Monday, December 29, 2014

புளி இஞ்சி


தேவையானவை:


இஞ்சி 1 கப் (நறுக்கியது)
புளி பெரிய எலுமிச்சை அளவு)
நல்லெண்ணைய் 1/4 கப்
பச்சைமிளகாய் 3
கடுகு 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
வெல்லம் சிறிதளவு

செய்முறை:


இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்.
பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் வெட்டிக்கொள்ளவேண்டும்.---
வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயத்தூள் தாளித்து
பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவேண்டும்.
நன்கு வதங்கிய பின் உப்பு,மஞ்சள்தூள்,புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
புளியும் இஞ்சியும் சேர்ந்து கெட்டியானவுடன் வெல்லம் சேர்த்து இறக்கவேண்டும்.

புளி இஞ்சியை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.பொங்கலுக்கு ஏற்ற side dish.
ஜீரணத்திற்கு நல்லது.

Monday, December 22, 2014

தினை ரவா தோசை



தேவையானவை:
 தினை ரவா - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
தயிர் - ஒரு கப்
தண்ணீர்  2 கப்
இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு - 10 பருப்பு
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
வெங்காயம் 2
----------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
மிளகாய் வற்றல் 2
-----------------

செய்முறை:

தினை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.வறுத்த அரிசியை மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்.

 ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடி பண்ணிய தினை ரவா,அரிசி மாவு,தயிர்,தண்ணீர் தேவையான உப்புசேர்த்து  ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும்.வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்
கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன்,மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும். கலந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து
அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணைய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

இதற்கு சரியான side dish தக்காளி சட்னி,தேங்காய் சட்னி.

Tuesday, December 16, 2014

சௌசௌ பொரியல்



தேவையானவை:
சௌசௌ 2
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
அரைக்க:
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
நிலக்கடலை 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 2
இஞ்சி ஒரு சிறிய துண்டு
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:



சௌசௌ வை தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்..
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை தண்ணீர் விடாமல் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
------
நறுக்கிய சௌசௌ துண்டுகளை  சிறிது மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
microwave லும் வைத்து வேகவைக்கலாம்.microwave oven ல் நறுக்கிய துண்டுகளை ஒரு bowl ல் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து ' H 'ல் ஐந்து நிமிடம் வைத்தால் போதும்.வெந்துவிடும்.

வாணலியில் சிறிது  எண்ணெய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வேகவைத்த சௌசௌ துண்டுகளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.அரைத்து வைத்துள்ள பொடியை தேவையான அளவு தூவி நன்கு கிளறி இறக்கவும்.

(இந்த பொடியை தண்ணீர் விடாமல் அரைப்பதால் இரண்டு,மூன்று நாள் வைத்துக்கொள்ளலாம்,எல்லாப் பொரியலுக்கும் உபயோகப்படுத்தலாம்.)

சௌசௌ பொரியல் சற்றே மாறுபட்ட வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

Monday, December 8, 2014

கேழ்வரகு (Finger Millet) லட்டு



தேவையானவை:                    

கேழ்வரகு மாவு 2 கப்
உப்பு ஒரு சிட்டிகை
----
வேர்க்கடலை 1 கப்
கருப்பு எள் 1 கப்
வெல்லம் 1 1/2 கப் (பொடித்தது)
நெய் 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கேழ்வரகு மாவை சிட்டிகை உப்பு தேவையான தண்ணீருடன் நன்றாக சப்பாத்தி மாவு போல
பிசைந்துகொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து பிசைந்த மாவை உருண்டைகளாக்கி
கையால் அடை போல தட்டி இருபுறமும் எண்ணைய் விட்டு சிவந்ததும் எடுக்கவும்.
அடை கொஞ்சம் ஆறியவுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு பொடி பண்ணவும்.
தனியே எடுத்து வைக்கவும்.

வேர்க்கடலையையும் கறுப்பு எள்ளையும் தனித்தனியாக வாணலியில் எண்ணைய் விடாமல் வறுத்து
வெல்லத்துடன் சேர்த்து மிக்சியில் பொடி பண்ணவும்..
இந்த பொடியுடன் கேழ்வரகு பொடியை சேர்க்கவும்.. சிறிது நெய் விட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
இது ஒரு வாரம் வரை கெடாது.

பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல சத்துள்ள சிற்றுண்டி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...