தேவையானவை:
பச்சரிசி 1/2 கப்
பால் 3 கப்
சர்க்கரை 3/4 கப்
வாழை இலை 2 ஏடு
ஏலத்தூள் 1 தேக்கரண்டி
முந்திரிபருப்பு 10
திராட்சை 5
நெய் 1 மேசைக்கரண்டி
--------
செய்முறை: (அடை செய்யும் முறை)
அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து நைசாக அரைத்து அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் எடுக்கவேண்டும்.அரைத்த மாவை வாழை இலை ஏடுகளில் தோசை போல வார்த்து இலையோடு சுருட்டி இட்லி தட்டில் பத்து நிமிடம் வேகவைக்கவேண்டும்.ஆறின பிறகு குளிர்ந்த நீரில் அடைகளை போட்டு எடுத்து வேண்டிய வடிவில் கட் பண்ணிக்கொள்ளலாம். இப்பொழுது ' அடை' ரெடி.
கடைகளில் தயார் நிலையில் 'அடை'யே கிடைக்கும்.
பாலை அடுப்பில் வைத்து நன்றாக சுண்டும் வரை காய்ச்சவேண்டும் (சற்றே பாலின் நிறம் மாறவேண்டும்). சுண்டிய பாலில் வெட்டிவைத்துள்ள அடைகளைப்போட்டு சர்க்கரை சேர்த்து கிளறவேண்டும்.ஏலப்பொடி சேர்க்கவேண்டும். நெய்யில் முந்திரி,திராட்சை வறுத்து சேர்க்கவேண்டும்.
-------
பாலுக்கு பதில் தேங்காய்ப்பாலும் சேர்க்கலாம். தேங்காய்ப்பால் என்றால் வெல்லம் சேர்க்கவேண்டும்.
படம் வெல்லத்தால் செய்த அடை பிரதமன்
8 comments:
எங்கள் வீடுகளில் கல்யாணம் விருந்தினர் வருகைக்கு அடை பிரதமன் உண்டு.
உங்கள் அடை பிரதமன் நல்ல சுவை.
வருகைக்கு நன்றி கோமதி அரசு.
சுவையான குறிப்பு.
எனக்கு மிகவும் பிடித்த அடை பிரதமன். இன்ஸ்டண்ட் அடை பிரதமன் தான் வாங்கி செய்துள்ளேன். பகிர்வுக்கு நன்றி.
@ ராமலக்ஷ்மி
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி
@ கோவை2தில்லி
வருகைக்கு நன்றி Aadhi.
Super recipe.
Thanks Saratha.
Post a Comment