Saturday, November 29, 2008

வாழைப்பூ பருப்பு உசிலி




தேவையானவை:

வாழைப்பூ 1
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல் 4
பெருங்காயம் சிறு துண்டு
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது.

செய்முறை:

வாழைப்பூவை நன்கு ஆய்ந்து பொடியாக நறுக்கி தண்ணீரில் சிறிது மோர் விட்டு (கருகாமலிருக்க) போடவேண்டும்.
அத்துடன் மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வடிகட்டவும்.
துவரம்பருப்பு,கடலைபருப்பு,மிளகாய்வற்றல்,பெருங்காயம்,நான்கையும் ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து
வடிகட்டி உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடம் வேகவைக்கவும்.
ஆவியில் வேகவைத்த பருப்புகளை நன்கு உதிர்த்து அத்துடன் வடிகட்டிய வாழைப்பூவை கலக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு வாழைப்பூ பருப்பு கலவையை போட்டு நன்றாக கிளறவும்.
உதிரி உதிரியாக வரும்.
இந்த உசிலியை சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது பொரியலாகவும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஹோட்டல் சட்னி



தேவையானவை:

வெங்காயம் 1
தக்காளி 1
பூண்டு 4 பல்
பச்சைமிளகாய் 4
கொத்தமல்லி தழை 1 கப் (ஆய்ந்தது)
உப்பு,எண்ணைய் தேவையானவை

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை

செய்முறை:

கொத்தமல்லித்தழையை வென்னீரில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து பிழிந்து எடுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து வெங்காயம்,பூண்டு,தக்காளி,பச்சைமிளகாய் நான்கையும் நன்கு வதக்கவும்.
ஆறினவுடன் கொத்தமல்லித்தழை,உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
இந்த சட்னி இட்லி,தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
ஓட்டலில் இட்லிக்கு கொடுக்கும் சட்னிகளில் இதுவும் ஒன்று

Saturday, November 15, 2008

வாழைக்காய் பொடிமாஸ்




தேவையானவை:

வாழைக்காய் 2 (முற்றினது)
இஞ்சி(துருவியது) 1/4 கப்
தேங்காய் துருவல் 1/4 கப்
மிளகாய் வற்றல் 4
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கடுகு 1 டீஎஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
எலுமிச்சம்பழ சாறு 2 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

வாழைக்காயை மூன்றாக கட் பண்ணி குக்கரில் வைத்து வேகவைக்கவும்.(மூன்று விசில்)
இஞ்சியை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.குக்கரில் இருந்து வாழைக்காயை எடுத்து தோலுரித்து
துருவிக்கொள்ளவும்.(தேங்காய் துருவல் போல்).
ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய்வற்றல்,கறிவேப்பிலை
தாளித்து அதனுடன் துருவிய வாழைக்காய்,துருவிய இஞ்சி,தேங்காய் துருவல், மஞ்சள் தூள்,உப்பு,பெருங்காயத்தூள்
சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.அடுப்பிலிருந்து இறக்கியவுடன் எலுமிச்சம்பழ சாறு பிழியவும்.

Monday, November 3, 2008

அரைத்துவிட்ட சாம்பார் (புது விதம்)

தேவையானவை:

முருங்கைக்காய் 2
சின்ன வெங்காயம் 10
துவரம்பருப்பு 1 கப்
புளி ஒரு எலுமிச்சை அளவு
எண்ணைய்,உப்பு தேவையானது

தாளிக்க:
கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை சிறிதளவு.

அரைக்க:

மிளகாய்வற்றல் 3
கடலைபருப்பு 1 டேபிள்ஸ்பூன்
தனியா 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
பெருங்காயம் சிறிது
தேங்காய் துருவல் அரை கப்
(எல்லாவற்றையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்து) அதனுடன்
சின்ன வெங்காயம் 4
தக்காளி 1
பட்டை ஒரு துண்டு
சாம்பார் பொடி 2 டீஸ்பூன்

சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

செய்முறை:

துவரம்பருப்பை குக்கரில் இரண்டு கப் தண்ணீர் வைத்து (நான்கு விசில்) வேகவைக்கவும்.
முருங்கைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி சின்ன வெங்காயத்தை உரித்து வைக்கவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் நன்றாக கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

சாம்பார் செய்யும் பாத்திரத்தை எடுத்து அதில் சிறிது எண்ணய் விட்டு கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை
தாளித்து காய்கறிகளை வதக்கவும்.வதங்கியவுடன் வெந்த பருப்பு, அரைத்த விழுது,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

(தேவையானால் வெந்த பருப்பை mixie ல் ஒரு சுற்று அரைக்கவும் )
சிறிது கொதித்த வுடன் புளித்தண்ணீரை விடவும்.நன்கு கிளறிவிடவும்.எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன்
இற்க்கவும்.
இந்த சாம்பார் ஒரு வித்தியாசமான மணத்துடன் சுவையாக இருக்கும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...