Friday, March 30, 2012

வடு மாங்காய்



தேவையானவை:
மாவடு 1 கிலோ
உப்பு 1 கப்
மிளகாய் பொடி 1 கப்
கடுகு 1/4 கப்
மஞ்சள் துண்டு 3
விளக்கெண்ணைய் 1/4 கப்
தண்ணீர் 1 கப்
-----
செய்முறை:



மாவடு வாங்கும்பொழுது காம்புகள் உள்ள மாவடுவாக பார்த்து வாங்கவேண்டும்.
மாவடுவை நன்றாக அலசி தண்ணீரை வடிய வைத்து ஒரு டவலால் தண்ணீர் போக துடைக்கவேண்டும்.
ஒரு கப் தண்ணீரில் ஒரு கப் உப்பு சேர்த்து தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்கவைக்கவேண்டும்.
கடுகையும் மஞ்சள் துண்டையும் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
-----
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மாவடுவை போட்டு விளக்கெண்ணையை பரவலாக தடவவேண்டும்..அதனுடன் கடுகு மஞ்சள் விழுதை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
ஊறுகாய் போடும் ஜாடியை நன்றாக துடைத்து முதலில் சிறிது உப்பு தண்ணீர் அடியில் ஊற்றவும்.
அதன் மேல் கொஞ்சம் கலந்த மாவடுவை சிறிது போட்டு அதன் மேல் சிறிது உப்பு தண்ணீரும் மிளகாய் பொடியும் போடவும்.
இதே மாதிரி மாவடுவும்,உப்பும்,மிளகாய் பொடியுமாக கடைசிவரை போட வேண்டும்.
இரண்டு நாள் கழித்து ஜாடியை ஒரு குலுக்கு குலுக்கி நன்கு மூடி வைக்கவேண்டும்.

(மீள் பதிவு )






















Tuesday, March 20, 2012

ரவா பக்கோடா




தேவையானவை:

ரவா 2 கப்
கடலை மாவு 1/2 கப்
அரிசிமாவு 1/4 கப்
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
காரப்பொடி 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
------
செய்முறை:
ரவையை லேசாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவேண்டும்.
வெங்காயம்,பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த ரவை,கடலைமாவு,அரிசி மாவு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,
காரப்பொடி,கறிவேப்பிலை,கொத்தமல்லி,தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து முதலில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை காயவைத்து மாவில் போட்டு பிசறி
பின்னர் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைய வேண்டும்.

அடுப்பில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் மிதமான் தீயில் பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும்.
பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

பள்ளியிலிருந்து வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஏற்ற மாலை டிபன் இது.

Tuesday, March 13, 2012

குங்குமப்பூ புலாவ்




தேவையானவை:
பாசுமதி அரிசி 1 கப்
குங்குமப்பூ1 தேக்கரண்டி
பால் 3/4 கப்
தண்ணீர் 3/4 கப்
சீரகம்1 தேக்கரண்டி
பட்டை 1 துண்டு
கிராம்பு 3
நெய் 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
முந்திரிபருப்பு5
உப்பு தேவையானது
-------
செய்முறை:

பாசுமதி அரிசியை முக்கால் கப் தண்ணீரில் அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
குங்குமப்பூவை இரண்டு மேசைக்கரண்டி பாலில் 10 நிமிடம் ஊறவைத்து மிக்சியில் ' விப்பர் ' (whipper) ல் ஒரு சுற்று சுற்றவும்.
-------
அடுப்பில் கடாயை வைத்து நெய்யில் சீரகம்,பட்டை,கிராம்பு மூன்றையும் வறுக்க வேண்டும்.
அதனுடன் வடிகட்டிய பாசுமதி அரிசியையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.
ஒரு ele.cooker ஐ எடுத்துக்கொண்டு அதில் வறுத்த அரிசி மசாலா கலவை,முக்கால் கப் பால்,முக்கால் கப் தண்ணீர்,மஞ்சள் தூள்
தேவையான உப்பு ,விப்பரில் அடித்து வைத்துள்ள குங்குமப்பூ எல்லாவற்றைய்ம் சேர்த்து நன்கு கிளறி அப்படியே வைக்கலாம்.
இருபது நிமிடத்தில் "குங்குமப்பூ புலவ் " ரெடியாகிவிடும்.
கடைசியில் முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவேண்டும்.

Tuesday, March 6, 2012

மரவள்ளிக்கிழங்கு பொரியல்




தேவையானவை:


மரவள்ளிக்கிழங்கு 2 துண்டுகள்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
வெங்காயம்1
காய்ந்த மிளகாய்2
தேங்காய் துருவல்1/4 கப்
கடுகு1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு எண்ணய் தேவையானது
-------
செய்முறை:

மரவள்ளிக்கிழங்கின் மேல் தோல் நடு வேர் இரண்டையும் அகற்றிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தேங்காய் துருவல்,பச்சைமிளகாய்,வெங்காயம் மூன்றையும் விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது தண்ணீர் சேர்த்து நறுக்கி வைத்த மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை தேவையான உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும் வடிகட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து வதக்கவும்.
பின்னர் வடிகட்டிய மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.

Friday, March 2, 2012

பைனாப்பிள் ஸ்வீட் கிச்சடி




தேவையானவை:
அன்னாசிப்பழம்1 (பழுத்தது)
தேங்காய் துருவல்1 கப்
மிளகாய் தூள்1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
சீரகம்`1 தேக்கரண்டி
சர்க்கரை 2 கப்
தயிர் 1 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
தேங்காய் எண்ணெய்1மேசைக்கரண்டி
கடுக்1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்2
கறிவேப்பிலை 1 கொத்து
--------
செய்முறை:

அன்னாசிப் பழத்தை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
சீரகத்தை தேங்காய் துருவலுடன் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அன்னாசிப்பழத் துண்டுகளை மிளகாய் தூள்,மஞ்சள்தூள் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
பழத்துண்டுகள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் சீரக விழுதையும் சர்க்கரையையும் சேர்க்கவும்.
பழம் குழைந்து வரும்போது தயிரை ஊற்றி கிளறி இறக்கவும்.

தேங்காய் எண்ணெயில் கடுகு,கிள்ளிய மிளகாய் வற்றல் கறிவேப்பிலை தாளித்து  சேர்க்க பைனாப்பிள் ஸ்வீட் கிச்சடி ரெடி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...