Sunday, September 29, 2013

சப்போட்டா ....பேரிச்சம்...டிலைட்...




தேவையானவை:

சப்போட்டா பழம் 3

பேரிச்சம்பழம் 4

பால் 1/2 கப்

ஏலக்காய் 2

பனங்கல்கண்டு பொடி 1/2 டீஸ்பூன்

தேன் 1 டீஸ்பூன்

-------

செய்முறை:

பேரிச்சம்பழத்தை உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்துவிட்டு கால் கப் தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

சப்போட்டா பழத்தின் தோலை நீக்கி உள்ளே இருக்கும் விதையை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

-------

ஊறவைத்த பேரிச்சம்பழம் (தண்ணீருடன்) பொடியாக நறுக்கிய சப்போட்டா பழம்,ஏலக்காய்,பனங்கல்கண்டு பொடி எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவேண்டும்.

பின்னர் பாலை சேர்த்து மீண்டும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவேண்டும்.

மிக்சியிலிருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து தேனைக் கலந்து fridge ல் ஒரு மணிநேரம் வைத்து எடுத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Tuesday, September 24, 2013

ராகி ஃப்ளேக்ஸ், ஃப்ருட்ஸ் சாலட்



தேவையானவை"

ராகி flakes 1 கப்                                          ராகி flakes

பால் 1 கப்
பாதாம் 5
வால்நட் 10
அத்திப்பழம் (fig) 1
வாழைப்பழம் 1
ஆப்பிள் 10 துண்டுகள்
கொய்யாப்பழம் 1
பொடித்த வெல்லம் 2 மேசைக்கரண்டி
-------
செய்முறை:


ராகி flakes ல் சிறிது தண்ணீர் தெளித்து microwave bowl ல் வைத்து இரண்டு நிமிடத்தில் எடுக்கவும்.நன்றாக வெந்திருக்கும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வெந்த ராகி flakes,பால்,பொடித்த வெல்லம்,பாதாம்,வால்நட்,நறுக்கிய எல்லா பழங்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
இது ஒரு சிறந்த காலை உணவாகும்.


Saturday, September 21, 2013

காளன்



தேவையானவை:
சேனைக்கிழங் கு      1 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
துருவிய தேங்காய் 3/4 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
மிளகுதூள் 1 தேக்கரண்டி
நெய் 1 தேக்கரண்டி
தயிர் 1 கப்
உப்பு தேவையானது
------------
தாளிக்க:
தேங்காய் எண்ணைய் 1 மேசைக்கரண்டி
கடுகு1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 2
பச்சைமிளகாய்2
கறிவேப்பிலை சிறிதளவு
--------
செய்முறை:

தேங்காய் துருவல் சீரகம் இரண்டையும் சிறிது தண்ணீர் தெளித்துவிழுது போல அரைத்துக்கொள்ளவும்.
வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
-----------
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரை கப் தண்ணீர் விட்டு ஒரு தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.
பின்னர் வடிகட்டி அந்த தண்ணீரை மீண்டும் பாத்திரத்தில் வைத்து அதனுடன் நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகள் .மஞ்சள் தூள்,தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
சேனைக்கிழங்கு சிறிது வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவல்,சீரக விழுதையும்,வெந்தய விழுதையும் நெய்யுடன் சேர்த்து சிறிது கொதிக்கவிடவும்.
பின்னர் தயிர் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவேண்டும்.(தயிர் சேர்த்த பின் கொதிக்கவைக்கக்கூடாது)
வாணலியில் தேங்காயெண்ணைய் வைத்து கடுகு,கிள்ளிய சிவப்பு மிளகாய்,குறுக்காக வெட்டிய பச்சைமிளகாய்,கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.  

Thursday, September 19, 2013

வாழைக்காய் வேர்க்கடலை பிரட்டல்



தேவையானவை:
வாழைக்காய் 2
வேர்க்கடலை 1/2 கப்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை ஒரு கொத்து
-----
செய்முறை:

வாழைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வேர்க்கடலையை  வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்
.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய வாழைக்காய் துண்டுகளை மஞ்சள்தூளுடன் சேர்த்து வதக்கவும்.வாழைக்காய் நன்கு வெந்ததும் உப்பு, மிளகாய் தூள் தூவி மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக முறுகலாக வந்ததும் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து பிரட்டி இறக்கவும்.

Friday, September 13, 2013

அடை பிரதமன் (ஓணம் ஸ்பெஷல் )



தேவையானவை:
பச்சரிசி 1/2 கப்
பால்  3 கப்
சர்க்கரை 3/4 கப்
வாழை இலை 2 ஏடு
ஏலத்தூள் 1 தேக்கரண்டி
முந்திரிபருப்பு 10
திராட்சை 5
நெய் 1 மேசைக்கரண்டி
--------
செய்முறை: (அடை செய்யும் முறை)
அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து நைசாக அரைத்து அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் எடுக்கவேண்டும்.அரைத்த மாவை வாழை இலை ஏடுகளில் தோசை போல வார்த்து இலையோடு சுருட்டி இட்லி தட்டில் பத்து நிமிடம் வேகவைக்கவேண்டும்.ஆறின பிறகு குளிர்ந்த நீரில் அடைகளை போட்டு எடுத்து வேண்டிய வடிவில் கட் பண்ணிக்கொள்ளலாம். இப்பொழுது ' அடை' ரெடி.
கடைகளில் தயார் நிலையில் 'அடை'யே கிடைக்கும்.

