Thursday, August 29, 2013

கார்ன் ரவை ( Corn Rava) பிஸிபேளாபாத்



தேவையானவை:                       கார்ன் ரவை
                        
  
 கார்ன் ரவை 1 கப்

துவரம்பருப்பு 1/2 கப்

மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்

தண்ணீர் 7 கப்

புளி ஒரு எலுமிச்சை அளவு

நெய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

------

வெங்காயம் 1/2 கப் (பொடியாக நறுக்கியது

காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

பட்டாணி 1/2 கப்

-----

பொடி பண்ண:

கடலைபருப்பு 1 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

தனியா 2 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் 1/2 டீஸ்பூன்

மிளகு 5

வற்றல் மிளகாய் 5

பெருங்காயம் 1 துண்டு

கிராம்பு 2

பட்டை 1 துண்டு

துருவிய தேங்காய் 1/2 கப்
                                                       வறுத்து பொடி பண்ணியது


-------

தாளிக்க:

கறிவேப்பிலை சிறிதளவு

மிளகாய் வற்றல் 2

முந்திரிபருப்பு 10

நிலக்கடலை 10 (உடைத்தது)

-----

செய்முறை:                கார்ன் ரவை  பிஸிபேளாபாத்




ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் அடி பாத்திரத்தில்  கார்ன் ரவையை 2 1/2 கப் தண்ணீருடனும் மேல் தட்டில் துவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து

ஒரு கப் தண்ணீருடன் வைத்து 6 விசில் விட்டு குக்கரை அணைக்கவேண்டும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.

வெங்காயத்தை முதலில் பொன்னிறமாக வதக்கி  அதனுடன் காரட் பட்டாணி சிறிது உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

-----

வேகவைத்த  கார்ன் ரவை,பருப்பு இரண்டையும் குக்கரிலிருந்து எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து  அதே குக்கரில்  மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

அதில் வதக்கின காய்கறிகள்,அரைத்து வைத்துள்ள பொடி,தேவையான உப்பு சேர்க்கவும்.

 கார்ன் ரவை,பருப்பு,காய்கறிகள்,பொடி எல்லாம் நன்றாக ஒன்று சேர்ந்ததும் புளித்தண்ணீர் சேர்த்து மீதமுள்ள தண்ணீர் (1 1/2 கப்)

சேர்த்து அடுப்பை ஸ்லிம்மில் வைத்து நன்றாக கொதிக்கவிடவும்..

முந்திரிபருப்பு,நிலக்கடலை,கறிவேப்பிலை,வற்றல் மிளகாய் எல்லாவற்றையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

Sunday, August 25, 2013

புரோக்கோலி (Broccoli) உசிலி

 




தேவையானவை:                                புரோக்கோலி

                                                                 

புரோக்கோலி  2 கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள்  1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1/2 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல் 4
பெருங்காயம் 1 துண்டு
=======
உப்பு,எண்ணைய் தேவையானது
---
தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு .கறிவேப்பிலை மூன்றும்சிறிதளவு

செய்முறை:



 புரோக்கோலியை  பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.அல்லது Blender ல் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.துவரம்

பருப்பு,கடலைபருப்பு,மிளகாய்வற்றல்,பெருங்காயம் நான்கையும் ஒரு மணிநேரம் தண்ணீரில்

ஊறவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடம் வேகவைக்கவும்.

ஆவியில் வேகவைத்த பருப்புகளை நன்கு உதிர்க்கவும்.(மிக்சியில் ஒரு சுற்று சுற்றினால் உதிரியாக வரும்)

வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு .கறிவேப்பிலை  தாளித்து பொடியாக நறுக்கிய புரோக்கொலியை

 சேர்த்து வதக்கவும்..உப்பு,மஞ்சள்தூள் சேர்க்கவும்.அதிகம் வதக்க வேண்டாம்.புரோக்கோலி crunchy ஆக இருந்தால் தான் சுவையாக இருக்கும்.
  பின்னர் உதிர்த்த பருப்புகளை சேர்த்து சிறிது எண்ணைய் விட்டு நன்றாக கிளறவும்.
உதிரி உதிரியாக வரும்.கடைசியில் தேங்காய் துருவலை சிறிது வறுத்து சேர்க்கவேண்டும்.

Thursday, August 15, 2013

பாதாம்..வால்நட் பர்ஃபி


தேவையானவை:
பாதாம் பருப்பு 1 கப்
வால்நட்       1/2 கப்
சர்க்கரை 1 1/4 கப்
பால் 1/4 கப்
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா 1 சிட்டிகை
------
செய்முறை:

பாதாம் பருப்பையும் வால்நட்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி பாலுடன் சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த விழுது,சர்க்கரை,வெண்ணெய்,ஏலத்தூள்,ஆப்பசோடா எல்லாவற்றையும் சேர்த்து கலந்து அப்படியே அடுப்பில் வைத்து கிளறவேண்டும்.

15 நிமிடங்களில்வாணலியில் ஒட்டாமல் பூத்து வரும் போது அடுப்பை அணைத்து ரெடியாக உள்ள தட்டில் கொட்டவேண்டும்.

பின்னர் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளலாம்.

Monday, August 12, 2013

தனியா சட்னி



தேவையானவை:
தனியா 1/2 கப்
மிளகாய் வற்றல் 3
பூண்டு 3 பல்
புளி சிறிதளவு
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
----
செய்முறை:

தனியாவை எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
மிளகாய் வற்றல்,பூண்டு,புளி மூன்றையும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும்.
அதே வாணலியில் தேங்காய் துருவல்,கறிவேப்பிலை இரண்டையும் ஒரு பிரட்டு பிரட்டினால் போதும்.
எல்லாவற்றையும் தேவையான உப்புடன் சேர்த்து அரைக்கவும்.
தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.
தனியா சட்னியை நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தோடு சாப்பிடலாம்.
இட்லி,தோசைக்கும்  சிறந்த  side dish ஆகும்.

Saturday, August 3, 2013

தினை இட்லி


தேவையானவை:
தினை 3 கப்
உளுத்தம்பருப்பு 3/4 கப்
அவல் 1/4 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
----
செய்முறை:

தினையை தனியாகவும்.உளுத்தம்பருப்பு வெந்தயம் இரண்டையும் சேர்த்தும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
அவலை அரை மணிநேரம் ஊறவைத்தால் போதும்.
உளுத்தம்பருப்பு,வெந்தயம்,அவல் மூன்றையும் சேர்த்து நன்றாக நைசாக அரைக்கவேண்டும்.
தினையை தனியாக அரைத்து அரைத்து வைத்துள்ள உளுத்தம்பருப்பு,வெந்தயத்துடன் தேவையான உப்பு சேர்த்து கலக்கவேண்டும்.
ஆறு மணிநேரம் கழித்து மாவு புளித்துவிடும்.பின்னர் இட்லியாக வார்க்கலாம்

தினையில் புரோட்டீன்,நார்சத்து உள்ளது.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...