கிழங்கையும் கத்தரிக்காயையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய உருளைக்கிழங்கையும்,கத்தரிக்காயையும் சேர்த்து

உப்பு,மஞ்சள்தூள்,கறிப்பொடி தூவி எண்ணைய் சேர்த்து பிசிறவும்.

Oven ல் வைப்பதாக இருந்தால் oven ஐ 400 டிகிரி யில் pre heat செய்து பின்னர் cooking time 25 நிமிடம் வைக்கவேண்டும்.

ovenல் இருந்து எடுத்து நன்றாகக் கிளறி மீண்டும் பத்து நிமிடம் வைக்கவேண்டும்.

நேரடியாக அடுப்பிலும் செய்யலாம்.

வாணலியில் எண்ணைய் வைத்து உருள,கத்தரிக் கலவையை சேர்த்து பிரட்டவேண்டும்.

எண்ணைய் கூடுதலாக விட்டு வறுக்கவேண்டும்.

----

கறிப்பொடி செய்யும் முறை:

தேவையானவை:

தனியா 2 கப்

மிளகாய் வற்றல் 10

கடலைப்பருப்பு 1/2 கப்

உளுத்தம்பருப்பு 1/4 கப்

பொட்டுக்கடலை 2 டேபிள்ஸ்பூன்

எள் 1/4 கப்

கசகசா 1 டேபிள்ஸ்பூன்

தேங்காய் துருவல் 1 கப்

பெருங்காய்ம் 1 துண்டு

கறிவேப்பிலை சிறிதளவு

----

எள்,பெருங்காயம் தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் தனித்தனியாக எண்ணையில் வறுக்கவேண்டும்.

பெருங்காயத்தை எண்ணையில் பொரிக்கவேண்டும்.

எள்ளை சிறிது தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி வெறும் வாணலியில் வெடிக்கும் வரை வறுக்கவேண்டும்.

பின்னர் எல்லாவற்றையும் மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்.

இந்த கறிப்பொடியை ஒரு மாதம் வரை வைத்துக்கொள்ளலாம்..கெட்டுப்போகாது.

எல்லா விதமான பொரியலுக்கும் உபயோகப்படுத்தலாம்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...