தேவையானவை:
சேனைக்கிழங் கு 1 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
துருவிய தேங்காய் 3/4 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
மிளகுதூள் 1 தேக்கரண்டி
நெய் 1 தேக்கரண்டி
தயிர் 1 கப்
உப்பு தேவையானது
------------
தாளிக்க:
தேங்காய் எண்ணைய் 1 மேசைக்கரண்டி
கடுகு1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் 2
பச்சைமிளகாய்2
கறிவேப்பிலை சிறிதளவு
--------
செய்முறை:
தேங்காய் துருவல் சீரகம் இரண்டையும் சிறிது தண்ணீர் தெளித்துவிழுது போல அரைத்துக்கொள்ளவும்.
வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
-----------
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரை கப் தண்ணீர் விட்டு ஒரு தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.
பின்னர் வடிகட்டி அந்த தண்ணீரை மீண்டும் பாத்திரத்தில் வைத்து அதனுடன் நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகள் .மஞ்சள் தூள்,தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
சேனைக்கிழங்கு சிறிது வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவல்,சீரக விழுதையும்,வெந்தய விழுதையும் நெய்யுடன் சேர்த்து சிறிது கொதிக்கவிடவும்.
பின்னர் தயிர் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவேண்டும்.(தயிர் சேர்த்த பின் கொதிக்கவைக்கக்கூடாது)
வாணலியில் தேங்காயெண்ணைய் வைத்து கடுகு,கிள்ளிய சிவப்பு மிளகாய்,குறுக்காக வெட்டிய பச்சைமிளகாய்,கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
11 comments:
இது போல் செய்ததில்லை... நன்றி...
சுவையான காளன். செய்து பார்க்கிறேன்.
காளன் செய்து பார்த்தது இல்லை.
எங்கள் ஊரில் கிடைக்காது.கிடைக்கும் போது செய்துப் பார்க்கிறேன்.
@ திண்டுக்கல் தனபாலன்.
செய்துபாருங்கள்.நன்றாக இருக்கும். நன்றி திண்டுக்கல் தனபாலன்.
@ கோவை2தில்லி
செய்துபாருங்கள்.நன்றி Aadhi.
கேரள உணவா?படம் போட்டு இருக்கலாமே?
@ கோமதி அரசு
வருகைக்கு நன்றி கோமதி அரசு.
@ ஸாதிகா.
படம் போட்டிருக்கேன்.வருகைக்கு நன்றி ஸாதிகா.
தலைப்பைப் பார்த்ததும் காளான் என்று நினைத்தேன். காளன் செய்முறையைப் படித்தேன். செய்து பார்க்கிறேன்.நன்றி
செய்துபாருங்கள்.நன்றாக இருக்கும். நன்றி Viya Pathy.
@ திண்டுக்கல் தனபாலன்.
நன்றி திண்டுக்கல் தனபாலன்.
Post a Comment