Wednesday, June 27, 2012

பீன்ஸ் கொள்ளு பொரியல்




தேவையானவை:

பொடியாக நறுக்கிய பீன்ஸ் 1 கப்
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
------
கொள்ளு 1/4 கப்
கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
பெருங்காயம் 1 துண்டு
-------
உப்பு,எண்ணெய்   தேவையானது
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
-----
செய்முறை:

கொள்ளை முதல் நாள் இரவே தண்ணீரில் உறவைக்கவேண்டும்.
கடலைபருப்பு,பொட்டுக்கடலை இரண்டையும் அரை மணி நேரம் ஊறவைத்தால் போதும்.
ஊறிய கொள்ளை வடிகட்டி அதனுடன் ஊறவைத்த கடலைபருப்பு,பொட்டுக்கடலை,மிளகாய் வற்றல்,பெருங்காயம்
தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து அரைக்கவேண்டும்.
அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
பின் அதை தட்டில் போட்டு உதிர்க்கவும். கட்டியாக இருந்தால் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.

பீன்ஸை Microwave bowl ல் வைத்து Microwave "H" ல் ஐந்து நிமிடம் வைத்து எடுக்கவும்.
வெளியே எடுத்து அதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வேகவைத்த பீன்ஸ் யை சேர்க்கவும்.
அதனுடன் உதிர்த்த கொள்ளு பருப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.

பீன்ஸ் கொள்ளு பொரியலை சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Monday, June 25, 2012

GHEE ரைஸ்




தேவையானவை:

பச்சரிசி 1 கப்
தேங்காய் பால் 1 கப்
தண்ணீர் 1 கப்
வெங்காயம் 1
நெய் 1 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு 5
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
லவங்கம் 2
ஏலக்காய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
--------
செய்முறை:

அரிசியை நன்றாக களைந்துவிட்டு வடிகட்டி வைக்கவேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து நெய் சேர்த்து வடிகட்டிய அரிசியை நன்றாக பிரட்டவேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
பட்டை,லவங்கம்.ஏலக்காய்,கறிவேப்பிலை நான்கையும் எண்ணையில் வறுக்க வேண்டும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காய்த்தை சேர்த்து வதக்கவேண்டும்.

குக்கருக்குள் வைக்கும் பாத்திரத்தை எடுத்து அதில் பிரட்டிய அரிசி,வதக்கிய வெங்காயம்,பட்டை,லவங்கம்,ஏலக்காய்
தேங்காய் பால்,தண்ணீர்,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறி இரண்டு விசில் வந்ததும் இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.
குக்கரில் இருந்து எடுத்தால் சாதம் உதிரியாக இருக்கும்.
பின்னர் வறுத்த முந்திரிபருப்பை சேர்க்கலாம்.

வெஜிடபிள் குருமா வுடன் சேர்ந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Tuesday, June 19, 2012

உளுத்தங்கஞ்சி




தேவையானவை:

உடைத்த உளுந்து 1 கப்
அரிசிக்குருணை 1 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
பூண்டு 4 பல்
தேங்காய் பால் 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------

செய்முறை:

உடைத்த உளுந்து,அரிசிக்குருணை,வெந்தயம் மூன்றையும் தனித்தனியாக ஒரு மணி நேரம் தண்ணீரில் மூழ்குமளவுக்கு வைத்து ஊறவைக்கவேண்டும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த மூன்றையும் சேர்த்து மேலும் ஒரு கப் தண்ணீருடன் குக்கரில் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் வைத்து சீரகம் மிளகு,பூண்டு,கறிவேப்பிலை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த உளுந்து அரிசி குருணை
கலவையை உப்புடன் சேர்த்து (தேவையானால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்) கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்தவுடன் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவேண்டும்.

உளுத்தங்கஞ்சி உடல் களைப்பை போக்கும்.

Friday, June 15, 2012

எலுமிச்சை இளநீர்




தேவையானது:

இளநீர் 2 கப்

எலுமிச்சம்பழம் 1
துளசி இலை 1/4 கப்
தேன் 2 தேக்கரண்டி
இளநீர் வழுக்கை 1/2 கப்
-------

செய்முறை:


இளநீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி எலுமிச்சம்பழத்தை அதில் பிழியவேண்டும்.
துளசி இலையை இடித்து போட்டு அதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்..
இளநீர் வழுக்கையை பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும்.
துளசி இலைக்கு பதில் புதினா இலையையும் சேர்க்கலாம்.

எலுமிச்சை இளநீர் வெய்யிலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது.

Thursday, June 7, 2012

பிரதமன்



தேவையானவை:
ஜவ்வரிசி 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
பொடித்த வெல்லம் 1 கப்
தேங்காய் பால் 1 1/2 கப்
ஏலக்காய் தூள் 1/2 தேக்கரண்டி
முந்திரி 5
பாதாம் பருப்பு 5
வறுத்த வேர்கடலை 5
வறுத்த தேங்காய் துண்டுகள் 10
நெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கடலைப்பருப்பை சிறிது தண்ணீருடன் சேர்த்து நன்கு வேகவைத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஜவ்வரிசியை சிறிது தண்ணீருடன் சேர்த்து வேகவைக்கவேண்டும்.
ஜவ்வரிசி நன்கு வெந்ததும் வேகவைத்த கடலைப்பருப்பை இதனுடன் சேர்க்கவேண்டும்.
பின்னர் தேங்காய் பாலை சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

மற்றொரு அடுப்பில் ஒரு கடாயில் அரை கப் தண்ணீரில் பொடித்த வெல்லத்தை சேர்த்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி
ஜவ்வரிசி கடலைப் பருப்பு கலவையில் கலந்து கொதிக்கவைக்கவும்.
தேங்காய் துண்டுகளை முதலில் நெய்யில் வறுத்து சேர்க்கவேண்டும்.
பின்னர் முந்திரி பாதாம்,வேர்க்கடலை மூன்றையும் ஒன்றிரண்டாக உடைத்து நெய்யில் வறுத்து ஏலக்காய் தூளையும் சேர்க்க
சுவையான "பிரதமன் " ரெடி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...