பாலை அடுப்பில் வைத்து நன்றாக சுண்டும் வரை காய்ச்சவேண்டும் (சற்றே பாலின் நிறம் மாறவேண்டும்). சுண்டிய பாலில் வெட்டிவைத்துள்ள அடைகளைப்போட்டு சர்க்கரை சேர்த்து கிளறவேண்டும்.ஏலப்பொடி சேர்க்கவேண்டும். நெய்யில் முந்திரி,திராட்சை வறுத்து சேர்க்கவேண்டும்.
-------
 பாலுக்கு பதில்  தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம். தேங்காய்ப்பால் என்றால்  வெல்லம் சேர்க்கவேண்டும்.
படம் வெல்லத்தால் செய்த அடை பிரதமன்


Saturday, September 7, 2013

கொழுக்கட்டை ( விநாயக சதூர்த்தி Special)




  விநாயக சதூர்த்திக்கு தேங்காய்,உளுந்து ஆகிய இரண்டு வகை கொழுக்கட்டைகள் செய்வது வழக்கம்.
இதற்கு மேல்மாவு இரண்டிற்கும் ஒன்று.

மேல்மாவு செய்வதற்கு தேவையானவை:

அரிசி மாவு 2 கப்
(பச்சரிசி 3 கப்பை தண்ணீரில் இரண்டு மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி நிழலில் துணியை போட்டு உலர்த்தி எடுக்கவும்.
பின்னர் mixie ல் அரைத்து சலிக்கவும். )சலித்தமாவு 2 கப் இருக்கவேண்டும்.
தண்ணீர் 4 கப்
நல்லெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு 1/2 டீஸ்பூன்

செய்முறை:
* அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் 4 கப் தண்ணீர் விட்டு அதனுடன் எண்ணைய்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்தவுடன் சலித்துவைத்துள்ள அரிசிமாவை பரவலாக தூவிக்கொண்டே கிளறவேண்டும்.கட்டிதட்டாமல் நன்றாக கிளறி
ஒரு தட்டில் எடுத்து வைத்து அதன் மேல் ஈரத்துணியால் மூடவேண்டும்.இப்போழுது மேல்மாவு ரெடி.

தேங்காய் பூரணம் செய்வதற்கு தேவையானவை:

துருவிய தேங்காய் 1 கப்
துருவிய வெல்லம் 1 கப்
நல்லெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன்




செய்முறை:
1.அடுப்பில் வாணலியை வைத்து அதில் துருவிய தேங்காய்,வெல்லம் சேர்த்து கிளறவேண்டும்.
(தண்ணீர் விடக்கூடாது)ஈரப்பசை இல்லாமல் "பிசுக்" எனக்கையில் ஒட்டிக்கொள்ளும் பதத்தில் இறக்கி
ஏலக்காய் பொடியை தூவவேண்டும். தேங்காய் பூரணம் ரெடி.
2. ரெடியாக வைத்துள்ள மேல்மாவை நல்லெண்ணையை கையில் தடவிக்கொண்டு பிசைந்து உருண்டைகளாக
உருட்டிக்கொள்ளவும்.
3.ஒரு உருண்டையை கையில் எடுத்து கிண்ணம் போல் செய்து நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடவும்.
பின்னர் இட்லி தட்டில் ஆவியில் வைத்து 7 நிமிடத்தில் எடுக்கவும்.

உளுத்தம்பூரணம் செய்வதற்கு தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 2
சிவப்பு மிளகாய் 2
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு





செய்முறை:

1.இரண்டு பருப்புகளையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி மற்றவைகளுடன் சேர்த்து நைசாக
அரைத்துக்கொள்ளவும்.
2.அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் வைத்து 10 நிமிடம் கழித்து எடுக்கவும்.
3.ஆவியில் வைத்ததை எடுத்து உதிர்த்துக்கொண்டு வாணலியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து
அதனுடன் சேர்த்து கிளறி எடுத்து வைக்கவும்.
4.ரெடியாக வைத்துள்ள மேல்மாவினை உருண்டைகளாக்கி ஒரு உருண்டையை உள்ளங்கையில் வைத்து
பட்டையாக தட்டி அதனுள் உளுந்து பூரணத்தை வைத்து சோமாசி போல் மூடவும்.
பின்னர் இட்லிதட்டில் 7 நிமிடம் வைத்து எடுக்கவும்.

Thursday, September 5, 2013

பீன்ஸ் கொள்ளு பொரியல்



தேவையானவை:

பொடியாக நறுக்கிய பீன்ஸ் 1 கப்
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
------
கொள்ளு 1/4 கப்
கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
பெருங்காயம் 1 துண்டு
-------
உப்பு,எண்ணெய்   தேவையானது
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
-----
செய்முறை:


கொள்ளை முதல் நாள் இரவே தண்ணீரில் உறவைக்கவேண்டும்.
கடலைபருப்பு,பொட்டுக்கடலை இரண்டையும் அரை மணி நேரம் ஊறவைத்தால் போதும்.
ஊறிய கொள்ளை வடிகட்டி அதனுடன் ஊறவைத்த கடலைபருப்பு,பொட்டுக்கடலை,மிளகாய் வற்றல்,பெருங்காயம்
தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து அரைக்கவேண்டும்.
அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
பின் அதை தட்டில் போட்டு உதிர்க்கவும். கட்டியாக இருந்தால் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.

பீன்ஸை Microwave bowl ல் வைத்து Microwave "H" ல் ஐந்து நிமிடம் வைத்து எடுக்கவும்.
வெளியே எடுத்து அதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வேகவைத்த பீன்ஸ் யை சேர்க்கவும்.
அதனுடன் உதிர்த்த கொள்ளு பருப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.

பீன்ஸ் கொள்ளு பொரியலை சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...