தேவையானவை:
வாழைக்காய் 2
வேர்க்கடலை 1/2 கப்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை ஒரு கொத்து
-----
செய்முறை:
வாழைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வேர்க்கடலையை வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்
.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய வாழைக்காய் துண்டுகளை மஞ்சள்தூளுடன் சேர்த்து வதக்கவும்.வாழைக்காய் நன்கு வெந்ததும் உப்பு, மிளகாய் தூள் தூவி மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக முறுகலாக வந்ததும் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து பிரட்டி இறக்கவும்.
9 comments:
சூப்பர்... செய்து பார்ப்போம்... நன்றி...
மிகவும் நன்றாக இருக்கிறது.
செய்து பார்க்கிறேன்.
நன்றி.
செய்முறை மிக எளிதாக இருக்கிறதே செய்து சாப்பிட வேண்டியதுதான். செய்முறை குறிப்புக்கு நன்றி
@ திண்டுக்கல் தனபாலன்.
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
@ கோமதி அரசு.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கோமதி அரசு.
அருமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன்.
செய்துபாருங்கள்.வருகைக்கு நன்றி
ராமலக்ஷ்மி.
@ Viya Pathy
நன்றி Viya Pathy.
viththiasamana recipe.
Post a Comment