தேவையானவை:
ஜவ்வரிசி 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
பொடித்த வெல்லம் 1 கப்
தேங்காய் பால் 1 1/2 கப்
ஏலக்காய் தூள் 1/2 தேக்கரண்டி
முந்திரி 5
பாதாம் பருப்பு 5
வறுத்த வேர்கடலை 5
வறுத்த தேங்காய் துண்டுகள் 10
நெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கடலைப்பருப்பை சிறிது தண்ணீருடன் சேர்த்து நன்கு வேகவைத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஜவ்வரிசியை சிறிது தண்ணீருடன் சேர்த்து வேகவைக்கவேண்டும்.
ஜவ்வரிசி நன்கு வெந்ததும் வேகவைத்த கடலைப்பருப்பை இதனுடன் சேர்க்கவேண்டும்.
பின்னர் தேங்காய் பாலை சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
மற்றொரு அடுப்பில் ஒரு கடாயில் அரை கப் தண்ணீரில் பொடித்த வெல்லத்தை சேர்த்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி
ஜவ்வரிசி கடலைப் பருப்பு கலவையில் கலந்து கொதிக்கவைக்கவும்.
தேங்காய் துண்டுகளை முதலில் நெய்யில் வறுத்து சேர்க்கவேண்டும்.
பின்னர் முந்திரி பாதாம்,வேர்க்கடலை மூன்றையும் ஒன்றிரண்டாக உடைத்து நெய்யில் வறுத்து ஏலக்காய் தூளையும் சேர்க்க
சுவையான "பிரதமன் " ரெடி.
10 comments:
பிடித்தமான ஒன்று. அருமையான குறிப்புக்கு நன்றி.
சக்க பிரதமன் கேள்விப்பட்டிருக்கிறேன்.இது புதுசா இருக்கு..நான் ஜவ்வரிசி
போடாமல் பலாப்பழம் நறுக்கிப் போட்டு இதே போல செய்வேன். இதுவும் நல்லா இருக்கு..:)
எங்கூர்ல பலாப்பழ சீசன் இல்லாத சமயங்களில் கல்யாண விருந்தில் இதான் இருக்கும்.
அருமையான ஐட்டம்.. பகிர்வுக்கு நன்றி.
//of 3
ராமலக்ஷ்மி said...
பிடித்தமான ஒன்று. அருமையான குறிப்புக்கு நன்றி.//
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
//
ராதா ராணி said...
சக்க பிரதமன் கேள்விப்பட்டிருக்கிறேன்.இது புதுசா இருக்கு..நான் ஜவ்வரிசி
போடாமல் பலாப்பழம் நறுக்கிப் போட்டு இதே போல செய்வேன். இதுவும் நல்லா இருக்கு..://
வருகைக்கு நன்றி ராதா ராணி.
சாப்பிட்டதோடு சரி.
ரெசிபி எளிமையா இருக்கு - முயற்சி பண்றேன்.
//அமைதிச்சாரல் said...
எங்கூர்ல பலாப்பழ சீசன் இல்லாத சமயங்களில் கல்யாண விருந்தில் இதான் இருக்கும்.
அருமையான ஐட்டம்.. பகிர்வுக்கு நன்றி.//
நன்றி. அமைதிச்சாரல்.
// அப்பாதுரை said...
சாப்பிட்டதோடு சரி.
ரெசிபி எளிமையா இருக்கு - முயற்சி பண்றேன்.
செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி அப்பாதுரை.
நிறைய பருப்பு வகைகள் எல்லாம் போட்டு அமர்க்களமாக இருந்தது.
வருகைக்கு நன்றி ஸாதிகா.
Post a Comment